திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

644 Dup திருவாசக ஆராய்ச்சியுரை பித்தெம்பி ரானொடு மாடவாடப் பிறவி பிறரொடு மாடவாட அத்தன் கருணையொ டாடவாட ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. ப-ரை. முத்து அணி கொங்கைகள் ஆட ஆட-முத்து வடங் கள் அணிந்த தனங்கள் அசைந்து ஆடவும், மொய்குழல் வண்டு இனம் ஆட ஆட - செறிந்த கூந்தலும் அதில் அணிந்த மாலையில் மொய்த்த வண்டினங்களும் அசைந்து ஆடவும், சித்தம் சிவனொடும் ஆட ஆட- எங்கள் உள்ளம் சிவபெருமானோடு இயைந்து மிகப் பயிலவும், செம் கயல் கண்பனி ஆட ஆட - செவ்விய கயலை ஒத்த கண்களினது ஆனந் தக் கண்ணீர் மிகப்பெருகவும், பித்து எம்பிரானொடும் ஆட ஆட - எமது அன்பாகிய பித்து எந்தலைவனொடு இயைந்து பற்றவும், பிறவி பிறரொடும் ஆட ஆட -பிறவித்துன்பங்கள் அவை நீக்கப்பெறும் பக்கமில்லாத ஏனையோர் பால் பயிலவும், அத்தன் கருணையொடு ஆட ஆட - எமது தந்தையாகிய சிவபெருமான் அருளொடு எம்மிடை பயிலவும், ஆட பொன் கண்ணம் நாம் இடித்தும் - அவ்விறைவன் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தை நாம் இடிப் போமாக. முத்தணிந்த கொங்கைகள் ஆடவும், மொய்குழலும் அதில் அணிந்த மாலையில் மொய்த்த வண்டினமும் ஆடவும், சித்தம் சிவ னொடு ஆடவும், கயல்போன்ற கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகவும், எமது அன்பாகிய பித்து எம்பெருமானொடு ஆடவும், பிறவித் துன்பங்கள் பிறரொடும் ஆடவும், எமது தந்தையாகிய சிவ பெருமான் அருளொடு எம்மிடைப் பயிலவும், அவ்விறைவன் தீர்த்த மாடும் பொருட்டுத் திருப்பொற்சுண்ணத்தினை இடிப்போமாக என்ப தாம். முத்து - முத்துவடம். கொங்கை ஆட - தனங்கள் சுண்ணமிடிக் குந்தோறும் அசைந்து ஆட. மொய்குழல் வண்டினம் - மொய்குழலும் வண்டினமும். மொய் - செறிந்த. மொய்பொழில் - செறிந்த பொழில் (கோவை. 14 உரை) ஆடுதல் - கண்ணமிடித்தலால் முதலடியில் ஆட ஆட என்பன அசைந்தாடுதற் பொருளில் வந்தன. ஏனைய அடியில் முறையே பயிலுதல், பெருகுதல், பற்றுதல், இயைதல், பயிலுதல் என்னும் பொருள்களில் வந்தன. மனம் சிவபெருமானையேயன்றிப் பிறிதொன்றினையும் நினையாமையின் "சித்தஞ் சிவனொடுமாடவாட" என்றார். an "மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது" 'உள்ளேன் பிறதெய்வம் உன்னை யல்லாது" 100 (போற்.74) (சத. 2)
644 Dup திருவாசக ஆராய்ச்சியுரை பித்தெம்பி ரானொடு மாடவாடப் பிறவி பிறரொடு மாடவாட அத்தன் கருணையொ டாடவாட ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே . - ரை . முத்து அணி கொங்கைகள் ஆட ஆட - முத்து வடங் கள் அணிந்த தனங்கள் அசைந்து ஆடவும் மொய்குழல் வண்டு இனம் ஆட ஆட - செறிந்த கூந்தலும் அதில் அணிந்த மாலையில் மொய்த்த வண்டினங்களும் அசைந்து ஆடவும் சித்தம் சிவனொடும் ஆட ஆட எங்கள் உள்ளம் சிவபெருமானோடு இயைந்து மிகப் பயிலவும் செம் கயல் கண்பனி ஆட ஆட - செவ்விய கயலை ஒத்த கண்களினது ஆனந் தக் கண்ணீர் மிகப்பெருகவும் பித்து எம்பிரானொடும் ஆட ஆட - எமது அன்பாகிய பித்து எந்தலைவனொடு இயைந்து பற்றவும் பிறவி பிறரொடும் ஆட ஆட -பிறவித்துன்பங்கள் அவை நீக்கப்பெறும் பக்கமில்லாத ஏனையோர் பால் பயிலவும் அத்தன் கருணையொடு ஆட ஆட - எமது தந்தையாகிய சிவபெருமான் அருளொடு எம்மிடை பயிலவும் ஆட பொன் கண்ணம் நாம் இடித்தும் - அவ்விறைவன் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தை நாம் இடிப் போமாக . முத்தணிந்த கொங்கைகள் ஆடவும் மொய்குழலும் அதில் அணிந்த மாலையில் மொய்த்த வண்டினமும் ஆடவும் சித்தம் சிவ னொடு ஆடவும் கயல்போன்ற கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகவும் எமது அன்பாகிய பித்து எம்பெருமானொடு ஆடவும் பிறவித் துன்பங்கள் பிறரொடும் ஆடவும் எமது தந்தையாகிய சிவ பெருமான் அருளொடு எம்மிடைப் பயிலவும் அவ்விறைவன் தீர்த்த மாடும் பொருட்டுத் திருப்பொற்சுண்ணத்தினை இடிப்போமாக என்ப தாம் . முத்து - முத்துவடம் . கொங்கை ஆட - தனங்கள் சுண்ணமிடிக் குந்தோறும் அசைந்து ஆட . மொய்குழல் வண்டினம் - மொய்குழலும் வண்டினமும் . மொய் - செறிந்த . மொய்பொழில் - செறிந்த பொழில் ( கோவை . 14 உரை ) ஆடுதல் - கண்ணமிடித்தலால் முதலடியில் ஆட ஆட என்பன அசைந்தாடுதற் பொருளில் வந்தன . ஏனைய அடியில் முறையே பயிலுதல் பெருகுதல் பற்றுதல் இயைதல் பயிலுதல் என்னும் பொருள்களில் வந்தன . மனம் சிவபெருமானையேயன்றிப் பிறிதொன்றினையும் நினையாமையின் சித்தஞ் சிவனொடுமாடவாட என்றார் . an மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது ' உள்ளேன் பிறதெய்வம் உன்னை யல்லாது 100 ( போற் .74 ) ( சத . 2 )