திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

676 திருவாசக ஆராய்ச்சியுரை மெய்த்தேவர் உண்மைத் தேவர். தேவர் தேவர்- எல்லாத்தேவர் களுக்கும் தேவர் என்றது மகாதேவர் என்றவாறு. சிவபெருமானே மெய்த் தேவர். பிறர் தேவர்களுக்கும் இவரே தேவராவர் என்க. 'திருவிலி தீதிலி தேவர்க்குந் தேவன்" எனத் திருமந்திரத்தும் (2941) வருதல் காண்க, Toge பூதலத்தே பற்று அறப் பற்றி நின்ற தேவர்க்கே சென்று ஊதாய் என முடிக்க. இதன் கண், ''என் பற்றற நான் பற்றிநின்ற மெய்த்தேவர் தே வர்க்கே" என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க! 220. வைத்தநிதி பெண்டீர் மக்கள் குலங் கல்வியென்னும் பித்த வுலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ் சித்த விகாரக் கலக்கந் தெளிளித்த வித்தசத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பி. 5 ப - ரை. கோதும்பீ - அரசவண்டே, வைத்த நிதி பெண்டீர் மக் கள் குலம் கல்வி என்னும் பித்த உலகில் - தேடிவைத்த செல்வம் மனைவி மக்கள் குலம் கல்வி என்று சொல்லப்படுகின்ற பித்தினைத் தந்து மயக்குகின்ற இந்நிலவுலகில், பிறப்போடு இறப்பு என்னும் சித்த விகாரம் கலக்கம் தெளிவித்த - பிறப்பும் இறப்பும் என்று சொல்லப்படுகின்ற இவற்றால் உண்டாகின்ற மன மாறுபாடாகிய கலக்கத்தினை நீக்கி அறிவினைத் தெளிவுறச் செய்த, வித்தகம் தேவர்க்கே -ஞானாசாரியனாகிய இறைவனது திருவடித் தாமரை மல ரிலேயே, சென்று ஊதாய்- சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக. கோத்தும்பீ, செல்வம் பெண்டீர் மக்கள் குலம்கல்வி என்றுசொல் லப்படுகின்ற பித்தினைத் தந்து மயக்குகின்ற இந்நிலவுலகில், பிறப்பும் இறப்பும் என்று சொல்லப்படுகின்ற இவற்றால் உண்டாகின்ற சித்த விகாரக் கலக்கத்தினைத் தெளிவித்த வித்தகத் தேவரின் திருவடித் தாமரை மலரிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர் வாயாக என்பதாம். நிதி பெண்டீர் மக்கள் குலம் கல்வி என்பன மனமயக்கத்தினைத் தரும் கருவிகளாகவும் அவற்றைப் பித்து எனக் கருவியைக் காரிய மாக உபசரித்தவாறு. பிறப்போடிறப்பென்னும் சித்த விகாரம் என் றது சித்தவிகாரத்திற்கு ஏதுவான பிறப்பிறப்புக்களைச் சித்தவிகாரம்
676 திருவாசக ஆராய்ச்சியுரை மெய்த்தேவர் உண்மைத் தேவர் . தேவர் தேவர்- எல்லாத்தேவர் களுக்கும் தேவர் என்றது மகாதேவர் என்றவாறு . சிவபெருமானே மெய்த் தேவர் . பிறர் தேவர்களுக்கும் இவரே தேவராவர் என்க . ' திருவிலி தீதிலி தேவர்க்குந் தேவன் எனத் திருமந்திரத்தும் ( 2941 ) வருதல் காண்க Toge பூதலத்தே பற்று அறப் பற்றி நின்ற தேவர்க்கே சென்று ஊதாய் என முடிக்க . இதன் கண் ' ' என் பற்றற நான் பற்றிநின்ற மெய்த்தேவர் தே வர்க்கே என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க ! 220. வைத்தநிதி பெண்டீர் மக்கள் குலங் கல்வியென்னும் பித்த வுலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ் சித்த விகாரக் கலக்கந் தெளிளித்த வித்தசத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பி . 5 - ரை . கோதும்பீ - அரசவண்டே வைத்த நிதி பெண்டீர் மக் கள் குலம் கல்வி என்னும் பித்த உலகில் - தேடிவைத்த செல்வம் மனைவி மக்கள் குலம் கல்வி என்று சொல்லப்படுகின்ற பித்தினைத் தந்து மயக்குகின்ற இந்நிலவுலகில் பிறப்போடு இறப்பு என்னும் சித்த விகாரம் கலக்கம் தெளிவித்த - பிறப்பும் இறப்பும் என்று சொல்லப்படுகின்ற இவற்றால் உண்டாகின்ற மன மாறுபாடாகிய கலக்கத்தினை நீக்கி அறிவினைத் தெளிவுறச் செய்த வித்தகம் தேவர்க்கே -ஞானாசாரியனாகிய இறைவனது திருவடித் தாமரை மல ரிலேயே சென்று ஊதாய்- சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக . கோத்தும்பீ செல்வம் பெண்டீர் மக்கள் குலம்கல்வி என்றுசொல் லப்படுகின்ற பித்தினைத் தந்து மயக்குகின்ற இந்நிலவுலகில் பிறப்பும் இறப்பும் என்று சொல்லப்படுகின்ற இவற்றால் உண்டாகின்ற சித்த விகாரக் கலக்கத்தினைத் தெளிவித்த வித்தகத் தேவரின் திருவடித் தாமரை மலரிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர் வாயாக என்பதாம் . நிதி பெண்டீர் மக்கள் குலம் கல்வி என்பன மனமயக்கத்தினைத் தரும் கருவிகளாகவும் அவற்றைப் பித்து எனக் கருவியைக் காரிய மாக உபசரித்தவாறு . பிறப்போடிறப்பென்னும் சித்த விகாரம் என் றது சித்தவிகாரத்திற்கு ஏதுவான பிறப்பிறப்புக்களைச் சித்தவிகாரம்