திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருக்கோத்தும்பி கருவாய் அப்புறமாய் இப்புறத்து வந்தருளி ஆண்டுகொண்ட தேவர்க்கே சென்றூதாய் என வினைமுடிபு செய்க. இதன் கண் "அந்தணனாய் ஆண்டுகொண்ட" என்பதனால் சிவனோ டைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 14 moje, 229 நானுமென் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் தானுந் தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல் வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான் தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 689 ப - ரை. கோதும்பீ - அரசவண்டே, தாழ்சடையோன் தானும் தன் தையலும் ஆண்டிலனேல் - நீண்டு தொங்குகின்ற சடையினையுடைய இறைவன் தானும் தன் தேவியுமாக எழுந்தருளிவந்து என்னை ஆட் கொண்டிலனாயின், நானும் என் சிந்தையும் நாயகனுக்கு எவ்விடத் தோம் -நானும் என்மனமும் தலைவனாகிய அவ்விறைவனுக்குத் தூர மான எவ்விடத்திலுள்ளோமோ? அங்ஙனமாக வொட்டாது தனது அகத்தொண்டில் சேரும்வண்ணம் ஆட்கொண்டருளிய, வானும் திசை களும் மாகடலும் ஆயபிரான் - வானுலகும் பத்துத்திசைகளும் பெரிய கடலும் தானேயாகிய அப்பெருமானது, தேன் உந்து சே அடிக்கே- பேரின்பத் தேன் தத்திப்பாயும் செவ்விய திருவடி மலர்களிலேயே, சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர் வாயாக. கோத்தும்பீ, இறைவன் தானும் தேவியுமாகவந்து என்னை ஆட் கொண்டிலனாயின், நானும் என் சிந்தையும் நாயகனாகிய அவ்விறைவ னுக்கு எவ்விடத்திலுள்ளோமாவோம். அங்ஙனமாகவொட்டாது தனது அகத்தொண்டில் சேரும்வண்ணம் ஆட்கொண்டருளிய வானும் திசைகளும் கடலும் தானேயாகிய அப்பெருமானது பேரின் பத்தேன் தத்திப் பாயும் திருவடி மலர்களிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக என்பதாம். நான் என்ற அளவில் அமையாது சிந்தையை வியந்தெடுத்துக் கூறியது சிந்தையை யடக்கியே சும்மாவிருக்கின்ற திறமரிதாதல்பற்றி சிந்தை என்னும் அஃறிணைப்பெயர் நானும் என்னும் தன்மைப் பெய ரோடு இயைந்து எவ்விடத்தோம் என்னும் தன்மைப் பன்மை வினை முற்றுக்கொண்டது. நாயகனுக்கு என்னும் நான்காவதற்கு இயைய, எவ்விடத்தோம் என்பதற்குத் தூரமான எவ்விடத்தோம் என ஒரு சொல் வருவிக்கப்பட்டது. எவ்விடத்தோம் என்றது இறைவனை 74
திருக்கோத்தும்பி கருவாய் அப்புறமாய் இப்புறத்து வந்தருளி ஆண்டுகொண்ட தேவர்க்கே சென்றூதாய் என வினைமுடிபு செய்க . இதன் கண் அந்தணனாய் ஆண்டுகொண்ட என்பதனால் சிவனோ டைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 14 moje 229 நானுமென் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் தானுந் தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல் வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான் தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ . 689 - ரை . கோதும்பீ - அரசவண்டே தாழ்சடையோன் தானும் தன் தையலும் ஆண்டிலனேல் - நீண்டு தொங்குகின்ற சடையினையுடைய இறைவன் தானும் தன் தேவியுமாக எழுந்தருளிவந்து என்னை ஆட் கொண்டிலனாயின் நானும் என் சிந்தையும் நாயகனுக்கு எவ்விடத் தோம் -நானும் என்மனமும் தலைவனாகிய அவ்விறைவனுக்குத் தூர மான எவ்விடத்திலுள்ளோமோ ? அங்ஙனமாக வொட்டாது தனது அகத்தொண்டில் சேரும்வண்ணம் ஆட்கொண்டருளிய வானும் திசை களும் மாகடலும் ஆயபிரான் - வானுலகும் பத்துத்திசைகளும் பெரிய கடலும் தானேயாகிய அப்பெருமானது தேன் உந்து சே அடிக்கே பேரின்பத் தேன் தத்திப்பாயும் செவ்விய திருவடி மலர்களிலேயே சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர் வாயாக . கோத்தும்பீ இறைவன் தானும் தேவியுமாகவந்து என்னை ஆட் கொண்டிலனாயின் நானும் என் சிந்தையும் நாயகனாகிய அவ்விறைவ னுக்கு எவ்விடத்திலுள்ளோமாவோம் . அங்ஙனமாகவொட்டாது தனது அகத்தொண்டில் சேரும்வண்ணம் ஆட்கொண்டருளிய வானும் திசைகளும் கடலும் தானேயாகிய அப்பெருமானது பேரின் பத்தேன் தத்திப் பாயும் திருவடி மலர்களிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக என்பதாம் . நான் என்ற அளவில் அமையாது சிந்தையை வியந்தெடுத்துக் கூறியது சிந்தையை யடக்கியே சும்மாவிருக்கின்ற திறமரிதாதல்பற்றி சிந்தை என்னும் அஃறிணைப்பெயர் நானும் என்னும் தன்மைப் பெய ரோடு இயைந்து எவ்விடத்தோம் என்னும் தன்மைப் பன்மை வினை முற்றுக்கொண்டது . நாயகனுக்கு என்னும் நான்காவதற்கு இயைய எவ்விடத்தோம் என்பதற்குத் தூரமான எவ்விடத்தோம் என ஒரு சொல் வருவிக்கப்பட்டது . எவ்விடத்தோம் என்றது இறைவனை 74