திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

704 திருவாசக ஆராய்ச்சியுரை வும் உள்ளொளியாடவும் கண்களில் ஆனந்தக்கண்ணீர் திரையாடவும் பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக என்பதாம். ஆடு நாகம் அரை அசைத்தபிரான் என இயைக்க. ''பணந்தாழர வரைச் சிற்றம்பலவர்" (34) எனத் திருக்கோவையாரினும், ''அரவம் அரையில் அசைத்தார் தாமே'' (நாவு 249-3) "ஆர்த்தானை வாசு கியை அரைக்கோர் கச்சா அசைத்தானை" (நாவு 256-6) எனத் தேவாரத்தும் வருவன காண்க. அசைத்தல் - கட்டுதல். அவனியின் மேல் வந்து என இயையும். வரையாடு மங்கை - இமயமலையில் விளை யாடிய உமையம்மை; பார்வதி என்றவாறு. மங்கைதன் பங்கொடும் வந்து என்றது இறைவன் தன் திருவருட்சத்தியோடும் வந்து என்ற வாறு. திருவருட்சத்தி பதிந்த இடத்திலேயே இறைவன் வெளிப்பாடு உளதாதல் சித்தாந்த மரபு. பிரான் மங்கை தன் பங்கொடும் ஆண்ட திறம் என்க. " "கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டு கொண்ட" கோத். 14 'கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவே யனவளைத் தோளியொடும் புகுந்தருளி நனவே யெனைப்பிடித் தாட்கொண்டவா'' 99 தெள்.10 என அடிகள் பிற இடங்களிலும் அருளியமை காண்க. ஆண்ட திறம் பாடி என இயையும். உரையாடல் - உரைதடுமாறல். உள்ளொளி- உள்ளத்தின் கணுண்டாகும் ஞான ஒளி.மாமலர்க்கண் - கரிய குவளை மலர் போன்ற கண், குவளைக் கருங்கட் கொடியேரிடைக்கொடி (திருக் கோவை 51) என அடிகள் அருளியமையுங் காண்க. கண்களில் நீர் என்றது ஆனந்தக்கண்ணீரை. ஆடும் ஆறு என்பது ஆடுமா என ஈறு கெட்டு நின்றது உரையாட ஒளியாட் ஆடு மாறுபாடி என இயைக்க. பிரான் வந்து ஆண்ட திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ என வினைமுடிபு செய்க. இதன்கண் ஆண்ட திறம் உரையாட உள்ளொளியாட கண்களில் நீர்த் திரையாடுமாபாடி என்பதனால் சிவனோடடைவு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 6 241 ஆவா அரியயனிந் திரன்வானோர்க் கரியசிவன் வாளாவென் றென்னையும் பூதலத்தே வலித்தாண்டுகொண்டான் பூவா ரடிச்சுவ டென்றலை மேற் பொறித்தலுமே தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.
704 திருவாசக ஆராய்ச்சியுரை வும் உள்ளொளியாடவும் கண்களில் ஆனந்தக்கண்ணீர் திரையாடவும் பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக என்பதாம் . ஆடு நாகம் அரை அசைத்தபிரான் என இயைக்க . ' ' பணந்தாழர வரைச் சிற்றம்பலவர் ( 34 ) எனத் திருக்கோவையாரினும் ' ' அரவம் அரையில் அசைத்தார் தாமே ' ' ( நாவு 249-3 ) ஆர்த்தானை வாசு கியை அரைக்கோர் கச்சா அசைத்தானை ( நாவு 256-6 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . அசைத்தல் - கட்டுதல் . அவனியின் மேல் வந்து என இயையும் . வரையாடு மங்கை - இமயமலையில் விளை யாடிய உமையம்மை ; பார்வதி என்றவாறு . மங்கைதன் பங்கொடும் வந்து என்றது இறைவன் தன் திருவருட்சத்தியோடும் வந்து என்ற வாறு . திருவருட்சத்தி பதிந்த இடத்திலேயே இறைவன் வெளிப்பாடு உளதாதல் சித்தாந்த மரபு . பிரான் மங்கை தன் பங்கொடும் ஆண்ட திறம் என்க . கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டு கொண்ட கோத் . 14 ' கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவே யனவளைத் தோளியொடும் புகுந்தருளி நனவே யெனைப்பிடித் தாட்கொண்டவா ' ' 99 தெள் .10 என அடிகள் பிற இடங்களிலும் அருளியமை காண்க . ஆண்ட திறம் பாடி என இயையும் . உரையாடல் - உரைதடுமாறல் . உள்ளொளி உள்ளத்தின் கணுண்டாகும் ஞான ஒளி.மாமலர்க்கண் - கரிய குவளை மலர் போன்ற கண் குவளைக் கருங்கட் கொடியேரிடைக்கொடி ( திருக் கோவை 51 ) என அடிகள் அருளியமையுங் காண்க . கண்களில் நீர் என்றது ஆனந்தக்கண்ணீரை . ஆடும் ஆறு என்பது ஆடுமா என ஈறு கெட்டு நின்றது உரையாட ஒளியாட் ஆடு மாறுபாடி என இயைக்க . பிரான் வந்து ஆண்ட திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ என வினைமுடிபு செய்க . இதன்கண் ஆண்ட திறம் உரையாட உள்ளொளியாட கண்களில் நீர்த் திரையாடுமாபாடி என்பதனால் சிவனோடடைவு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 6 241 ஆவா அரியயனிந் திரன்வானோர்க் கரியசிவன் வாளாவென் றென்னையும் பூதலத்தே வலித்தாண்டுகொண்டான் பூவா ரடிச்சுவ டென்றலை மேற் பொறித்தலுமே தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ .