திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருக்கோத்தும்பி 671 கோத்தும்பீ, இறைவன் என்னை ஆட்கொண்டிலனாயின் நான் ஆர்? உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை அறிவார் ஆர்? ஆதலால் அவ்விறைவனது திருவடியாகிய செந்தாமரை மலரின் கண்ணே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக. தன்மைக் கண்ணும் அஃறிணைக்கண்ணும் வந்த ஆர் மூன்றும் யார் என்பதன் மரூஉவாய் வழுவமைதியாயின. ஆட்கொள்ளுமுன் நான் ஆர் என்பதனையும் என் உள்ளம் எப்படிப்பட்டது என்பதனையும் என் னுடைய அறிவுகள் எப்படிப்பட்டவை என்பதனையும் என்னை அறிய வர் யார் என்பதனையும் தெரியாதிருந்த நிலைமையினின்றும் நீக்கி, நான் இத்தன்மையன் எனவும், என் உள்ளமும் ஞானமும் இயல்பும் இத்தன்மையன எனவும் ஆட்கொண்டு அறிவித்த அம்பலவன் என, "நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னையாரறிவார், வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்" என்பதன் ஆற்றலால் வருவித்துரைத் துக்கொள்க. மதிமயங்கி அறிவுகெட்டு. மதிமயங்கியது சிரமைந்துடைமை யால் தான் இறைவனோடு ஒப்புடையான் என இறுமாந்து இகழ்ந்தது. மதிமயங்கியது பிரமன் செயல். மயங்கி என்னும் செய்தெனெச்சம் ஏதுப்பொருட்டாய் உடை என்பதனோடு இயைந்தது. உடை தலை வினைத்தொகை. தலை எனப் பொதுப்படக்கூறினும் பிரமனது தலையோடு எனப் பொருள் கொள்க. தலையிற் பலிதேர் அம்பலவன் என்க. 'உடைதலையிற் பலிதேர்கொள்வர்' 'ஊனமார் உடைதலை யிற் பலிதிரிவார்" (ஞான 323-9; 351-2) 'அன்றயன் சிரமரிந் ததிற்பலி கொண்டமரருக்கருள் வெளிப்படுத்தானை" (சுந். 62-7) எனத் தேவாரத்தும் வருவன காண்க. பிரமனது தலையோட்டைக் கரத்திற்றாங்கி வைரவமூர்த்தியாகி இறைவன் ஏற்றபலி செருக் கடைந்ததேவர்களின் குருதிப்பலியாகும். இதனை, பரமனை மதித்திடாப் பங்க யாசனன் ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர் குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம்''. என்னும் கந்தபுராணக் கடவுள் வாழ்த்தானுமறிக. (கடவுள் 9) தக்க யாகத்து வீரபத்திரக் கடவுளால் செய்யப்பட்ட தண்டங் களும் வைரவக் கடவுளால் பிரமன் முதலியோர்க்குச் செய்யப்பட்ட தண்டங்களும் இறைவன் செயலாகவே தேவார திருவாசகங்களிற் சொல்லப்பட்டு வருதல் அவர்தம்முட் பேதமின்மைபற்றியாகும். இதன்கண், "அம்பலவன் தேனார் கமலமே சென்றூதாய் கோத் தும்பி" என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 2
திருக்கோத்தும்பி 671 கோத்தும்பீ இறைவன் என்னை ஆட்கொண்டிலனாயின் நான் ஆர் ? உள்ளம் ஆர் ? ஞானங்கள் ஆர் ? என்னை அறிவார் ஆர் ? ஆதலால் அவ்விறைவனது திருவடியாகிய செந்தாமரை மலரின் கண்ணே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக . தன்மைக் கண்ணும் அஃறிணைக்கண்ணும் வந்த ஆர் மூன்றும் யார் என்பதன் மரூஉவாய் வழுவமைதியாயின . ஆட்கொள்ளுமுன் நான் ஆர் என்பதனையும் என் உள்ளம் எப்படிப்பட்டது என்பதனையும் என் னுடைய அறிவுகள் எப்படிப்பட்டவை என்பதனையும் என்னை அறிய வர் யார் என்பதனையும் தெரியாதிருந்த நிலைமையினின்றும் நீக்கி நான் இத்தன்மையன் எனவும் என் உள்ளமும் ஞானமும் இயல்பும் இத்தன்மையன எனவும் ஆட்கொண்டு அறிவித்த அம்பலவன் என நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னையாரறிவார் வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் என்பதன் ஆற்றலால் வருவித்துரைத் துக்கொள்க . மதிமயங்கி அறிவுகெட்டு . மதிமயங்கியது சிரமைந்துடைமை யால் தான் இறைவனோடு ஒப்புடையான் என இறுமாந்து இகழ்ந்தது . மதிமயங்கியது பிரமன் செயல் . மயங்கி என்னும் செய்தெனெச்சம் ஏதுப்பொருட்டாய் உடை என்பதனோடு இயைந்தது . உடை தலை வினைத்தொகை . தலை எனப் பொதுப்படக்கூறினும் பிரமனது தலையோடு எனப் பொருள் கொள்க . தலையிற் பலிதேர் அம்பலவன் என்க . ' உடைதலையிற் பலிதேர்கொள்வர் ' ' ஊனமார் உடைதலை யிற் பலிதிரிவார் ( ஞான 323-9 ; 351-2 ) ' அன்றயன் சிரமரிந் ததிற்பலி கொண்டமரருக்கருள் வெளிப்படுத்தானை ( சுந் . 62-7 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . பிரமனது தலையோட்டைக் கரத்திற்றாங்கி வைரவமூர்த்தியாகி இறைவன் ஏற்றபலி செருக் கடைந்ததேவர்களின் குருதிப்பலியாகும் . இதனை பரமனை மதித்திடாப் பங்க யாசனன் ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர் குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம் ' ' . என்னும் கந்தபுராணக் கடவுள் வாழ்த்தானுமறிக . ( கடவுள் 9 ) தக்க யாகத்து வீரபத்திரக் கடவுளால் செய்யப்பட்ட தண்டங் களும் வைரவக் கடவுளால் பிரமன் முதலியோர்க்குச் செய்யப்பட்ட தண்டங்களும் இறைவன் செயலாகவே தேவார திருவாசகங்களிற் சொல்லப்பட்டு வருதல் அவர்தம்முட் பேதமின்மைபற்றியாகும் . இதன்கண் அம்பலவன் தேனார் கமலமே சென்றூதாய் கோத் தும்பி என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 2