திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

11. திருத்தெள்ளேணம் சிவனோடடைவு திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது அடிகள் தில்லையில் எழுந்தருளியிருக்கும் காலத்து ஒரு பூஞ்சோலை வழியாகச் செல்லுகையில் அங்கே சிறுமகளிர்கள் பலவித பொய்தல் விளையாடல்களைப் பாடிக்கொண்டு ஆடுதலைக் கண்டனர். அவற்றுள் தெள்ளேணம் என்னும் ஒருவகை விளையாடலை மகளிர் சூழவரநின்று நடுவே ஒருகட்பறை ஒன்றினை வைத்து இரு கைகளிலும் கோல்களைக் கொண்டு அப்பறையில் அடித்துப் பாடி விளையாடினர். அடிகள் அவர்களைப் பார்த்து மேலானபயனில்லாத பாடல்களைப் பாடிக் கொண்டு இதனை அடித்து ஆடுவதிலும், எல்லாம் வல்ல இறைவனைக் குறித்துப் பாடிக்கொண்டு ஆடுதல் இம்மைக்கும் மறுமைக்கும் எம் மைக்கும் மிக்கபயன் தருமென அருளிச்செய்து, தம்மையும் அம்மகளி ருள் ஒருவராக இயைத்து, அம்மகளிர் கூற்றாக இத் திருத்தெள்ளே ணம் என்னும் பகுதியை அருளிச் செய்தனர். இதன் உள்ளுறை சிவனோடடைவு என்றது சிவனோடு சென்று சேர்தல். இது நான்கடித்தரவு கொச்சகக் கலிப்பாவாலானது. 235 தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநா மறியவோர் அந்தணனாய் ஆண்டு கொண்டான் ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. ப-ரை. திருமாலும் பன்றியாய் சென்று உணரா திருஅடியை - தேவர்களுள் மிகமேலாகிய திருமாலும் பன்றிவடிவெடுத்துப் பூமியை இடந்து சென்றும் அறிய முடியாத திருவடிகளை, உரு நாம் அறிய - உண்மை உருவினை நாம் கண்டறியும் வண்ணம், ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் - இறைவன் ஓர் வேதியனாய் வலிய எழுந்தருளி வந்து நம்மை ஆட்கொண்டருளினன், ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு - ஒரு பெயரும் ஒரு வடிவமும் முதலாகிய உயிரியல்புகள் ஒன்றும் இல்லாத அவ்விறைவனுக்கு; ஆயிரம் திருநாமம் பாடி -ஆயி ரந் திருப்பெயர்களை அமைத்துப்பாடி, நாம் தெள்ளேணம் கொட் டாமோ -நாம் தெள்ளேணம் என்னும் ஒரு கட்பறையினை அடித்து விளையாடுவோமாக என்பதாம்.
11. திருத்தெள்ளேணம் சிவனோடடைவு திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது அடிகள் தில்லையில் எழுந்தருளியிருக்கும் காலத்து ஒரு பூஞ்சோலை வழியாகச் செல்லுகையில் அங்கே சிறுமகளிர்கள் பலவித பொய்தல் விளையாடல்களைப் பாடிக்கொண்டு ஆடுதலைக் கண்டனர் . அவற்றுள் தெள்ளேணம் என்னும் ஒருவகை விளையாடலை மகளிர் சூழவரநின்று நடுவே ஒருகட்பறை ஒன்றினை வைத்து இரு கைகளிலும் கோல்களைக் கொண்டு அப்பறையில் அடித்துப் பாடி விளையாடினர் . அடிகள் அவர்களைப் பார்த்து மேலானபயனில்லாத பாடல்களைப் பாடிக் கொண்டு இதனை அடித்து ஆடுவதிலும் எல்லாம் வல்ல இறைவனைக் குறித்துப் பாடிக்கொண்டு ஆடுதல் இம்மைக்கும் மறுமைக்கும் எம் மைக்கும் மிக்கபயன் தருமென அருளிச்செய்து தம்மையும் அம்மகளி ருள் ஒருவராக இயைத்து அம்மகளிர் கூற்றாக இத் திருத்தெள்ளே ணம் என்னும் பகுதியை அருளிச் செய்தனர் . இதன் உள்ளுறை சிவனோடடைவு என்றது சிவனோடு சென்று சேர்தல் . இது நான்கடித்தரவு கொச்சகக் கலிப்பாவாலானது . 235 தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநா மறியவோர் அந்தணனாய் ஆண்டு கொண்டான் ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ . - ரை . திருமாலும் பன்றியாய் சென்று உணரா திருஅடியை - தேவர்களுள் மிகமேலாகிய திருமாலும் பன்றிவடிவெடுத்துப் பூமியை இடந்து சென்றும் அறிய முடியாத திருவடிகளை உரு நாம் அறிய - உண்மை உருவினை நாம் கண்டறியும் வண்ணம் ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் - இறைவன் ஓர் வேதியனாய் வலிய எழுந்தருளி வந்து நம்மை ஆட்கொண்டருளினன் ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு - ஒரு பெயரும் ஒரு வடிவமும் முதலாகிய உயிரியல்புகள் ஒன்றும் இல்லாத அவ்விறைவனுக்கு ; ஆயிரம் திருநாமம் பாடி -ஆயி ரந் திருப்பெயர்களை அமைத்துப்பாடி நாம் தெள்ளேணம் கொட் டாமோ -நாம் தெள்ளேணம் என்னும் ஒரு கட்பறையினை அடித்து விளையாடுவோமாக என்பதாம் .