திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொற்சுண்ணம் வேதங்களும் வேள்விகளும் நிகழ்தற்குக் காரணமானவர்க்கு, மெய்ம்மையும்பொய்ம்மையுமாய் இருப்பவர்க்கு, சோதியுமாய் இருளு மாயிருப்பவர்க்கு, உயிர்களுக்குத் துன்பமும் இன்பமும் தருபவராய் இருப்பவர்க்கு, பாதியாயும் முழுவடிவாயும் உள்ளவர்க்கு, பாசபந் தத்திற்கும் வீடு பேற்றிற்கும் காரணமாயுள்ளவர்க்கு, உலகத்திற்கு ஆதியும் அந்தமுமாய் இருப்பவர்க்குத் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தினை நாம் இடிப்போமாக என்பதாம். இறைவன் வேதமும் வேள்வியுமாயினார் என்பது வேதமும் வேள்வியுமானானை' (ஞான.149-7) என்பதனாலுமறிக. வேதமும் வேள்வியுமாயினார்க்கு என்பதற்கு வேதத்திற்கூறப்படும் ஞானகாண்ட மும் கிரியாகாண்டமுமாய் உள்ளவர்க்கு எனவும் பொருள்கோடலாம். 667 de ta இறைவன் மெய்யர்க்குப் புலப்படுதலும் பொய்யர்க்குப் புலப் படாமையு முண்மையின் "மெய்ம்மையும் பொய்மையுமாயினார்க்கு'' என்றார். இறைவன் அன்பர்க்கு ஒளியாயும் அல்லாதார்க்கு இருளா யும் இருத்தலின் ''சோதியுமாய் இருளாயினார்க்கு'' என்றார். 'சோதி யாய் இருளாகி... நின்றான் தன்னை" எனத் தேவாரத்தும் (நாவு. 239-6) வருதல் காண்க. –369 உயிர்களின் ஆணவ ஆற்றலை நீக்கும் பொருட்டுக் கன்ம மலத் தினைச் சேர்த்து வைத்த இறைவன் அக்கன்ம மலத்துள் தீவினைப் பய னால் துன்பமும் நல்வினைப் பயனால் இன்பமும் அனுபவிக்கச் செய்பவ னாதலின் 'துன்பமும் இன்பமுமாயினார்க்கு" என்றார். இறைவன் அர்த்த நாரீசுவர வடிவத்தில் இடப்பாதி பெண்ணாக வும் வலப்பாதி ஆணாகவும் அமைந்திருத்தலின் "பாதியுமாய்” என்றும், அப்பாதிகள் இரண்டும் சேர்ந்தே ஒருவராய் முழுவடிவினராதலின் "முற்றுமாயினார்க்கு" என்றும் அருளிச்செய்தார். 'பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்" (நாவு. 42-7) அருந்திருமேனி தன்பால் அங்கொருபாகமாகத் திருந்திட வைத்தார்" (நாவு.73-1) *"ஓங்குமலைக் கரையன்தன் பாவையோடும் ஒருருவாய் நின்றான்காண்" (நாவு. 265-10) "வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே இசையமங்கையும் தானுமொன்றாயினான்" எனத் தேவாரத்து வருவன காண்க. (நாவு.184-1)
திருப்பொற்சுண்ணம் வேதங்களும் வேள்விகளும் நிகழ்தற்குக் காரணமானவர்க்கு மெய்ம்மையும்பொய்ம்மையுமாய் இருப்பவர்க்கு சோதியுமாய் இருளு மாயிருப்பவர்க்கு உயிர்களுக்குத் துன்பமும் இன்பமும் தருபவராய் இருப்பவர்க்கு பாதியாயும் முழுவடிவாயும் உள்ளவர்க்கு பாசபந் தத்திற்கும் வீடு பேற்றிற்கும் காரணமாயுள்ளவர்க்கு உலகத்திற்கு ஆதியும் அந்தமுமாய் இருப்பவர்க்குத் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்தினை நாம் இடிப்போமாக என்பதாம் . இறைவன் வேதமும் வேள்வியுமாயினார் என்பது வேதமும் வேள்வியுமானானை ' ( ஞான.149-7 ) என்பதனாலுமறிக . வேதமும் வேள்வியுமாயினார்க்கு என்பதற்கு வேதத்திற்கூறப்படும் ஞானகாண்ட மும் கிரியாகாண்டமுமாய் உள்ளவர்க்கு எனவும் பொருள்கோடலாம் . 667 de ta இறைவன் மெய்யர்க்குப் புலப்படுதலும் பொய்யர்க்குப் புலப் படாமையு முண்மையின் மெய்ம்மையும் பொய்மையுமாயினார்க்கு ' ' என்றார் . இறைவன் அன்பர்க்கு ஒளியாயும் அல்லாதார்க்கு இருளா யும் இருத்தலின் ' ' சோதியுமாய் இருளாயினார்க்கு ' ' என்றார் . ' சோதி யாய் இருளாகி ... நின்றான் தன்னை எனத் தேவாரத்தும் ( நாவு . 239-6 ) வருதல் காண்க . –369 உயிர்களின் ஆணவ ஆற்றலை நீக்கும் பொருட்டுக் கன்ம மலத் தினைச் சேர்த்து வைத்த இறைவன் அக்கன்ம மலத்துள் தீவினைப் பய னால் துன்பமும் நல்வினைப் பயனால் இன்பமும் அனுபவிக்கச் செய்பவ னாதலின் ' துன்பமும் இன்பமுமாயினார்க்கு என்றார் . இறைவன் அர்த்த நாரீசுவர வடிவத்தில் இடப்பாதி பெண்ணாக வும் வலப்பாதி ஆணாகவும் அமைந்திருத்தலின் பாதியுமாய் என்றும் அப்பாதிகள் இரண்டும் சேர்ந்தே ஒருவராய் முழுவடிவினராதலின் முற்றுமாயினார்க்கு என்றும் அருளிச்செய்தார் . ' பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன் ( நாவு . 42-7 ) அருந்திருமேனி தன்பால் அங்கொருபாகமாகத் திருந்திட வைத்தார் ( நாவு.73-1 ) * ஓங்குமலைக் கரையன்தன் பாவையோடும் ஒருருவாய் நின்றான்காண் ( நாவு . 265-10 ) வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே இசையமங்கையும் தானுமொன்றாயினான் எனத் தேவாரத்து வருவன காண்க . ( நாவு.184-1 )