திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொற்சுண்ணம் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தினை நாம் இடிப் போமாக என்பதாம். வையகமெல்லாம் உரலதாக என்றது, உரலின்கண் பூமிதேவி பூசிக்கப்படும் முறைமை பற்றியாகும். மாமேருவென்னும் உலக்கை யென்றது, மேருமலைத்தெய்வம் பூசிக்கப்பட்ட உலக்கையென்ற றவாறு. நாட்டுதல் - உரலினிடத்து எடுத்து நிறுத்துதல். இறைவனுக்கு நடத் தப்படும் மகோற்சவத்தில் தீர்த்தோற்சவம் ஐந்தொழில்களில் ஒன் றாகிய வீடு பேறு அருளுதலைக் குறித்ததாகலின் அதற்கு இயைய"பாச வினையைப் பறித்து நின்று" (பொற். 4) என முன்பு கூறப்பட்டது; ஈண்டு "மெய்யெனு மஞ்சள் நிறைய அட்டி" என உரலினுள் உடம் பாகிய மஞ்சளை நிறைய இட்டு எனக் கூறப்படுகின்றது. இவற்றால் ஆணவ மலநீக்கமும் கன்ம மலநீக்கமும் மாயா மலநீக்கமும் கூறப்படு கின்றன.மாயா மலத்தில் ஒன்றாகிய மெய் (தனு) கூறப்படவே கரண புவன போகங்களும் அடங்கும். தனுகரணபுவன போகங்களை ஒடுக் கிக் காரண தேகத்தை அடைந்த உயிரே வீடு பேற்றினை அடையும் முறைமை இதனால் அறியப்படும். அட்டுதல் - இடுதல். "அளி நீடள கத்தினட்டிய தாதும்" (திருக்கோவை 122) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க. sorTOp 643 செய்ய - செம்மையுடைய வீடு பேற்றினைத் தரத்தக்க என்றபடி. இனி, சிவந்த எனினும் அமையும்; ''சிற்றம்பலமுடையான் சிவந்த வந் தாள்" கோவை 361) என்பது காண்க. செம்பொன் உலக்கை என்றது செம்பொன்மயமான மேருவின் தெய்வம் பூசிக்கப்பட்ட உலக்கைஎன்ற வாறு. வலக்கைபற்றி என்பது உலக்கையை வலக்கையினாற் பற்றி இடிக்கவேண்டும் என்னும் முறைமை பற்றியாகும். வலக்கை பற்றி எனக்கூறியது தலைமைபற்றியாகும். இடக்கை பற்றுதலும் கொள்ளப் படும். ஆட்கொண்டமையின் "ஐயன்" என்றார். வாழ் நன் வாணன் என மருவிற்று. உரலதாக உலக்கை நாட்டி மஞ்சள் அட்டிப் பாடிப்பற்றி நாம் இடித்தும் என வினைமுடிபு செய்க. இதன் கண், செய்ய திருவடி பாடிப்பாடி தில்லைவாணனுக்கே ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் என்பதனால் ஆனந்தமனோலயம் என் னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 9 204. முத்தணி கொங்கைக ளாடவாட மொய்குழல் வண்டின மாடவாடச் சித்தஞ் சிவனொடு மாடவாடச் செங்கயற் கண்பனி யாடவாடப்
திருப்பொற்சுண்ணம் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தினை நாம் இடிப் போமாக என்பதாம் . வையகமெல்லாம் உரலதாக என்றது உரலின்கண் பூமிதேவி பூசிக்கப்படும் முறைமை பற்றியாகும் . மாமேருவென்னும் உலக்கை யென்றது மேருமலைத்தெய்வம் பூசிக்கப்பட்ட உலக்கையென்ற றவாறு . நாட்டுதல் - உரலினிடத்து எடுத்து நிறுத்துதல் . இறைவனுக்கு நடத் தப்படும் மகோற்சவத்தில் தீர்த்தோற்சவம் ஐந்தொழில்களில் ஒன் றாகிய வீடு பேறு அருளுதலைக் குறித்ததாகலின் அதற்கு இயைய பாச வினையைப் பறித்து நின்று ( பொற் . 4 ) என முன்பு கூறப்பட்டது ; ஈண்டு மெய்யெனு மஞ்சள் நிறைய அட்டி என உரலினுள் உடம் பாகிய மஞ்சளை நிறைய இட்டு எனக் கூறப்படுகின்றது . இவற்றால் ஆணவ மலநீக்கமும் கன்ம மலநீக்கமும் மாயா மலநீக்கமும் கூறப்படு கின்றன.மாயா மலத்தில் ஒன்றாகிய மெய் ( தனு ) கூறப்படவே கரண புவன போகங்களும் அடங்கும் . தனுகரணபுவன போகங்களை ஒடுக் கிக் காரண தேகத்தை அடைந்த உயிரே வீடு பேற்றினை அடையும் முறைமை இதனால் அறியப்படும் . அட்டுதல் - இடுதல் . அளி நீடள கத்தினட்டிய தாதும் ( திருக்கோவை 122 ) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க . sorTOp 643 செய்ய - செம்மையுடைய வீடு பேற்றினைத் தரத்தக்க என்றபடி . இனி சிவந்த எனினும் அமையும் ; ' ' சிற்றம்பலமுடையான் சிவந்த வந் தாள் கோவை 361 ) என்பது காண்க . செம்பொன் உலக்கை என்றது செம்பொன்மயமான மேருவின் தெய்வம் பூசிக்கப்பட்ட உலக்கைஎன்ற வாறு . வலக்கைபற்றி என்பது உலக்கையை வலக்கையினாற் பற்றி இடிக்கவேண்டும் என்னும் முறைமை பற்றியாகும் . வலக்கை பற்றி எனக்கூறியது தலைமைபற்றியாகும் . இடக்கை பற்றுதலும் கொள்ளப் படும் . ஆட்கொண்டமையின் ஐயன் என்றார் . வாழ் நன் வாணன் என மருவிற்று . உரலதாக உலக்கை நாட்டி மஞ்சள் அட்டிப் பாடிப்பற்றி நாம் இடித்தும் என வினைமுடிபு செய்க . இதன் கண் செய்ய திருவடி பாடிப்பாடி தில்லைவாணனுக்கே ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் என்பதனால் ஆனந்தமனோலயம் என் னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 9 204 . முத்தணி கொங்கைக ளாடவாட மொய்குழல் வண்டின மாடவாடச் சித்தஞ் சிவனொடு மாடவாடச் செங்கயற் கண்பனி யாடவாடப்