திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

652 208 திருவாசக ஆராய்ச்சியுரை சங்க மரற்றச் சிலம்பொலிப்பத் தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் செங்கனி வாயித ழுந்துடிப்பச் சேயிழை யீர்சிவ லோகம்பாடிக் கங்கையி ரைப்பஅ ராவிரைக்கும் கற்றைச் சடைமுடி யான்கழற்கே பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப் பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே. மரால் யணிந்த ப-ரை. சேஇழையீர் செவ்விய ஆபரணங்களை தோழியர்களே, சங்கம் அரற்ற - கையில் அணிந்த சங்கு வளையல்கள் ஒலிக்கவும், சிலம்பு ஒலிப்ப - கால்களில் அணித்த சிலம்புகள் ஒலிப்ப வும், தாழ் குழல் சூழ்தரு மாலை ஆட - சடையாகப் பின்னப்பட்டுத் தொங்குகின்ற கூந்தவிற் சுற்றிய மாலைகள் அசையவும், செங்கனி வாய் இதழும் துடிப்ப - சிவந்த தொண்டைக் கனிபோலும் வாய் உதடுகளும் துடிக்கவும், கொங்கை பொங்க - தனங்கள் கிளரவும், சிவலோகம் பாடி - சிவபுரத்தின் சிறப்புக்களைப் பாடிக்கொண்டு, கங்கை இரைப்ப அரா இரைக்கும் - கங்கை அலை ஒலிப்ப அதனைக் கேட்டுப் பாம்பும் ஒலிக்கின்ற, கற்றை சடைமுடியான் கழற்கே- தொகுதியாகிய சடையானியன்ற முடியையுடைய இறைவனது 'திரு வடிகளிடத்தேயே. பொங்கிய காதலின் - மிகுந்துள்ள அன்பினால் பொன் திரு சுண்ணம் நாம் இடித்தும் - அப்பெருமான் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற்சுண்ணத்தினை நாம் இடிப்போமாக. M சேயிழையீர், சங்கம் அரற்ற, சிலம்பு ஒலிப்ப, கூந்தலைச் சுற்றிய மாலை ஆட, செங்கனிபோலும் வாய் உதடுகள் துடிக்க, கொங்கை பொங்கச் சிவலோகம் பாடி, சடைமுடியையுடைய இறைவனது திரு வடிகளிடத்து மிகுந்துள்ள அன்பினால் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற்சுண்ணத்தினை நாம் இடிப்போமாக என்பதாம். சங்கம் - சங்கினாலாகிய வளைக்கு ஆகுபெயர். 'அரம்போழவ் வளைப் பொலிந்த முன்கை, யிழையணிப்பணைத்தோ ளையை'' (அக. 6-2-3) என்பது காண்க. தாழ் குழல் - நீண்ட கூந்தல் "சிலமழை போறாழ்ந் திருண்ட கூந்தல் (கலி 147-19) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க. சூழ்தல் - சுற்றுதல். மாலையாடல் - இடிக்கும்போது அசைதலால் என்க. கனிவாய் - தொண்டைக் கனிபோலும் வாய் (கோவை.50, 70 உரை). வாயிதழ் துடித்தல் பாடுதலால் என்க. 'வாய்திறந் தம்ப வளந் துடிப்பப் பாடுமின்" (பொற். 11) என வந் தமை காண்க. இதழும் என்புழி உம்மை, இறந்தது தழீஇய எச்ச வும்மை. சிவலோகம் பாடி - சிவபுரத்தைப்பாடி, "தேனக மாமலர்க் கொன்றை பாடிச் சிவபுரம் பாடி"(பொற்.17) என வருதல் காண்க,
652 208 திருவாசக ஆராய்ச்சியுரை சங்க மரற்றச் சிலம்பொலிப்பத் தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் செங்கனி வாயித ழுந்துடிப்பச் சேயிழை யீர்சிவ லோகம்பாடிக் கங்கையி ரைப்பஅ ராவிரைக்கும் கற்றைச் சடைமுடி யான்கழற்கே பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப் பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே . மரால் யணிந்த - ரை . சேஇழையீர் செவ்விய ஆபரணங்களை தோழியர்களே சங்கம் அரற்ற - கையில் அணிந்த சங்கு வளையல்கள் ஒலிக்கவும் சிலம்பு ஒலிப்ப - கால்களில் அணித்த சிலம்புகள் ஒலிப்ப வும் தாழ் குழல் சூழ்தரு மாலை ஆட - சடையாகப் பின்னப்பட்டுத் தொங்குகின்ற கூந்தவிற் சுற்றிய மாலைகள் அசையவும் செங்கனி வாய் இதழும் துடிப்ப - சிவந்த தொண்டைக் கனிபோலும் வாய் உதடுகளும் துடிக்கவும் கொங்கை பொங்க - தனங்கள் கிளரவும் சிவலோகம் பாடி - சிவபுரத்தின் சிறப்புக்களைப் பாடிக்கொண்டு கங்கை இரைப்ப அரா இரைக்கும் - கங்கை அலை ஒலிப்ப அதனைக் கேட்டுப் பாம்பும் ஒலிக்கின்ற கற்றை சடைமுடியான் கழற்கே தொகுதியாகிய சடையானியன்ற முடியையுடைய இறைவனது ' திரு வடிகளிடத்தேயே . பொங்கிய காதலின் - மிகுந்துள்ள அன்பினால் பொன் திரு சுண்ணம் நாம் இடித்தும் - அப்பெருமான் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற்சுண்ணத்தினை நாம் இடிப்போமாக . M சேயிழையீர் சங்கம் அரற்ற சிலம்பு ஒலிப்ப கூந்தலைச் சுற்றிய மாலை ஆட செங்கனிபோலும் வாய் உதடுகள் துடிக்க கொங்கை பொங்கச் சிவலோகம் பாடி சடைமுடியையுடைய இறைவனது திரு வடிகளிடத்து மிகுந்துள்ள அன்பினால் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற்சுண்ணத்தினை நாம் இடிப்போமாக என்பதாம் . சங்கம் - சங்கினாலாகிய வளைக்கு ஆகுபெயர் . ' அரம்போழவ் வளைப் பொலிந்த முன்கை யிழையணிப்பணைத்தோ ளையை ' ' ( அக . 6-2-3 ) என்பது காண்க . தாழ் குழல் - நீண்ட கூந்தல் சிலமழை போறாழ்ந் திருண்ட கூந்தல் ( கலி 147-19 ) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க . சூழ்தல் - சுற்றுதல் . மாலையாடல் - இடிக்கும்போது அசைதலால் என்க . கனிவாய் - தொண்டைக் கனிபோலும் வாய் ( கோவை .50 70 உரை ) . வாயிதழ் துடித்தல் பாடுதலால் என்க . ' வாய்திறந் தம்ப வளந் துடிப்பப் பாடுமின் ( பொற் . 11 ) என வந் தமை காண்க . இதழும் என்புழி உம்மை இறந்தது தழீஇய எச்ச வும்மை . சிவலோகம் பாடி - சிவபுரத்தைப்பாடி தேனக மாமலர்க் கொன்றை பாடிச் சிவபுரம் பாடி ( பொற் .17 ) என வருதல் காண்க