திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

686 திருவாசக ஆராய்ச்சியுரை என்னை அடிமைகொண்டதனை மெய்யடியார்களும் உலகின்கணுள் ளாருமாகிய எல்லாரும் தாமாகவே அறிவார்கள், ஆன கருணையும் அங்கு உற்று - அன்புத் தகுதி இல்லாத என்னையும் ஆட்கொள்ளுதற் கான கருணையும் அவன்பாலுள்ளது, கோன்தான் அவனே என்னை கூட- தலைவனாகிய அவனே வலியவந்து என்னைக்கூடும்படி, குளிர்ந்து ஊதாய் - அவன் திருவடி மலர்களில் உளங்குளிர்ந்து சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனைப் பருகி முறையிடுவாயாக. கோத்தும்பீ, நான் தன்னிடத்து அன்புடைமையும் அஃதின்மையு மாய் இருத்தலை, நானும் அவ்விறைவனும் அறிவோம். பிறர் அறியார். தான் என்னை அடிமை கொண்டதனை எல்லாரும் அறிவார்கள்.என்பா லுண்டான அவ்விறைவனது கருணையும் அவன்பாலுள்ளதே. தலைவ னாகிய அவனே தன் கருணையால் தானாக என்னைவந்து கூடும்படி அவன் திருவடிகளில் உள்ளங் குளிர்ந்து ஊதிப் பேரின்பத் தேனைப் பருகிமுறையிடுவாயாக என்பதாம். LIC நான் தனக்கு அன்பின்மை நானும் தானும் அறிவோம் என் றது நான் தனக்குச் செய்யும் அன்பினையோ அன்பின்மையையோ நானும் அவ்விறைவனும் அறிய முடியுமன்றிப் பிறர் அறியமுடியாது என்றவாறு. நான் தனக்கு அன்பின்மை என அடிகள் கூறினும் இறை வன் வலியவந்து ஆட்கொண்டமையால் அவ்வன்பு பெரிதுமுடையார் என்பது தானே போதரும் என்க. எல்லாரும் என்றது ஆட்கொள்ள வந்த இறைவனுடன் சேர்ந்த மெய்யடியார்களும் உலகினருமாகிய எல்லாரும் என்றவாறு. தாம் என்றதனைத் தாமாக என உரைத்தலன்றி அசைநிலையாகவும் கொள் ளலாம். ஆன கருணை - என்பால் தனக்குண்டான கருணை. அங்கு என்னும் சுட்டு இறைவனைக் குறித்தது. உற்றதே என்பதே உற்றே என இடைக் குறைந்து நின்றது. கோன் தான் அவனே என்னைக்கூட என மாறிக் கூட்டி அவ்விறைவன் தானாக வலியவந்து ஆட்கொண்டதுபோல் இப் போதும் வலியவந்து கூடும்படியென வுரைக்க. எவ்வகை மேம்பாட் டினர்க்கும் அடைதற்கரிய தலைவனை யானாகச் சென்றடையும் ஆற்ற லில்லேனாதலின் தன் கருணையால் என்பால் வந்து சேர்தலும் அத்தலை வன் கடனேயாகும் எனத் தூதுசெல்லும் வண்டின்பால் உரைக்குமுகத் தால் தன்னை வந்து அடையும்படி அடிகள் இறைவனிடத்து வேண்டிய வாறு. இத் திருப்பாடல் ஒரு தலைவி தன் தலைவனாகிய இறைவனிடத் துத் தானாகச் சென்றடையும் ஆற்றலின்மையால் அவ்விறைவன்
686 திருவாசக ஆராய்ச்சியுரை என்னை அடிமைகொண்டதனை மெய்யடியார்களும் உலகின்கணுள் ளாருமாகிய எல்லாரும் தாமாகவே அறிவார்கள் ஆன கருணையும் அங்கு உற்று - அன்புத் தகுதி இல்லாத என்னையும் ஆட்கொள்ளுதற் கான கருணையும் அவன்பாலுள்ளது கோன்தான் அவனே என்னை கூட- தலைவனாகிய அவனே வலியவந்து என்னைக்கூடும்படி குளிர்ந்து ஊதாய் - அவன் திருவடி மலர்களில் உளங்குளிர்ந்து சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனைப் பருகி முறையிடுவாயாக . கோத்தும்பீ நான் தன்னிடத்து அன்புடைமையும் அஃதின்மையு மாய் இருத்தலை நானும் அவ்விறைவனும் அறிவோம் . பிறர் அறியார் . தான் என்னை அடிமை கொண்டதனை எல்லாரும் அறிவார்கள்.என்பா லுண்டான அவ்விறைவனது கருணையும் அவன்பாலுள்ளதே . தலைவ னாகிய அவனே தன் கருணையால் தானாக என்னைவந்து கூடும்படி அவன் திருவடிகளில் உள்ளங் குளிர்ந்து ஊதிப் பேரின்பத் தேனைப் பருகிமுறையிடுவாயாக என்பதாம் . LIC நான் தனக்கு அன்பின்மை நானும் தானும் அறிவோம் என் றது நான் தனக்குச் செய்யும் அன்பினையோ அன்பின்மையையோ நானும் அவ்விறைவனும் அறிய முடியுமன்றிப் பிறர் அறியமுடியாது என்றவாறு . நான் தனக்கு அன்பின்மை என அடிகள் கூறினும் இறை வன் வலியவந்து ஆட்கொண்டமையால் அவ்வன்பு பெரிதுமுடையார் என்பது தானே போதரும் என்க . எல்லாரும் என்றது ஆட்கொள்ள வந்த இறைவனுடன் சேர்ந்த மெய்யடியார்களும் உலகினருமாகிய எல்லாரும் என்றவாறு . தாம் என்றதனைத் தாமாக என உரைத்தலன்றி அசைநிலையாகவும் கொள் ளலாம் . ஆன கருணை - என்பால் தனக்குண்டான கருணை . அங்கு என்னும் சுட்டு இறைவனைக் குறித்தது . உற்றதே என்பதே உற்றே என இடைக் குறைந்து நின்றது . கோன் தான் அவனே என்னைக்கூட என மாறிக் கூட்டி அவ்விறைவன் தானாக வலியவந்து ஆட்கொண்டதுபோல் இப் போதும் வலியவந்து கூடும்படியென வுரைக்க . எவ்வகை மேம்பாட் டினர்க்கும் அடைதற்கரிய தலைவனை யானாகச் சென்றடையும் ஆற்ற லில்லேனாதலின் தன் கருணையால் என்பால் வந்து சேர்தலும் அத்தலை வன் கடனேயாகும் எனத் தூதுசெல்லும் வண்டின்பால் உரைக்குமுகத் தால் தன்னை வந்து அடையும்படி அடிகள் இறைவனிடத்து வேண்டிய வாறு . இத் திருப்பாடல் ஒரு தலைவி தன் தலைவனாகிய இறைவனிடத் துத் தானாகச் சென்றடையும் ஆற்றலின்மையால் அவ்விறைவன்