திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கண்ணே பிறப்பறுக்கும்" என்னும் திருக்குறளானுமறிக. கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை என்றது பற்று அறுக்கப்பட் டமையாற் பற்றப்படுபவராகிய உறவினர் முதலாகிய யாவரையும் கருதுதலிலராயினர் என்பதாம். பற்றுக்கு இடமாகிய உறவினரைக் கூறிய உபலக்கணத்தாற் பொருட்பற்றும் நான் என்னும் அகப் பற் றும் கொள்ளப்படும். அருவாய் உருவமுமாய பிரான் என்றதனால் இறைவனுக்குரிய அருவம் அருவுருவம் உருவம் என்ற மூவகைத் திரு மேனியும் கொள்ளப்படும். அவற்றுள் அருவம் இறைவனது சொரூப இலக்கணமும் அருவுருவமும் உருவமும் தடத்த இலக்கணமுமாகும். பிரான் அவன் - பிரானாகிய அவன். 700 பிரான் கருவேர் அறுத்தபின் யாவரையும் கண்டதில்லை. அவன் மருவும் திருவாரூர் பாடித் தெள்ளேணம் கொட்டுவாம் என முடிக்க. இதன் கண் கருவேர் அறுத்தபின் யாவரையும் கண்டதில்லை என் பதனால் சிவனோடடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 237 அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்குந் தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட் டுலகமெல்லாஞ் சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 2 ப-ரை. அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் - திருமா லுக்கும் பிரமனுக்கும் அவர்களை ஒழிந்த மற்றைத் தேவர்கட்கும், தெரிக்கும் படித்து அன்றி நின்ற சிவம் வந்து - அறிந்துகொள்ளும் தன் மைத்தன்றி மேம்பட்டு நின்ற பரமசிவம் வலிய எழுந்தருளிவந்து, நம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பது கேட்டு - ஒன்றும்போதா நம்மையும் உள்ளமுருகச் செய்யும் நாம் செய்யும் தொண்டினை ஏற்றுக் கொள்ளும் என்கின்ற இச்செய்தியைக்கேட்டு, உலகம் எல்லாம் சிரிக் கும் திறம்பாடி -உலகத்தார் எல்லாரும் கேள்விப்பட்டு வியப்பினால் மகிழ்ந்து சிரித்தற்கேதுவாகிய அப்பரமசிவத்தின் தன்மைகளைப் பாடிக்கொண்டு, தெள் ஏணம் கொட்டாமோ - நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக. திருமாலுக்கும் பிரமனுக்கும் அல்லாத தேவர்கட்கும் தெரியும் தன்மைத்தன்றி மேம்பட்டு நின்ற பரமசிவம் வலிய எழுந்தருளிவந்து என்னும் ஒன்றும் போதா நம்மையும் உருக்கும் பணிகொள்ளும் செய்தியைக் கேட்டு உலகத்தார் எல்லாரும் சிரித்தற்கேதுவான அப் பரமசிவத்தின் தன்மைகளைப் பாடிக்கொண்டு தெள்ளேணம் கொட்டு வோமாக என்பதாம்.
திருவாசக ஆராய்ச்சியுரை கண்ணே பிறப்பறுக்கும் என்னும் திருக்குறளானுமறிக . கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை என்றது பற்று அறுக்கப்பட் டமையாற் பற்றப்படுபவராகிய உறவினர் முதலாகிய யாவரையும் கருதுதலிலராயினர் என்பதாம் . பற்றுக்கு இடமாகிய உறவினரைக் கூறிய உபலக்கணத்தாற் பொருட்பற்றும் நான் என்னும் அகப் பற் றும் கொள்ளப்படும் . அருவாய் உருவமுமாய பிரான் என்றதனால் இறைவனுக்குரிய அருவம் அருவுருவம் உருவம் என்ற மூவகைத் திரு மேனியும் கொள்ளப்படும் . அவற்றுள் அருவம் இறைவனது சொரூப இலக்கணமும் அருவுருவமும் உருவமும் தடத்த இலக்கணமுமாகும் . பிரான் அவன் - பிரானாகிய அவன் . 700 பிரான் கருவேர் அறுத்தபின் யாவரையும் கண்டதில்லை . அவன் மருவும் திருவாரூர் பாடித் தெள்ளேணம் கொட்டுவாம் என முடிக்க . இதன் கண் கருவேர் அறுத்தபின் யாவரையும் கண்டதில்லை என் பதனால் சிவனோடடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 237 அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்குந் தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட் டுலகமெல்லாஞ் சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ . 2 - ரை . அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் - திருமா லுக்கும் பிரமனுக்கும் அவர்களை ஒழிந்த மற்றைத் தேவர்கட்கும் தெரிக்கும் படித்து அன்றி நின்ற சிவம் வந்து - அறிந்துகொள்ளும் தன் மைத்தன்றி மேம்பட்டு நின்ற பரமசிவம் வலிய எழுந்தருளிவந்து நம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பது கேட்டு - ஒன்றும்போதா நம்மையும் உள்ளமுருகச் செய்யும் நாம் செய்யும் தொண்டினை ஏற்றுக் கொள்ளும் என்கின்ற இச்செய்தியைக்கேட்டு உலகம் எல்லாம் சிரிக் கும் திறம்பாடி -உலகத்தார் எல்லாரும் கேள்விப்பட்டு வியப்பினால் மகிழ்ந்து சிரித்தற்கேதுவாகிய அப்பரமசிவத்தின் தன்மைகளைப் பாடிக்கொண்டு தெள் ஏணம் கொட்டாமோ - நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக . திருமாலுக்கும் பிரமனுக்கும் அல்லாத தேவர்கட்கும் தெரியும் தன்மைத்தன்றி மேம்பட்டு நின்ற பரமசிவம் வலிய எழுந்தருளிவந்து என்னும் ஒன்றும் போதா நம்மையும் உருக்கும் பணிகொள்ளும் செய்தியைக் கேட்டு உலகத்தார் எல்லாரும் சிரித்தற்கேதுவான அப் பரமசிவத்தின் தன்மைகளைப் பாடிக்கொண்டு தெள்ளேணம் கொட்டு வோமாக என்பதாம் .