திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

678 திருவாசக ஆராய்ச்சியுரை தையும் நாம் பார்க்கமாட்டோம்; சிட்டாய சிட்டனது திருவடி மலர்களிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனைப் பருகு வாயாக என்பதாம். சட்டு - சற்று: விரைவாக எனினுமாம். சிறிதளவு நினைத்த அள விலேயே உள்ளத்தின்கண் அருளமுதத்தினை ஊறச் செய்தலின், ஒ வியப்புப் பொருளில் வந்தது. சங்கரன் - சம்-கரன், சுகத்தைச்செய் பவன். ''சார்ந்தவர்க் கின்பங் கொடுக்குந் தழல்வண்ணன்" எனத் திருமந்திரத்தும் (2114) வருதல் காண்க. சற்று நினைத்த அளவில் அருள் அமுதத்தினைப் பெருகச் செய்தான். சங்கரனை என்பதில் ஐ. ஆறாவதின் பொருளில் வந்தது. மறப்பேனோ என்பதில் ஓ எதிர்மறை. அதனாற்றலால் மறந்தேனாகில் என வருவித்து, கெட்டேன் என்பத னோடு முடிக்க. கெடுவேன் எனற்பாலது துணிவுபற்றிக் கெட்டேன் என இறந்த காலத்தாற் கூறப்பட்டது. இனி, கெட்டேன் மறப் பேனோ எனக் கிடந்தவாறே கூட்டி, இத்துணைக்காலமும் பிறந்திறந்து வருந்திக் கேடடைந்த யான் இனி மறப்பேனோ என உரைப்பினு மமையும். ஓட்டுதல் - பொருந்துதல். என்றது, இடைவிடாது தியானித்தலை. பாவித்தொழும்பர்-ஒருமை பன்மை மயக்கம். பாவிகளாகிய தொழும் பர் என்பது கருத்து. தொழும்பர் - அடிமைகள். என்றது, ஐம் பொறி களின் அடிமைகள் என்றவாறு. உருவறியோம் என்றது, அத்தொழும் பரின் உருவத்தையும் பார்க்கமாட்டோம் என்றவாறு. சிட்டன் - சிஷ் டன் என்னும் வடமொழிச் சிதைவு. உயர்வுடையோன் என்பது பொருள். சிட்டாய சிட்டன் - மேலோர்க்கு மேலோன். சங்கரனைத் திருவடியை மறப்பேனா; மறந்தால் கெட்டேன்; தொழும்பரை உருவை அறியோம்; சிட்டாய சிட்டற்கே ஊதாய் என வினைமுடிபு செய்க. இதன்கண் "சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனை கேடு படாத் திருவடியை மறப்பேனோ" என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 222 ஒன் றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை யேற்றுவித்த என்றாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான் குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 7 பரை. கோ தும்பீ - அரசவண்டே, ஒன்று ஆய்-சர்வசங்கார காலத்தில் தான் ஒருவனே ஆகியும், முளைத்து எழுந்து-சிருட்டிஆரம்ப காலத்தில் வித்திலிருந்து முளை தோன்றுவது போலச் சுத்தமாயையி
678 திருவாசக ஆராய்ச்சியுரை தையும் நாம் பார்க்கமாட்டோம் ; சிட்டாய சிட்டனது திருவடி மலர்களிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனைப் பருகு வாயாக என்பதாம் . சட்டு - சற்று : விரைவாக எனினுமாம் . சிறிதளவு நினைத்த அள விலேயே உள்ளத்தின்கண் அருளமுதத்தினை ஊறச் செய்தலின் வியப்புப் பொருளில் வந்தது . சங்கரன் - சம் - கரன் சுகத்தைச்செய் பவன் . ' ' சார்ந்தவர்க் கின்பங் கொடுக்குந் தழல்வண்ணன் எனத் திருமந்திரத்தும் ( 2114 ) வருதல் காண்க . சற்று நினைத்த அளவில் அருள் அமுதத்தினைப் பெருகச் செய்தான் . சங்கரனை என்பதில் . ஆறாவதின் பொருளில் வந்தது . மறப்பேனோ என்பதில் எதிர்மறை . அதனாற்றலால் மறந்தேனாகில் என வருவித்து கெட்டேன் என்பத னோடு முடிக்க . கெடுவேன் எனற்பாலது துணிவுபற்றிக் கெட்டேன் என இறந்த காலத்தாற் கூறப்பட்டது . இனி கெட்டேன் மறப் பேனோ எனக் கிடந்தவாறே கூட்டி இத்துணைக்காலமும் பிறந்திறந்து வருந்திக் கேடடைந்த யான் இனி மறப்பேனோ என உரைப்பினு மமையும் . ஓட்டுதல் - பொருந்துதல் . என்றது இடைவிடாது தியானித்தலை . பாவித்தொழும்பர் - ஒருமை பன்மை மயக்கம் . பாவிகளாகிய தொழும் பர் என்பது கருத்து . தொழும்பர் - அடிமைகள் . என்றது ஐம் பொறி களின் அடிமைகள் என்றவாறு . உருவறியோம் என்றது அத்தொழும் பரின் உருவத்தையும் பார்க்கமாட்டோம் என்றவாறு . சிட்டன் - சிஷ் டன் என்னும் வடமொழிச் சிதைவு . உயர்வுடையோன் என்பது பொருள் . சிட்டாய சிட்டன் - மேலோர்க்கு மேலோன் . சங்கரனைத் திருவடியை மறப்பேனா ; மறந்தால் கெட்டேன் ; தொழும்பரை உருவை அறியோம் ; சிட்டாய சிட்டற்கே ஊதாய் என வினைமுடிபு செய்க . இதன்கண் சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனை கேடு படாத் திருவடியை மறப்பேனோ என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 222 ஒன் றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை யேற்றுவித்த என்றாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான் குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ . 7 பரை . கோ தும்பீ - அரசவண்டே ஒன்று ஆய் - சர்வசங்கார காலத்தில் தான் ஒருவனே ஆகியும் முளைத்து எழுந்து - சிருட்டிஆரம்ப காலத்தில் வித்திலிருந்து முளை தோன்றுவது போலச் சுத்தமாயையி