திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை புகுந்து இனிக்க வல்ல இறைவனை, பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை எங்கள் பிறவித் துன்பங்களைக் கெடுத்து ஆட்கொண் டருளிய கூத்தப்பெருமானை, நா தழும்பு ஏற வாழ்த்தி பாடி - நாவில் தழும்புண்டாகும் வண்ணம் பலகால் புகழ்ந்து பாடிக் கொண்டு, பொன் சுண்ணம் நாம் இடித்தும் இறைவன் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தினை நாம் இடிப்போமாக. 654 - மடந்தை நல்லீர், ஞானக்கரும்பின் தெளியை,பாகை, குறை யாத தேனை, பழச்சுவையாயினானை, மனத்துள் புகுந்து தித்திக்கவல்ல கோனை, பிறவி அறுத்து ஆட்கொண்டருளிய கூத்தப்பெருமானை. நாவில் தழும்பேறும் வண்ணம் பலகாற் புகழ்ந்து பாடிக்கொண்டு இறைவன் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தினை இடிப்போமாக என்பதாம். பானல் - கருங்குவளை. "பானல் கருங்குவளை" (பிங். 9-365) மகளிர் கண்ணுக்குக் குவளையை உவமை கூறுதலை "குவளை நாண்மலர் புரையும் உண்கண்" (அக.179-12). ஞானம் - சிவஞானம் என்றது சிவனை அறியும் அறிவு. சிவஞானத்தைப் பெறுதலின் பயனாயுள்ளவன் சிவனேயாதலின் அவனை ஞானமாகிய கரும்பின்தெளிவு என்றது உப சார வழக்குப்பற்றி.தெளி-தெளித்தெடுக்கப்பட்டது. பாகு என் றது அத்தெளியை அட்ட வெல்லத்தினை. நாடற்கரிய நலம்- தேடுதற் கரிய நன்மை. நன்மை என்றது வீடுபேற்றினை. நன்மை தருவானை "நலம்" என்றார். நந்துதல் - ஈண்டுக் குறைதல். நந்தாத்தேனை என் றது சுவையும் அளவும் குறைபடுதலில்லாத தேனை. பழம் - வாழை. மா, பலாவின் பழம். இறைவன் பழச்சுவை போன்றவனாதலின். "பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை" "பழமாகிச் சுவையாகிப் பயக்கின்றான் காண்" (நாவு.160-8) (நாவு. 265-1) எனத் தேவாரத்தும் வருவன காண்க. கரும்பின் தெளி, பாகு, நலம், தேன், பழச்சுவை என்பன இறைவன் இயல்பிற்குப் பலவகைச்சுவைப் பொருள்களாலும் உவமைகூறி மகிழ்ந்தவாறு. சித்தத்திற் புகுதலும் அங்கே இனிமை செய்தலும் எவர்க்கும் இயலாைைமயின் "வல்ல கோன்" என்றார். நாத்தழும்பு ஏறுதல் - இடைவிடாது பாடுதலால் நாவில் தழும்பு உண்டாதல். "நாத்தழும்ப வேத்தாதார் வீட்டுலக நண்ணாரே" (சீவக. 1469) என வருவன காண்க. வாழ்த்துப்பாடி இடித்தும் என முடிக்க. மடந்தை நல்லீர், தெளியை, பாகை, நலத்தை, தேனைப் பழச் சுவையாயினானை, நோனை, கூத்தனை வாழ்த்திப்பாடி நாம் சுண்ணம் இடித்தும் என வினைமுடிபு செய்க.
திருவாசக ஆராய்ச்சியுரை புகுந்து இனிக்க வல்ல இறைவனை பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை எங்கள் பிறவித் துன்பங்களைக் கெடுத்து ஆட்கொண் டருளிய கூத்தப்பெருமானை நா தழும்பு ஏற வாழ்த்தி பாடி - நாவில் தழும்புண்டாகும் வண்ணம் பலகால் புகழ்ந்து பாடிக் கொண்டு பொன் சுண்ணம் நாம் இடித்தும் இறைவன் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தினை நாம் இடிப்போமாக . 654 - மடந்தை நல்லீர் ஞானக்கரும்பின் தெளியை பாகை குறை யாத தேனை பழச்சுவையாயினானை மனத்துள் புகுந்து தித்திக்கவல்ல கோனை பிறவி அறுத்து ஆட்கொண்டருளிய கூத்தப்பெருமானை . நாவில் தழும்பேறும் வண்ணம் பலகாற் புகழ்ந்து பாடிக்கொண்டு இறைவன் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தினை இடிப்போமாக என்பதாம் . பானல் - கருங்குவளை . பானல் கருங்குவளை ( பிங் . 9-365 ) மகளிர் கண்ணுக்குக் குவளையை உவமை கூறுதலை குவளை நாண்மலர் புரையும் உண்கண் ( அக.179-12 ) . ஞானம் - சிவஞானம் என்றது சிவனை அறியும் அறிவு . சிவஞானத்தைப் பெறுதலின் பயனாயுள்ளவன் சிவனேயாதலின் அவனை ஞானமாகிய கரும்பின்தெளிவு என்றது உப சார வழக்குப்பற்றி.தெளி - தெளித்தெடுக்கப்பட்டது . பாகு என் றது அத்தெளியை அட்ட வெல்லத்தினை . நாடற்கரிய நலம்- தேடுதற் கரிய நன்மை . நன்மை என்றது வீடுபேற்றினை . நன்மை தருவானை நலம் என்றார் . நந்துதல் - ஈண்டுக் குறைதல் . நந்தாத்தேனை என் றது சுவையும் அளவும் குறைபடுதலில்லாத தேனை . பழம் - வாழை . மா பலாவின் பழம் . இறைவன் பழச்சுவை போன்றவனாதலின் . பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை பழமாகிச் சுவையாகிப் பயக்கின்றான் காண் ( நாவு.160-8 ) ( நாவு . 265-1 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . கரும்பின் தெளி பாகு நலம் தேன் பழச்சுவை என்பன இறைவன் இயல்பிற்குப் பலவகைச்சுவைப் பொருள்களாலும் உவமைகூறி மகிழ்ந்தவாறு . சித்தத்திற் புகுதலும் அங்கே இனிமை செய்தலும் எவர்க்கும் இயலாைைமயின் வல்ல கோன் என்றார் . நாத்தழும்பு ஏறுதல் - இடைவிடாது பாடுதலால் நாவில் தழும்பு உண்டாதல் . நாத்தழும்ப வேத்தாதார் வீட்டுலக நண்ணாரே ( சீவக . 1469 ) என வருவன காண்க . வாழ்த்துப்பாடி இடித்தும் என முடிக்க . மடந்தை நல்லீர் தெளியை பாகை நலத்தை தேனைப் பழச் சுவையாயினானை நோனை கூத்தனை வாழ்த்திப்பாடி நாம் சுண்ணம் இடித்தும் என வினைமுடிபு செய்க .