திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை அணுகமாட்டாது அகன்றிருப்போம் என்றவாறு. தையல் என்றது திருவருட்சத்தியை. திருவருட்சத்தி பதிந்த நிலையிலேயே இறைவன் ஆட்கொள்வான். 690 தானும் தன் தையலும் என உம்மைகொடுத்து எண்ணினும் தான் தையலுடன் வந்து ஆண்டிலனேல் என்பது கருத்தாகக் கொள்க. "தானும் தேரும் பாகனும் வந்து நலனுண்டான்" என்புழி, தான் தேரொடு பாகனொடு வந்து நலனுண்டான் எனப் பொருள்படுமாறு காண்க. தானும் தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல் எவ்விடத்தோம் என்றதன் ஆற்றலால், ஆண்டமையால் தனது அகத்தொண்டில் சேர்த்தருளியமை வருவித்துரைக்கப்பட்டது. சேர்த்தருளிய பிரான் என இயையும். வானுந் திசைகளும் ம மாய பிரான் என்றார், அவற்றுள் இறைவன் கலந்திருத்தல் பற்றி. வானும் என்றதனால் மேலுள்ள உலகங்களும், திசைகளும் என்றதனால் திசைகளிலுள்ள உலகங்களும் கொள்ளப்படும். தேனுந்து - தேன் தத்திப்பாயும்.'தேனுந்து மாமலர்" (திருமந். 1832) என்பது காண்க. பிரான்தேனுந்து சேவடி என்க. ''அறப்பெருங்கூடற் பிறைச்சடைப் பெருமான் திருவடிப் பெருந்தேன்" எனக் கல்லாடத்தும் (48-13-4) "அம்பலவர் தேனுந்து மலர்ப்பாதத்து" எனப் பெரியபுராணத்தும் (திருநாவு.101) வருவன காண்க. இதன்கண் "தேனுந்து சேவடிக்கே" என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 230 உள்ளப் படாத திருவுருவை யுள்ளுதலும் கள்ளப்படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரானெம்பி ரானென்னை வேறேயாட் கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பி. 15 ப - ரை. கோதும்பீ - அரசவண்டே. உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும் - மனத்தினால் நினைக்கமுடியாத இறைவனது சொரூப இலக்கணத்தை அவ்விறைவன் திருவருள் ஞானத்தால் அகத்தே நினைந்து அறிதலும், சள்ளப்படாத களிவந்த மறைக்கப்படாத மகிழ்ச்சியுடன் வலிய எழுந்தருளிவந்த, வான் கருணை வெள்ளப் பிரான் - பேரருள் வெள்ளத்தையுடைய தலைவனும், எம்பிரான் - எங்கள் தலைவனும், என்னை வேறே ஆட்கொள் அப்பிரானுக்கே - என்னைத் தனியாக அடிமைகொண்டருளும் தலைவனுமாகிய அவ் விறைவனது திருவடி மலர்களிலேயே, சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக.
திருவாசக ஆராய்ச்சியுரை அணுகமாட்டாது அகன்றிருப்போம் என்றவாறு . தையல் என்றது திருவருட்சத்தியை . திருவருட்சத்தி பதிந்த நிலையிலேயே இறைவன் ஆட்கொள்வான் . 690 தானும் தன் தையலும் என உம்மைகொடுத்து எண்ணினும் தான் தையலுடன் வந்து ஆண்டிலனேல் என்பது கருத்தாகக் கொள்க . தானும் தேரும் பாகனும் வந்து நலனுண்டான் என்புழி தான் தேரொடு பாகனொடு வந்து நலனுண்டான் எனப் பொருள்படுமாறு காண்க . தானும் தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல் எவ்விடத்தோம் என்றதன் ஆற்றலால் ஆண்டமையால் தனது அகத்தொண்டில் சேர்த்தருளியமை வருவித்துரைக்கப்பட்டது . சேர்த்தருளிய பிரான் என இயையும் . வானுந் திசைகளும் மாய பிரான் என்றார் அவற்றுள் இறைவன் கலந்திருத்தல் பற்றி . வானும் என்றதனால் மேலுள்ள உலகங்களும் திசைகளும் என்றதனால் திசைகளிலுள்ள உலகங்களும் கொள்ளப்படும் . தேனுந்து - தேன் தத்திப்பாயும்.'தேனுந்து மாமலர் ( திருமந் . 1832 ) என்பது காண்க . பிரான்தேனுந்து சேவடி என்க . ' ' அறப்பெருங்கூடற் பிறைச்சடைப் பெருமான் திருவடிப் பெருந்தேன் எனக் கல்லாடத்தும் ( 48-13-4 ) அம்பலவர் தேனுந்து மலர்ப்பாதத்து எனப் பெரியபுராணத்தும் ( திருநாவு .101 ) வருவன காண்க . இதன்கண் தேனுந்து சேவடிக்கே என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 230 உள்ளப் படாத திருவுருவை யுள்ளுதலும் கள்ளப்படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரானெம்பி ரானென்னை வேறேயாட் கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பி . 15 - ரை . கோதும்பீ - அரசவண்டே . உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும் - மனத்தினால் நினைக்கமுடியாத இறைவனது சொரூப இலக்கணத்தை அவ்விறைவன் திருவருள் ஞானத்தால் அகத்தே நினைந்து அறிதலும் சள்ளப்படாத களிவந்த மறைக்கப்படாத மகிழ்ச்சியுடன் வலிய எழுந்தருளிவந்த வான் கருணை வெள்ளப் பிரான் - பேரருள் வெள்ளத்தையுடைய தலைவனும் எம்பிரான் - எங்கள் தலைவனும் என்னை வேறே ஆட்கொள் அப்பிரானுக்கே - என்னைத் தனியாக அடிமைகொண்டருளும் தலைவனுமாகிய அவ் விறைவனது திருவடி மலர்களிலேயே சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக .