திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

009 10. திருக்கோத்தும்பி சிவனோடைக்கியம் தில்லையில் அருளிச் செய்யப்பட்டது a D ப்பதை திருக்கோத்தும்பி என்பது அடிகள் தில்லைநகரில் எழுந்தருளியிருக் கும்போது ஒருமுறை ஒரு சோலையினூடாகச் செல்லுகையில் அங்கே யுள்ள சில அரச வண்டுகள் தம் பக்கலில் ஒலிசெய்தலைக் கண்டு அவற்றை முன்னிலைப்படுத்தித் தனித்தனி விளித்து இறைவன் திரு வடி மலரில் சென்று ஊதித் தேன் பருகும்படி ஏவுவதாக அமைந் துள்ளது இப்பகுதி. கேட்குந போலவும் கிளக்குநபோலவும் அஃறிணை மருங்கினும் அறையப்படும்" என்னும் தொல்காப்பிய விதிப்படி அடிகள் இறைவன் திருவடி மலரில் கொண்டுள்ள பேரன் பின் மிகுதியால் உலகியலை மறந்து இங்ஙனம் கூறுவாராயினர். இப் பகுதியின் உள்ளீடு "சிவனோடைக்கியம்" எனக்காட்டப்பட்டுள்ளது. சிவனோடைக்கியமாவது திருவடியன்பின் மிகுதியால் அத்திருவடியை இடைவிடாது தியானித்தல். இருை இப்பகுதி தும்பிகளைச்சிவனது திருவடி மலரில் சென்று ஊது மாறு கூறுதலின் சிவனோடைக்கியம் என்பது வெளிப்படுவதாயிற்று. இது வெண்டளையால் வந்த நாலடித் தரவுகொச்சகக் கலிப்பாவால் அமைந்தது. 215. Te te to D தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் Breeman Dr பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும் மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. ப-ரை: கோ தும்பீ - அரசவண்டே, பூ ஏறு கோனும் - தாமரை மலர்மேல் ஏறி அதனை ஆசனமாகக்கொண்ட முதல்வனாகிய நான்முக னும்,புரந்தரனும் இந்திரனும், பொற்பு அமைந்த நா ஏறு செல்வி யும் - அழகு பொருந்திய நாவில் தங்கும் கலைமகளும், நாரணனும்- திருமாலும், நான்மறையும் - நான்கு வேதங்களும், மா ஏறு சோதி யும் - பெருமை மிக்க ஒளியுருவத்தையுடைய உருத்திரமூர்த்தியும், வானவரும் தாம் அறியா - மற்றுமுள்ள தேவர்களும் தாமே அறிய முடியாத, சே ஏறு சே அடிக்கே - இடப வாகனத்தின் மீது ஏறி அமர்ந் தருளும் இறைவன் திருவடி மலரின் கண்ணே, சென்று ஊதாய் - நீ சென்று படிந்து ஒலித்துப் பேரின்பமாகிய தேனைப் பருகுவாயாக,
009 10. திருக்கோத்தும்பி சிவனோடைக்கியம் தில்லையில் அருளிச் செய்யப்பட்டது a D ப்பதை திருக்கோத்தும்பி என்பது அடிகள் தில்லைநகரில் எழுந்தருளியிருக் கும்போது ஒருமுறை ஒரு சோலையினூடாகச் செல்லுகையில் அங்கே யுள்ள சில அரச வண்டுகள் தம் பக்கலில் ஒலிசெய்தலைக் கண்டு அவற்றை முன்னிலைப்படுத்தித் தனித்தனி விளித்து இறைவன் திரு வடி மலரில் சென்று ஊதித் தேன் பருகும்படி ஏவுவதாக அமைந் துள்ளது இப்பகுதி . கேட்குந போலவும் கிளக்குநபோலவும் அஃறிணை மருங்கினும் அறையப்படும் என்னும் தொல்காப்பிய விதிப்படி அடிகள் இறைவன் திருவடி மலரில் கொண்டுள்ள பேரன் பின் மிகுதியால் உலகியலை மறந்து இங்ஙனம் கூறுவாராயினர் . இப் பகுதியின் உள்ளீடு சிவனோடைக்கியம் எனக்காட்டப்பட்டுள்ளது . சிவனோடைக்கியமாவது திருவடியன்பின் மிகுதியால் அத்திருவடியை இடைவிடாது தியானித்தல் . இருை இப்பகுதி தும்பிகளைச்சிவனது திருவடி மலரில் சென்று ஊது மாறு கூறுதலின் சிவனோடைக்கியம் என்பது வெளிப்படுவதாயிற்று . இது வெண்டளையால் வந்த நாலடித் தரவுகொச்சகக் கலிப்பாவால் அமைந்தது . 215 . Te te to D தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் Breeman Dr பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும் மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ . - ரை : கோ தும்பீ - அரசவண்டே பூ ஏறு கோனும் - தாமரை மலர்மேல் ஏறி அதனை ஆசனமாகக்கொண்ட முதல்வனாகிய நான்முக னும் புரந்தரனும் இந்திரனும் பொற்பு அமைந்த நா ஏறு செல்வி யும் - அழகு பொருந்திய நாவில் தங்கும் கலைமகளும் நாரணனும் திருமாலும் நான்மறையும் - நான்கு வேதங்களும் மா ஏறு சோதி யும் - பெருமை மிக்க ஒளியுருவத்தையுடைய உருத்திரமூர்த்தியும் வானவரும் தாம் அறியா - மற்றுமுள்ள தேவர்களும் தாமே அறிய முடியாத சே ஏறு சே அடிக்கே - இடப வாகனத்தின் மீது ஏறி அமர்ந் தருளும் இறைவன் திருவடி மலரின் கண்ணே சென்று ஊதாய் - நீ சென்று படிந்து ஒலித்துப் பேரின்பமாகிய தேனைப் பருகுவாயாக