திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

ஒற்ை திருவாசக ஆராய்ச்சியுரை 660 தினைப் பாடி எனவுரைக்க. "விடமுண்டமுத மரர்க்கருள் செய்த" (ஞான.13-10) என வருதல் காண்க. கொன்றைபாடி, சிவபுரம்பாடி, மதிப்பிள்ளை பாடி, மால்விடை பாடி, மழுச் சூலம்பாடி, நஞ்சுண்டல் பாடி, நாம் சுண்ணம் இடித்தும் என வினைமுடிபு செய்க. இதன்கண், "உம்பரும் இம்பரும் உய்ய அன்று போனகமாக நஞ் சுண்டல் பாடி" என்பதனால் ஆனந்தமனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க 17 212 அயன்றலை கொண்டு செண் டாடல்பாடி அருக்க னெயிறு பறித்தல்பாடிக் கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடிக் காலனைக் காலா லுதைத்தல்பாடி இயைந்தன முப்புர மெய்தல்பாடி 1-ரேஸ் ஏழை யடியோமை யாண்டுகொண்ட நயந்தனைப் பாடிநின் றாடியாடி நாதற்குச் சுண்ணம் இடித்துநாமே. ப-ரை. அயன் தலை கொண்டு செண்டு ஆடல் பாடி - தம்மை இகழ்ந்த பிரமதேவனது நடுத்தலையைக் கிள்ளியெடுத்துக்கொண்டு பந்தாடியதைப் பாடியும், அருக்கன் எயிறு பறித்தல் பாடி - தக்க னது வேள்ளியிற் சூரியன் பற்களைத் தகர்த்ததைப் பாடியும், கயன் தனை கொன்று உரிபோர்த்தல் பாடி - யானை வடிவமான கயன் என் னும் அசுரனைக்கொன்று அவன் தோலை உரித்துப் போர்த்துக்கொண் டமையைப் பாடியும், காலனைக் காலால் உதைத்தல் பாடி - மார்க் கண்டேயர்மீது வெகுண்டெழுந்த யமனைத் தன் திருவடியால் உதைத் துக்கொன்றமையைப் பாடியும், இயைந்தன முப்புரம் எய்தல் பாடி- சேர்ந்து செல்லும் இயல்பினவாகிய முப்புரங்களை அம்பு எய்து அழித் தமையைப் பாடியும், ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயந்தனை பாடி நின்று ஆடி ஆடி-சிற்றறிவுடைய அடியோங்களையும் ஆட்கொண் டருளிய தன்மையினைப் புகழ்ந்து பாடியும் நின்று ஆடி ஆடி, நாதற்கு சுண்ணம் நாம் இடித்தும் -எம் தலைவற்குத் தீர்த்தமாடுதற் பொருட் டுத் திருப்பொற் சுண்ணத்தினை நாம் இடிப்போமாக. பிரமனது தலையைக் கொண்டு செண்டு ஆடியதைப் பாடியும், தக் கன் வேள்வியில் சூரியனது பற்களைப் பறித்ததனைப் பாடியும், கயனைக் கொன்று அவன் தோலை உரித்துப் போர்த்துக்கொண்டதனைப் பாடி யும், காலனைக் காலால் உதைத்தல் பாடியும், முப்புரங்களை அம்பு
ஒற்ை திருவாசக ஆராய்ச்சியுரை 660 தினைப் பாடி எனவுரைக்க . விடமுண்டமுத மரர்க்கருள் செய்த ( ஞான.13-10 ) என வருதல் காண்க . கொன்றைபாடி சிவபுரம்பாடி மதிப்பிள்ளை பாடி மால்விடை பாடி மழுச் சூலம்பாடி நஞ்சுண்டல் பாடி நாம் சுண்ணம் இடித்தும் என வினைமுடிபு செய்க . இதன்கண் உம்பரும் இம்பரும் உய்ய அன்று போனகமாக நஞ் சுண்டல் பாடி என்பதனால் ஆனந்தமனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க 17 212 அயன்றலை கொண்டு செண் டாடல்பாடி அருக்க னெயிறு பறித்தல்பாடிக் கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடிக் காலனைக் காலா லுதைத்தல்பாடி இயைந்தன முப்புர மெய்தல்பாடி 1 - ரேஸ் ஏழை யடியோமை யாண்டுகொண்ட நயந்தனைப் பாடிநின் றாடியாடி நாதற்குச் சுண்ணம் இடித்துநாமே . - ரை . அயன் தலை கொண்டு செண்டு ஆடல் பாடி - தம்மை இகழ்ந்த பிரமதேவனது நடுத்தலையைக் கிள்ளியெடுத்துக்கொண்டு பந்தாடியதைப் பாடியும் அருக்கன் எயிறு பறித்தல் பாடி - தக்க னது வேள்ளியிற் சூரியன் பற்களைத் தகர்த்ததைப் பாடியும் கயன் தனை கொன்று உரிபோர்த்தல் பாடி - யானை வடிவமான கயன் என் னும் அசுரனைக்கொன்று அவன் தோலை உரித்துப் போர்த்துக்கொண் டமையைப் பாடியும் காலனைக் காலால் உதைத்தல் பாடி - மார்க் கண்டேயர்மீது வெகுண்டெழுந்த யமனைத் தன் திருவடியால் உதைத் துக்கொன்றமையைப் பாடியும் இயைந்தன முப்புரம் எய்தல் பாடி சேர்ந்து செல்லும் இயல்பினவாகிய முப்புரங்களை அம்பு எய்து அழித் தமையைப் பாடியும் ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயந்தனை பாடி நின்று ஆடி ஆடி - சிற்றறிவுடைய அடியோங்களையும் ஆட்கொண் டருளிய தன்மையினைப் புகழ்ந்து பாடியும் நின்று ஆடி ஆடி நாதற்கு சுண்ணம் நாம் இடித்தும் -எம் தலைவற்குத் தீர்த்தமாடுதற் பொருட் டுத் திருப்பொற் சுண்ணத்தினை நாம் இடிப்போமாக . பிரமனது தலையைக் கொண்டு செண்டு ஆடியதைப் பாடியும் தக் கன் வேள்வியில் சூரியனது பற்களைப் பறித்ததனைப் பாடியும் கயனைக் கொன்று அவன் தோலை உரித்துப் போர்த்துக்கொண்டதனைப் பாடி யும் காலனைக் காலால் உதைத்தல் பாடியும் முப்புரங்களை அம்பு