திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருக்கோத்தும்பி கலதி - மூதேவி. 'கழுதையூர்தி காக்கைக்கொடியாண், முகடி தௌவை கலதி மூதேவி "(பிங்கலந்தை 2-95) என்பது காண்க. ஈண்டு அவளுக்குரிய கீழ்மையான குணத்தையுணர்த்தியது. "காண்வழி காட் டக் கண்காணாக் கலதிகள்" (திருமந் 2562) என்பது காண்க. என் னாது - என்று இகழ்ந்து நீக்கிவிடாமல். என்னாதே வந்தொழிந்தான் என இயையும். வள்ளல் - அருட்கொடையாளன். வரவர என்றது எனக்குப் பக்குவ முதிர்ச்சி ஏற ஏற என்றவாறு. என்மனத்தே வந் தொழிதல் - எனது பக்குவநிலை முதிர முதிரத் தான் வந்து பூரண மடைதல். என்றது புறத்தோற்றத்தில் அடிகளின் உருவாகத்தோன் றினும் அகத்தே முழுவதும் சிவமயமாக அமைதல். "சித்தமலம்.... சிவமாக்கி" (அச்சோ. 1) என்பது ஈண்டு அறியற்பாலது. ஒன்றும் என்னும் உம்மை தொக்கது. எல்லாம் தெள்ளும் - எல்லாம் தெள்ளி ஒதுக்குகின்ற. தெள்ளும் கழல் - தெள்ளும் திருவடி. இறைவன் என் னுள்ளத்தினுள்ளே முழுவதும் வந்தமையால் உள்ளத்துள்ள துன்பங் களெல்லாம் நீங்கி விட்டன என்பது கருத்து. திருவடி என்றது திரு வடி ஞானத்தை. "திருவடி ஞானம்" (திருமந்திரம் 1598) என்பது காண்க 695 இதன்கண் ''என் மனத்தே வள்ளல் வர வர வந்தொழிந்தான்' என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போத ருதல் காண்க. 19 234 பூமே லயனோடு மாலும் புகலரிதென் றேமாறி நிற்க அடியேன் இறுமாக்க நாய்மேற் றவிசிட்டு நன்றாப் பொருட்படுத்த தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. ப- ரை கோ தும்பீ - அரச வண்டே, பூமேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று ஏமாறி நிற்க-தாமரை மலர்மேல் இருக்கும் பிரம னும் திருமாலும் முடி அடிகளைச் சென்று அடைதல் இயலாதென்று ஏமாற்றமடைந்து நிற்கவும், அடியேன் இறுமாக்க - அடியேன் மகிழ்ச்சி மிகுதியால் இறுமாந்திருக்கும் வண்ணம், நாய் மேல் தவிசு இட்டு - நாய்க்கு மேலாகிய ஆசனத்தை இட்டது போல, நன்றாய் பொருள் படுத்த-இழிவுடைய என்னைப் பெருநலமடையும் பொருட்டு மதித்து அருள்செய்த, தீ மேனியானுக்கே - நெருப்புப் போலும் சிவந்த திருமேனியையுடைய இறைவன் திருவடிமலர்களி லேயே, சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக. நன்றாக கோத்தும்பீ,பிரமனும் திருமாலும் முடி அடிகளைச் சென்றடை தல் அரிதென்று ஏமாற்றமடைந்து நிற்கவும் அடியேன் மகிழ்ச்சி மிகு தியால் இறுமாக்கும் வண்ணம் நாய்க்கு மேலான ஆசனத்தினை இ
திருக்கோத்தும்பி கலதி - மூதேவி . ' கழுதையூர்தி காக்கைக்கொடியாண் முகடி தௌவை கலதி மூதேவி ( பிங்கலந்தை 2-95 ) என்பது காண்க . ஈண்டு அவளுக்குரிய கீழ்மையான குணத்தையுணர்த்தியது . காண்வழி காட் டக் கண்காணாக் கலதிகள் ( திருமந் 2562 ) என்பது காண்க . என் னாது - என்று இகழ்ந்து நீக்கிவிடாமல் . என்னாதே வந்தொழிந்தான் என இயையும் . வள்ளல் - அருட்கொடையாளன் . வரவர என்றது எனக்குப் பக்குவ முதிர்ச்சி ஏற ஏற என்றவாறு . என்மனத்தே வந் தொழிதல் - எனது பக்குவநிலை முதிர முதிரத் தான் வந்து பூரண மடைதல் . என்றது புறத்தோற்றத்தில் அடிகளின் உருவாகத்தோன் றினும் அகத்தே முழுவதும் சிவமயமாக அமைதல் . சித்தமலம் .... சிவமாக்கி ( அச்சோ . 1 ) என்பது ஈண்டு அறியற்பாலது . ஒன்றும் என்னும் உம்மை தொக்கது . எல்லாம் தெள்ளும் - எல்லாம் தெள்ளி ஒதுக்குகின்ற . தெள்ளும் கழல் - தெள்ளும் திருவடி . இறைவன் என் னுள்ளத்தினுள்ளே முழுவதும் வந்தமையால் உள்ளத்துள்ள துன்பங் களெல்லாம் நீங்கி விட்டன என்பது கருத்து . திருவடி என்றது திரு வடி ஞானத்தை . திருவடி ஞானம் ( திருமந்திரம் 1598 ) என்பது காண்க 695 இதன்கண் ' ' என் மனத்தே வள்ளல் வர வர வந்தொழிந்தான் ' என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போத ருதல் காண்க . 19 234 பூமே லயனோடு மாலும் புகலரிதென் றேமாறி நிற்க அடியேன் இறுமாக்க நாய்மேற் றவிசிட்டு நன்றாப் பொருட்படுத்த தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ . ப- ரை கோ தும்பீ - அரச வண்டே பூமேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று ஏமாறி நிற்க - தாமரை மலர்மேல் இருக்கும் பிரம னும் திருமாலும் முடி அடிகளைச் சென்று அடைதல் இயலாதென்று ஏமாற்றமடைந்து நிற்கவும் அடியேன் இறுமாக்க - அடியேன் மகிழ்ச்சி மிகுதியால் இறுமாந்திருக்கும் வண்ணம் நாய் மேல் தவிசு இட்டு - நாய்க்கு மேலாகிய ஆசனத்தை இட்டது போல நன்றாய் பொருள் படுத்த - இழிவுடைய என்னைப் பெருநலமடையும் பொருட்டு மதித்து அருள்செய்த தீ மேனியானுக்கே - நெருப்புப் போலும் சிவந்த திருமேனியையுடைய இறைவன் திருவடிமலர்களி லேயே சென்று ஊதாய் - சென்று படிந்து ஒலித்துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக . நன்றாக கோத்தும்பீ பிரமனும் திருமாலும் முடி அடிகளைச் சென்றடை தல் அரிதென்று ஏமாற்றமடைந்து நிற்கவும் அடியேன் மகிழ்ச்சி மிகு தியால் இறுமாக்கும் வண்ணம் நாய்க்கு மேலான ஆசனத்தினை