திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

223 திருக்கோத்தும்பி கரணங்க ளெல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன் சரணங்க ளேசென்று சார்தலுமே தானெனக்கு மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த கருணைக்கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 681 ப-ரை. கோ தும்பீ - அரச வண்டே. கரணங்கள் எல்லாம் கடந்து நின்ற கறை மிடற்றன் - எனது அகக் கருவிகள் புறக் கரு விகள் எல்லாவற்றிற்கும் அறியப்படாது அப்பாற்பட்டுநின்ற கறுப் பையுடைத்தாகிய மிடற்றையுடைய இறைவனது சரணங்களே சென்று சார்தலுமே - திருவடிகளாகிய புகலிடத்தை யான் சென்று சேர்ந்த அளவில், தான் எனக்கு மரணம் பிறப்பு என்ற இவை இரண்டின் தான் எனக்குளவாகிய இறப்புப் பிறப்பு என்ற இரண் டினால் வரக் கடவ, மயக்கு அறுத்த - மயக்கத்தைப் போக்கியருளிய, கருணை கடலுக்கே - கருணைக் கடலாகிய அவ்விறைவனது திருவடி மலர்களிலேயே, சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின் பத்தேனை நுகர்வாயாக. கோத்தும்பீ, கரணங்கள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு நின்ற கறைமிடற்றையுடைய இறைவனது திருவடியாகிய புகலி டத்தை யான் சென்று சேர்ந்த அளவில் தான் எனக்குளவாகிய மர ணம் பிறப்பு என்ற இரண்டினால் வரக்கடவ மயக்கத்தைப் போக்கி யருளிய அவ்விறைவனது திருவடிமலர்களிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக என்பதாம். கரணங்கள் - கருவிகள். அவை அகக் கருவி புறக் கருவி என இருவகைப்படும். அகக் கருவி - மனம், புத்தி, சித்தம் அகங்காரம். புறக் கருவி - மெய், வாய், கண், மூக்கு, செவி. உயிர்களின் அகக் கருவிகளாலும் புறக்கருவிகளாலும் இறைவனை அறிய முடியாமைபற் றிக் "கரணங்களெல்லாம் கடந்து நின்ற" என்றார். நின்ற மிடற் றன் என இயையும். கறை மிடற்றன் - கறுப்பையுடைத்தாகிய மிடற்றையுடையவன். "காரென்ன வாருங் கறைமிடற் றம்பலவன்'' (56) என அடிகள் திருக்கோவையாரில் அருளியமையுங் காண்க. 7 சரணம் - திருவடி; புகலிடம். சார்தல் - இடைவிடாது தியா னித்தல். தான் என்றது இறைவனை. எனக்கு அறுத்த என இயை யும். இரண்டின் மயக்கு என்றது இறப்புப் பிறப்புக்களால் வரும் சித்த விகாரக் கலக்கத்தைக் குறித்தது. பிறப்போடிறப்பென்னும் சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த (கோத். 6) என அடிகள் அருளி யமை காண்க.
223 திருக்கோத்தும்பி கரணங்க ளெல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன் சரணங்க ளேசென்று சார்தலுமே தானெனக்கு மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த கருணைக்கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ . 681 - ரை . கோ தும்பீ - அரச வண்டே . கரணங்கள் எல்லாம் கடந்து நின்ற கறை மிடற்றன் - எனது அகக் கருவிகள் புறக் கரு விகள் எல்லாவற்றிற்கும் அறியப்படாது அப்பாற்பட்டுநின்ற கறுப் பையுடைத்தாகிய மிடற்றையுடைய இறைவனது சரணங்களே சென்று சார்தலுமே - திருவடிகளாகிய புகலிடத்தை யான் சென்று சேர்ந்த அளவில் தான் எனக்கு மரணம் பிறப்பு என்ற இவை இரண்டின் தான் எனக்குளவாகிய இறப்புப் பிறப்பு என்ற இரண் டினால் வரக் கடவ மயக்கு அறுத்த - மயக்கத்தைப் போக்கியருளிய கருணை கடலுக்கே - கருணைக் கடலாகிய அவ்விறைவனது திருவடி மலர்களிலேயே சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின் பத்தேனை நுகர்வாயாக . கோத்தும்பீ கரணங்கள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு நின்ற கறைமிடற்றையுடைய இறைவனது திருவடியாகிய புகலி டத்தை யான் சென்று சேர்ந்த அளவில் தான் எனக்குளவாகிய மர ணம் பிறப்பு என்ற இரண்டினால் வரக்கடவ மயக்கத்தைப் போக்கி யருளிய அவ்விறைவனது திருவடிமலர்களிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக என்பதாம் . கரணங்கள் - கருவிகள் . அவை அகக் கருவி புறக் கருவி என இருவகைப்படும் . அகக் கருவி - மனம் புத்தி சித்தம் அகங்காரம் . புறக் கருவி - மெய் வாய் கண் மூக்கு செவி . உயிர்களின் அகக் கருவிகளாலும் புறக்கருவிகளாலும் இறைவனை அறிய முடியாமைபற் றிக் கரணங்களெல்லாம் கடந்து நின்ற என்றார் . நின்ற மிடற் றன் என இயையும் . கறை மிடற்றன் - கறுப்பையுடைத்தாகிய மிடற்றையுடையவன் . காரென்ன வாருங் கறைமிடற் றம்பலவன் ' ' ( 56 ) என அடிகள் திருக்கோவையாரில் அருளியமையுங் காண்க . 7 சரணம் - திருவடி ; புகலிடம் . சார்தல் - இடைவிடாது தியா னித்தல் . தான் என்றது இறைவனை . எனக்கு அறுத்த என இயை யும் . இரண்டின் மயக்கு என்றது இறப்புப் பிறப்புக்களால் வரும் சித்த விகாரக் கலக்கத்தைக் குறித்தது . பிறப்போடிறப்பென்னும் சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த ( கோத் . 6 ) என அடிகள் அருளி யமை காண்க .