திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொற்சுண்ணம் 0142 'மற்றறியேன் பிறதெய்வம்" (ஏசறவு.5) ''சிந்தை செய்வது சிவன்கழ லல்லதொன் றில்லார்" (பெரிய - அமர் நீதி. 3) என வருவன காண்க. செங்கயற் கண் - செங்கயல் போலும் கண். "செங்கய லொண்கண் மடந்தையர்'" (திருப்படை, 8) 'கயலே ருண்கட் கனங்குழை மகளிர்" (குறுந், 398-3) கயலென அமர்த்த வுண்கண்" (அக. 126-19) என வருவன காண்க, கண்பனி - கண்ணீர். பித்து - அன்புப் பித்து. பிறவித் துன்பங்கள் பக்குவமில்லாதார் பால் நீங்கப் பெறாமையின் "பிறவி பிறரொடு மாடவாட" என்றார். இறைபணி நில்லாமையின் பிறருக் குப் பிறவித்துன்பங்களுளவாயின. அத்தன் கருணையொடாட என்றத னால் திருப்பொற்சுண்ணத்தோடு கூடிய தீர்த்தோற்சவம் இறைவனது ஐந்தொழில்களுள் அருளலைக் குறிப்பதென்பது புலப்படும். இதன் கண், ''சித்தஞ் சிவனொடுமாடச் செங்கயற்கண் பனியாட வாட பித்தெம்பிரானொடுமாடவாட பிறவி பிறரொடு மாடவாட அத்தன் கருணை யொடாட வாட" என்பதனால் ஆனந்த மனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 10 205. மாடு நகைவாள் நிலாவெறிப்ப 645 வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமின் நந்தம்மை யாண்டவாறும் பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமின் எம்பெரு மானைத் தேடிச் சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி ஆடுமின் அம்பலத் தாடினானுக் காடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. வாய் ப - ரை. மாடு நகை வாள் நிலா எறிப்ப - மங்கையர் களே, பக்கங்களிலே பல்வரிசைகளின் ஒளியாகிய நிலவு வீசவும். திறந்து அம்பவளம் துடிப்ப பாடுமின் - வாயைத்திறந்து அழகிய பவ ளம் போன்ற உதடு துடிக்கவும் பாடி, நம் தம்மை ஆட்கொண்ட வாறும் - நம்மை ஆட்கொண்டருளின விதத்தையும், பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடி தேடுமின் - எங்கள் தொண்டுகளை ஏற்றுக் கொண்டருளிய விதத்தையும் இடைவிடாது பாடிக்கொண்டு தேடுங் கள், எம்பெருமானைத் தேடி - எம்பெருமானைத்தேடி, திகைத்து சித் தம் களிப்ப தேறி ஆடுமின் அங்ஙனம் தேடிக் காணாதவிடத்துத் திகைப்படைந்தும் கண்டவிடத்து மனம் களிக்கத் தெளிவடைந்து
திருப்பொற்சுண்ணம் 0142 ' மற்றறியேன் பிறதெய்வம் ( ஏசறவு .5 ) ' ' சிந்தை செய்வது சிவன்கழ லல்லதொன் றில்லார் ( பெரிய - அமர் நீதி . 3 ) என வருவன காண்க . செங்கயற் கண் - செங்கயல் போலும் கண் . செங்கய லொண்கண் மடந்தையர் ' ( திருப்படை 8 ) ' கயலே ருண்கட் கனங்குழை மகளிர் ( குறுந் 398-3 ) கயலென அமர்த்த வுண்கண் ( அக . 126-19 ) என வருவன காண்க கண்பனி - கண்ணீர் . பித்து - அன்புப் பித்து . பிறவித் துன்பங்கள் பக்குவமில்லாதார் பால் நீங்கப் பெறாமையின் பிறவி பிறரொடு மாடவாட என்றார் . இறைபணி நில்லாமையின் பிறருக் குப் பிறவித்துன்பங்களுளவாயின . அத்தன் கருணையொடாட என்றத னால் திருப்பொற்சுண்ணத்தோடு கூடிய தீர்த்தோற்சவம் இறைவனது ஐந்தொழில்களுள் அருளலைக் குறிப்பதென்பது புலப்படும் . இதன் கண் ' ' சித்தஞ் சிவனொடுமாடச் செங்கயற்கண் பனியாட வாட பித்தெம்பிரானொடுமாடவாட பிறவி பிறரொடு மாடவாட அத்தன் கருணை யொடாட வாட என்பதனால் ஆனந்த மனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 10 205. மாடு நகைவாள் நிலாவெறிப்ப 645 வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமின் நந்தம்மை யாண்டவாறும் பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமின் எம்பெரு மானைத் தேடிச் சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி ஆடுமின் அம்பலத் தாடினானுக் காடப்பொற் சுண்ணம் இடித்துநாமே . வாய் - ரை . மாடு நகை வாள் நிலா எறிப்ப - மங்கையர் களே பக்கங்களிலே பல்வரிசைகளின் ஒளியாகிய நிலவு வீசவும் . திறந்து அம்பவளம் துடிப்ப பாடுமின் - வாயைத்திறந்து அழகிய பவ ளம் போன்ற உதடு துடிக்கவும் பாடி நம் தம்மை ஆட்கொண்ட வாறும் - நம்மை ஆட்கொண்டருளின விதத்தையும் பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடி தேடுமின் - எங்கள் தொண்டுகளை ஏற்றுக் கொண்டருளிய விதத்தையும் இடைவிடாது பாடிக்கொண்டு தேடுங் கள் எம்பெருமானைத் தேடி - எம்பெருமானைத்தேடி திகைத்து சித் தம் களிப்ப தேறி ஆடுமின் அங்ஙனம் தேடிக் காணாதவிடத்துத் திகைப்படைந்தும் கண்டவிடத்து மனம் களிக்கத் தெளிவடைந்து