திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்" என வருவனவற்றாலுமறிக. சிவபுரம் - சிவலோகம். ''சிவபுரத்துச் சென்று சிவன்றாள் வணங்கி'' ''சீரார் சிவலோகம் தன்னுட் சிவபுரத்தில்" 658 (அக. கடவுள்) (யாத்.6) (திருக்கைலாய ஞான உலா.9) என வருதல் காண்க. திருச் சடைமேல் மதிப்பிள்ளை. வானக மாமதிப் பிள்ளை எனத் தனித்தனி கூட்டுக. விண்ணை இடமாகக்கொண்ட மதிப் பிள்ளையை இறைவன் திருச்சடைமேல் கொண்டமையின் "திருச்சடை மேல் வானக மாமதிப் பிள்ளை" என்றார். "வான மதியமும் வாளரவும் புனலோடு சடைத் தானமிது வென வைத்து'' (அப்பர் 93-2) (சுந்.68-9) "பிள்ளை மாமதிச் சடை' எனத் தேவாரத்தும் வருவன காண்க. அதனைப் பாடுவது இறைவ னது திருவருள் பெற்ற மேம்பாடு பற்றியாகும். மால்விடை - மேலான விடை எனினுமாம். '"வெள்ளிமலையன்ன மால்விடையோன்" (கோவை. 128) 'வெள்ளிக் குன்றம் தன்வண் ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்லிடை" (பொன்வண்ணத்.1) மால்விடை - பெரியவிடை எனினுமாம். 'வெள்ளிமலை யன்ன மால் விடையோன்" (கோவை.128) மால்விடை - திருமாலாகிய இடப வாகனம். சினமல்கு மால் விடையீர்* செங்கண் மால்விடையார்" (ஞான.192-7) (நாவு.149-8) (சுந். 86-5) செங்கண் மால்விடையானை' * என வருவன காண்க. திரிபுர தகன காலத்தில் தேவர்கள் அமைத்த தேரின் அச்சு முறிந்ததாக அப்பொழுது திருமால் இடபமாய் இறை வனைத் தாங்கினான் என்பது வரலாறு. "தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ' (சாழல். 15) எனத் திருவாசகத்தும், "எல்லிசூடி நின்றாடு மிறையவரிமையவரேத்தச் சில்லைமால் விடையேறித் திரிபுரந் தீயெழச் செற்ற வில்லினார்" எனத் தேவாரத்தும் வருவன காண்க. (ஞான.229-6)
திருவாசக ஆராய்ச்சியுரை கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் என வருவனவற்றாலுமறிக . சிவபுரம் - சிவலோகம் . ' ' சிவபுரத்துச் சென்று சிவன்றாள் வணங்கி ' ' ' ' சீரார் சிவலோகம் தன்னுட் சிவபுரத்தில் 658 ( அக . கடவுள் ) ( யாத் .6 ) ( திருக்கைலாய ஞான உலா .9 ) என வருதல் காண்க . திருச் சடைமேல் மதிப்பிள்ளை . வானக மாமதிப் பிள்ளை எனத் தனித்தனி கூட்டுக . விண்ணை இடமாகக்கொண்ட மதிப் பிள்ளையை இறைவன் திருச்சடைமேல் கொண்டமையின் திருச்சடை மேல் வானக மாமதிப் பிள்ளை என்றார் . வான மதியமும் வாளரவும் புனலோடு சடைத் தானமிது வென வைத்து ' ' ( அப்பர் 93-2 ) ( சுந்.68-9 ) பிள்ளை மாமதிச் சடை ' எனத் தேவாரத்தும் வருவன காண்க . அதனைப் பாடுவது இறைவ னது திருவருள் பெற்ற மேம்பாடு பற்றியாகும் . மால்விடை - மேலான விடை எனினுமாம் . ' வெள்ளிமலையன்ன மால்விடையோன் ( கோவை . 128 ) ' வெள்ளிக் குன்றம் தன்வண் ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்லிடை ( பொன்வண்ணத் .1 ) மால்விடை - பெரியவிடை எனினுமாம் . ' வெள்ளிமலை யன்ன மால் விடையோன் ( கோவை .128 ) மால்விடை - திருமாலாகிய இடப வாகனம் . சினமல்கு மால் விடையீர் * செங்கண் மால்விடையார் ( ஞான.192-7 ) ( நாவு.149-8 ) ( சுந் . 86-5 ) செங்கண் மால்விடையானை ' * என வருவன காண்க . திரிபுர தகன காலத்தில் தேவர்கள் அமைத்த தேரின் அச்சு முறிந்ததாக அப்பொழுது திருமால் இடபமாய் இறை வனைத் தாங்கினான் என்பது வரலாறு . தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ ' ( சாழல் . 15 ) எனத் திருவாசகத்தும் எல்லிசூடி நின்றாடு மிறையவரிமையவரேத்தச் சில்லைமால் விடையேறித் திரிபுரந் தீயெழச் செற்ற வில்லினார் எனத் தேவாரத்தும் வருவன காண்க . ( ஞான.229-6 )