திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருக்கோத்தும்பி 677 என உபசரித்தவாறாகும். பிறப்போடிறப்பென்னும் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த என்றதனால் வைத்தநிதி பெண்டீர் மக்கள் குலம் கல்வி என்னும் பித்தம் தெளிவித்தமையும் கொள்ளப்படும். "நிதி பெண்டீர் மக்கள் குலம் கல்வியென்னும்" என்றதனால் புறப் பற்றும், 'சித்தவிகாரக் கலக்கம் தெளிவித்த" என்றதனால் அகப்பற் றும் நீக்கியமை கூறப்பட்டது. கலக்கம் என்பதற்குக் கலக்கத்தினை நீக்கி என ஒரு சொல் வருவித்து அதனைத் தெளிவித்த என்னும் வினை யொடு முடிக்க. தெளிவித்த - அறிவினைத் தெளிவித்த. வித்தகத் தேவர் -ஞானவடிவாகிய தேவர் எனினுமாம். சர்வ வல்லமையை யுடைய தேவர் என்றுரைப்பினுமமையும். வித்தகம் - சதுரப்பாடு. (திருக்கோவை 106 பேர்.) உலகில் கலக்கம் தெளிவித்த தேவர்க்கே சென்று ஊதாய் என் வினைமுடிபு செய்க. இதன் கண். "கலக்கம் தெளிவித்த வித்தகத்தேவர்" என றதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதகுதல் காண்க. 221 சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக் கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உருவறியோம் சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பி. 6 ப - ரை. கோ தும்பீ - அரச வண்டே, சட்டு நினைக்க மனத்து அமுது ஆம் சங்கரனை - சிறிதளவு நினைக்கவே மணத்தின்கண் அமு தம் போல இனிமையைத் தருகின்ற சங்கரனுடைய, கேடு படா திரு அடியை மறப்பேனோ - ஒருகாலத்தும் கெடுதலில்லாத திருவடியை நான் மறந்து விடுவேனோ? மறவேன்; கெட்டேன் - மறந்தால் கெட் டொழிவேன்: ஓட்டாத பாவி தொழும்பரை நாம் உரு அறியோம்- அவன் திருவடிகளைப் பொருந்தாத பாவிகளான ஐம்பொறிகளின் அடிமைகளின் வடிவத்தையும் நாம் பார்க்கமாட்டோம். சிட்டாய் சிட்டற்கே - உயர்வுடையோர்க்கு உயர்வுடையோனது திருவடிமலர் களிலேயே, சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனைப் பருகுவாயாக. கோத்தும்பீ! சற்று நினைத்தாலும் மனத்தின் கண் அமுதம்போல இனிமையைத் தருகின்ற சங்கரனுடைய திருவடியை மறப்பேனோ? மறந்தால் கெட்டொழிவேன்; அவன் திருவடியை மனத்தின்கண் பொருந்தாத பாவிகளான ஐம்பொறிகளின் தொழும்பரது வடிவத்
திருக்கோத்தும்பி 677 என உபசரித்தவாறாகும் . பிறப்போடிறப்பென்னும் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த என்றதனால் வைத்தநிதி பெண்டீர் மக்கள் குலம் கல்வி என்னும் பித்தம் தெளிவித்தமையும் கொள்ளப்படும் . நிதி பெண்டீர் மக்கள் குலம் கல்வியென்னும் என்றதனால் புறப் பற்றும் ' சித்தவிகாரக் கலக்கம் தெளிவித்த என்றதனால் அகப்பற் றும் நீக்கியமை கூறப்பட்டது . கலக்கம் என்பதற்குக் கலக்கத்தினை நீக்கி என ஒரு சொல் வருவித்து அதனைத் தெளிவித்த என்னும் வினை யொடு முடிக்க . தெளிவித்த - அறிவினைத் தெளிவித்த . வித்தகத் தேவர் -ஞானவடிவாகிய தேவர் எனினுமாம் . சர்வ வல்லமையை யுடைய தேவர் என்றுரைப்பினுமமையும் . வித்தகம் - சதுரப்பாடு . ( திருக்கோவை 106 பேர் . ) உலகில் கலக்கம் தெளிவித்த தேவர்க்கே சென்று ஊதாய் என் வினைமுடிபு செய்க . இதன் கண் . கலக்கம் தெளிவித்த வித்தகத்தேவர் என றதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதகுதல் காண்க . 221 சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக் கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உருவறியோம் சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பி . 6 - ரை . கோ தும்பீ - அரச வண்டே சட்டு நினைக்க மனத்து அமுது ஆம் சங்கரனை - சிறிதளவு நினைக்கவே மணத்தின்கண் அமு தம் போல இனிமையைத் தருகின்ற சங்கரனுடைய கேடு படா திரு அடியை மறப்பேனோ - ஒருகாலத்தும் கெடுதலில்லாத திருவடியை நான் மறந்து விடுவேனோ ? மறவேன் ; கெட்டேன் - மறந்தால் கெட் டொழிவேன் : ஓட்டாத பாவி தொழும்பரை நாம் உரு அறியோம் அவன் திருவடிகளைப் பொருந்தாத பாவிகளான ஐம்பொறிகளின் அடிமைகளின் வடிவத்தையும் நாம் பார்க்கமாட்டோம் . சிட்டாய் சிட்டற்கே - உயர்வுடையோர்க்கு உயர்வுடையோனது திருவடிமலர் களிலேயே சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனைப் பருகுவாயாக . கோத்தும்பீ ! சற்று நினைத்தாலும் மனத்தின் கண் அமுதம்போல இனிமையைத் தருகின்ற சங்கரனுடைய திருவடியை மறப்பேனோ ? மறந்தால் கெட்டொழிவேன் ; அவன் திருவடியை மனத்தின்கண் பொருந்தாத பாவிகளான ஐம்பொறிகளின் தொழும்பரது வடிவத்