திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருக்கோத்தும்பி கோத்தும்பீ, உள்ளப்படாத திருவுருவை அவ்விறைவன் திருவரு ளால் அகத்தே நினைந்து அறிதலும், மகிழ்ச்சியுடன் வலிய எழுந்தருளி வந்த கருணை வெள்ளத்தையுடைய தலைவனும், எங்கள் தலைவனும் என்னை வேறே அடிமைகொண்டருளும் தலைவனுமாகிய அவ்விறைவ னது திருவடி மலர்களிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக என்பதாம். 691 உள்ளப்படாத திருவுரு என்றது இறைவன் உயிர்களது கருவி கர ணங்களால் அறியப்படாதவன் என்றவாறு. ''கரணங்களெல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன்"(கோத். 9)என அடிகள் அருளியமையுங் காண்க. திருவுரு - சொரூப இலக்கணம். கள்ளப்படாத - மறைக்கப் படாத. களி - பெருமகிழ்ச்சி. களியொடு வந்த என மூன்றாவது விரித் துரைக்க. இனி, கள்ளப்படாத களிவந்த வான்கருணை என்பதற்கு மறைக்கப்படாத பெருமகிழ்ச்சி எனக்கு உளதாதற்குக் காரணமா கிய பேரருள் எனவும் உரைக்கலாம். வேறே ஆட்கொள் - தனியாக ஆட்கொண்ட. திருப்பெருந்துறையில் மெய்யடியார்களுக்கு வீடு பேறு அருளிய இறைவன் தம்மை வேறாக வைத்து "நலமலி தில்லையுட் கோலமார்தரு பொதுவினில் வருகென" அருளிச்செய்தமை பற்றி "வேறே யாட்கொள் அப்பிரான்" என்றார். இதன் கண், "கள்ளப்படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரான் எம்பிரான் என்னை வேறே யாட்கொள்ளப்பிரான்" என்பத னால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 16 231 பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாடோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை யாட்கொண்ட ஐயாவென் னாருயிரே அம்பலவா என்றவன்றன் செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பி. ப- ரை. கோ தும்பீ - அரசவண்டே. பொய் ஆய செல்வத்தே புக்கு அழுந்தி நிலையில்லாத பொருள்களிடத்து நாள்தோறும் அனுபவிக்கப் புகுந்து அவற்றில் மூழ்கி, மெய் ஆ கருதி கிடந்தேனை- அவற்றையே மெய்ப்பொருள்கள் என எண்ணிக் கிடந்த என்னை, ஆட் கொண்ட ஐயா -அந் நிலைமையினின்றும் நீக்கி ஆட்கொண்டருளிய தலைவனே, என் ஆர் உயிரே - எனது அரிய உயிர்க்குயிரே, அம்பலவா என்று - திருச்சிற்றம்பலவனே என்று இங்ஙனமாகக் கூறிக்கொண்டு, அவன் தன் செய் ஆர் மலர் அடிக்கே - அவ்விறைவனது செம்மை பொருந்திய தாமரை மலர்போலும் திருவடி மலர்களிலேயே, சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக.
திருக்கோத்தும்பி கோத்தும்பீ உள்ளப்படாத திருவுருவை அவ்விறைவன் திருவரு ளால் அகத்தே நினைந்து அறிதலும் மகிழ்ச்சியுடன் வலிய எழுந்தருளி வந்த கருணை வெள்ளத்தையுடைய தலைவனும் எங்கள் தலைவனும் என்னை வேறே அடிமைகொண்டருளும் தலைவனுமாகிய அவ்விறைவ னது திருவடி மலர்களிலேயே சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத் தேனை நுகர்வாயாக என்பதாம் . 691 உள்ளப்படாத திருவுரு என்றது இறைவன் உயிர்களது கருவி கர ணங்களால் அறியப்படாதவன் என்றவாறு . ' ' கரணங்களெல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன் ( கோத் . 9 ) என அடிகள் அருளியமையுங் காண்க . திருவுரு - சொரூப இலக்கணம் . கள்ளப்படாத - மறைக்கப் படாத . களி - பெருமகிழ்ச்சி . களியொடு வந்த என மூன்றாவது விரித் துரைக்க . இனி கள்ளப்படாத களிவந்த வான்கருணை என்பதற்கு மறைக்கப்படாத பெருமகிழ்ச்சி எனக்கு உளதாதற்குக் காரணமா கிய பேரருள் எனவும் உரைக்கலாம் . வேறே ஆட்கொள் - தனியாக ஆட்கொண்ட . திருப்பெருந்துறையில் மெய்யடியார்களுக்கு வீடு பேறு அருளிய இறைவன் தம்மை வேறாக வைத்து நலமலி தில்லையுட் கோலமார்தரு பொதுவினில் வருகென அருளிச்செய்தமை பற்றி வேறே யாட்கொள் அப்பிரான் என்றார் . இதன் கண் கள்ளப்படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரான் எம்பிரான் என்னை வேறே யாட்கொள்ளப்பிரான் என்பத னால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 16 231 பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாடோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை யாட்கொண்ட ஐயாவென் னாருயிரே அம்பலவா என்றவன்றன் செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பி . ப- ரை . கோ தும்பீ - அரசவண்டே . பொய் ஆய செல்வத்தே புக்கு அழுந்தி நிலையில்லாத பொருள்களிடத்து நாள்தோறும் அனுபவிக்கப் புகுந்து அவற்றில் மூழ்கி மெய் கருதி கிடந்தேனை அவற்றையே மெய்ப்பொருள்கள் என எண்ணிக் கிடந்த என்னை ஆட் கொண்ட ஐயா -அந் நிலைமையினின்றும் நீக்கி ஆட்கொண்டருளிய தலைவனே என் ஆர் உயிரே - எனது அரிய உயிர்க்குயிரே அம்பலவா என்று - திருச்சிற்றம்பலவனே என்று இங்ஙனமாகக் கூறிக்கொண்டு அவன் தன் செய் ஆர் மலர் அடிக்கே - அவ்விறைவனது செம்மை பொருந்திய தாமரை மலர்போலும் திருவடி மலர்களிலேயே சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக .