திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

702 திருவாசக ஆராய்ச்சியுரை உடனே தற்போதம் நீங்கிச் சிவமாந் தன்மையை எய்திய விதத்தைப் பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக என்பதாம். அவமாய தேவர் என்றது நிலையற்ற பதவிகளை நிலையுடையன என்று கருதும் பயனற்ற தேவர் என்றவாறு. அவம் - பயனின்மை. அவகதி - அத்தேவர்களது பயனற்ற பதவிகள். அழுந்தாமே -மே ஈற்று எதிர்மறை வினையெச்சம். பவமாயம் - பிறப்பதற்கு ஏதுவாகிய மயக்கம். ஈண்டுக் காரணத்தைக் காரியமாக உபசரித்து பவமாயம் எனப்பட்டது, "பிறப்பென்னும் பேதைமை" (குறள். 358) என்பது போல. மாயம் காத்து ஆண்டுகொண்ட பரஞ்சோதி என்க. என்னை நாம் என்பன ஒருமை பன்மை மயக்கம். நலம் புதுமை. நாம் ஒழிந்து சிவமாதல் உயிரினம் அறிவும் சருவி கரணங்களும் தம்மியல்பு நீங்கி சிவஞானமும் சிவகருவி கரணங்களுமாதல். ஆனவாறு என்பது ஆனவா என ஈறுகெட்டு நின்றது. இதன்கண், நாமொழிந்து சிவமானவா பாடி என்பதனால் சிவனோ டடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 4 239 அருமந்த தேவர் அயன்றிருமாற் கரியசிவம் உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக் கருவெந்து வீழக் கடைக்கணித்தென் னுளம்புகுந்த திருவந்த வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. ப - ரை. அருமந்த தேவர் அயன் திருமாற்கு அரியசிவம் - கிடைத் தற்கரிய அமுதம்போன்ற தேவத் தலைவர்களான நான்முகனுக்கும் திருமாலுக்கும் அறிதற்கரிய சிவபெருமான், உருவந்து - ஞானாசாரி யத் திருவுருவங் கொண்டு வலிய எழுந்தருளிவந்து, பூதலத்தோர் உகப்பு எய்த கொண்டருளி - நிலவுலகத்திலுள்ளவர்கள் உயர்வடை யும் வண்ணம் என்னை ஆட்கொண்டருளி, கருவெந்து வீழ கடைக் கணித்து- என் பிறவியானது ஞானத் தீயால் எரிந்து ஒழியும்படி திருக் கடைக்கண்ணாற் பார்த்தருளி, என் உள்ளம்புகுந்த திருவந்தவா பாடி - என் உள்ளத்திற் புகுந்தமையால் மேலாகிய சீவன் முத்தநிலை வந்த வரலாற்றைப் பாடிக்கொண்டு, தெள்ளேணம் கொட்டாமோ- நாம் தெள்ளேணம் என்னும் பறையினை அடிப்போமாக. அயன் திருமாற்கு அறிதற்கரிய சிவபெருமான் ஞானாசாரியத் திருவுருவங்கொண்டு வலிய எழுந்தருளிவந்து இந் நிலவுலகிலுள்ளவர் கள் உயர்வடையும் வண்ணம் என்னை ஆட்கொண்டருளி என் கரு வெந்து வீழக் கடைக்கணித்து என் உள்ளம் புகுந்தமையால் மேலா கிய சீவன் முத்தநிலை அடைந்த நிலைமையினைப் பாடிக்கொண்டு தெள் ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக என்பதாம்.
702 திருவாசக ஆராய்ச்சியுரை உடனே தற்போதம் நீங்கிச் சிவமாந் தன்மையை எய்திய விதத்தைப் பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக என்பதாம் . அவமாய தேவர் என்றது நிலையற்ற பதவிகளை நிலையுடையன என்று கருதும் பயனற்ற தேவர் என்றவாறு . அவம் - பயனின்மை . அவகதி - அத்தேவர்களது பயனற்ற பதவிகள் . அழுந்தாமே -மே ஈற்று எதிர்மறை வினையெச்சம் . பவமாயம் - பிறப்பதற்கு ஏதுவாகிய மயக்கம் . ஈண்டுக் காரணத்தைக் காரியமாக உபசரித்து பவமாயம் எனப்பட்டது பிறப்பென்னும் பேதைமை ( குறள் . 358 ) என்பது போல . மாயம் காத்து ஆண்டுகொண்ட பரஞ்சோதி என்க . என்னை நாம் என்பன ஒருமை பன்மை மயக்கம் . நலம் புதுமை . நாம் ஒழிந்து சிவமாதல் உயிரினம் அறிவும் சருவி கரணங்களும் தம்மியல்பு நீங்கி சிவஞானமும் சிவகருவி கரணங்களுமாதல் . ஆனவாறு என்பது ஆனவா என ஈறுகெட்டு நின்றது . இதன்கண் நாமொழிந்து சிவமானவா பாடி என்பதனால் சிவனோ டடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 4 239 அருமந்த தேவர் அயன்றிருமாற் கரியசிவம் உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக் கருவெந்து வீழக் கடைக்கணித்தென் னுளம்புகுந்த திருவந்த வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ . - ரை . அருமந்த தேவர் அயன் திருமாற்கு அரியசிவம் - கிடைத் தற்கரிய அமுதம்போன்ற தேவத் தலைவர்களான நான்முகனுக்கும் திருமாலுக்கும் அறிதற்கரிய சிவபெருமான் உருவந்து - ஞானாசாரி யத் திருவுருவங் கொண்டு வலிய எழுந்தருளிவந்து பூதலத்தோர் உகப்பு எய்த கொண்டருளி - நிலவுலகத்திலுள்ளவர்கள் உயர்வடை யும் வண்ணம் என்னை ஆட்கொண்டருளி கருவெந்து வீழ கடைக் கணித்து- என் பிறவியானது ஞானத் தீயால் எரிந்து ஒழியும்படி திருக் கடைக்கண்ணாற் பார்த்தருளி என் உள்ளம்புகுந்த திருவந்தவா பாடி - என் உள்ளத்திற் புகுந்தமையால் மேலாகிய சீவன் முத்தநிலை வந்த வரலாற்றைப் பாடிக்கொண்டு தெள்ளேணம் கொட்டாமோ நாம் தெள்ளேணம் என்னும் பறையினை அடிப்போமாக . அயன் திருமாற்கு அறிதற்கரிய சிவபெருமான் ஞானாசாரியத் திருவுருவங்கொண்டு வலிய எழுந்தருளிவந்து இந் நிலவுலகிலுள்ளவர் கள் உயர்வடையும் வண்ணம் என்னை ஆட்கொண்டருளி என் கரு வெந்து வீழக் கடைக்கணித்து என் உள்ளம் புகுந்தமையால் மேலா கிய சீவன் முத்தநிலை அடைந்த நிலைமையினைப் பாடிக்கொண்டு தெள் ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக என்பதாம் .