திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

69க் திருவாசக ஆராய்ச்சியுரை டது போல இழிவுடைய என்னை நன்றாகப் பொருட்படுத்து அருள் செய்த இறைவனது திருவடி மலர்களிலேயே சென்று படிந்து ஒலித் துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக என்பதாம். புகல் - சென்றுசேர்தல் அருமை - இன்மைப்பொருட்டு. ஏமாறி நிற்றல்-தமது எண்ணம் கைகூடப்பெறாமல் வருந்தி நிற்றல். அயனும் மாலும் தற்போத முனைப்பினால் தேடப்போனமையின் ஏமாந்து நிற் பாராயினர். "நிலமுதற் கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம், சலமுகத்தா லாங்காரந் தவிரார் காண் சாழலோ" (சாழல். 6) என வருதல் காண்க. இறுமாத்தல் பேரின்பத்தால் மகிழ்ந்து நிமிர்ந் திருத்தல்.இறுமாக்கப் பொருட்படுத்த என இயையும். நாய் மேல் தவிசு இட்டு என்பதற்கு நாய்க்கு என நான்காவது விரித்து, மேலாகிய தவிசு எனப் பண்புத்தொகை விரித்து, இட்டது போல என உவமவுருபு விரித்து, அந்த உவமானத்தினால் இழிவுடைய யான் பெருநலமடையும் வண்ணம் என்பது வருவிக்கப்பட்டது. நன் றாகப் பொருட்படுத்தல் - செப்பமாக நன்குமதித்தல். நன்றாக என் பது நன்றா என ஈறுகெட்டு நின்றது: இறைவன் பொருட்படுத்த லுக்கு அடிகளது பரி பக்குவநிலை ஏதுவாகும். "நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்து" (பூவல்லி. 3) என அடிகள் பிறிதோ ரிடத்து அருளியமையுங் காண்க, தீமேனி - நெருப்புப்போலும் மேனி. "அழல்நிற வண்ணர்" (ஞான. 247-11) எனத் தேவாரத்தும், "வீழ் சடைத் தீவண்ணன்* (256) "நற்றொண்டு கொண்ட தீவயின் மேனி யன்" (343)"சுடர்கின்ற கோலந் தீயேயென மன்னு சிற்றம்பலவர்'' (370) எனத் திருக்கோவையாரினும் "தீயான மேனியனே செம்பவளக் குன்றமே" (சிவபெருமான் திருவந்.98) எனப் பதினொராந்திருமுறை யினும் வருவன காண்க. அயனும் மாலும் நிற்க அடியேன் இறுமாக்கப் பொருட்படுத்த தீமேனியானுக்கே சென்றூதாய் என வினைமுடிபு செய்க. இதன்கண், "இறுமாக்க நன்றாகப் பொருட்படுத்த தீமேனி யானுக்கே" என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 20
69 க் திருவாசக ஆராய்ச்சியுரை டது போல இழிவுடைய என்னை நன்றாகப் பொருட்படுத்து அருள் செய்த இறைவனது திருவடி மலர்களிலேயே சென்று படிந்து ஒலித் துப் பேரின்பத்தேனை நுகர்வாயாக என்பதாம் . புகல் - சென்றுசேர்தல் அருமை - இன்மைப்பொருட்டு . ஏமாறி நிற்றல் - தமது எண்ணம் கைகூடப்பெறாமல் வருந்தி நிற்றல் . அயனும் மாலும் தற்போத முனைப்பினால் தேடப்போனமையின் ஏமாந்து நிற் பாராயினர் . நிலமுதற் கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தா லாங்காரந் தவிரார் காண் சாழலோ ( சாழல் . 6 ) என வருதல் காண்க . இறுமாத்தல் பேரின்பத்தால் மகிழ்ந்து நிமிர்ந் திருத்தல்.இறுமாக்கப் பொருட்படுத்த என இயையும் . நாய் மேல் தவிசு இட்டு என்பதற்கு நாய்க்கு என நான்காவது விரித்து மேலாகிய தவிசு எனப் பண்புத்தொகை விரித்து இட்டது போல என உவமவுருபு விரித்து அந்த உவமானத்தினால் இழிவுடைய யான் பெருநலமடையும் வண்ணம் என்பது வருவிக்கப்பட்டது . நன் றாகப் பொருட்படுத்தல் - செப்பமாக நன்குமதித்தல் . நன்றாக என் பது நன்றா என ஈறுகெட்டு நின்றது : இறைவன் பொருட்படுத்த லுக்கு அடிகளது பரி பக்குவநிலை ஏதுவாகும் . நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்து ( பூவல்லி . 3 ) என அடிகள் பிறிதோ ரிடத்து அருளியமையுங் காண்க தீமேனி - நெருப்புப்போலும் மேனி . அழல்நிற வண்ணர் ( ஞான . 247-11 ) எனத் தேவாரத்தும் வீழ் சடைத் தீவண்ணன் * ( 256 ) நற்றொண்டு கொண்ட தீவயின் மேனி யன் ( 343 ) சுடர்கின்ற கோலந் தீயேயென மன்னு சிற்றம்பலவர் ' ' ( 370 ) எனத் திருக்கோவையாரினும் தீயான மேனியனே செம்பவளக் குன்றமே ( சிவபெருமான் திருவந் .98 ) எனப் பதினொராந்திருமுறை யினும் வருவன காண்க . அயனும் மாலும் நிற்க அடியேன் இறுமாக்கப் பொருட்படுத்த தீமேனியானுக்கே சென்றூதாய் என வினைமுடிபு செய்க . இதன்கண் இறுமாக்க நன்றாகப் பொருட்படுத்த தீமேனி யானுக்கே என்பதனால் சிவனோடைக்கியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 20