திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

707 திருத்தெள்ளேணம் கையும் போல வலைந்தலைந்து" (தாயுமானவர் பாடல்)எனவும் வருவன வுங் காண்க.ஓர் - அசைநிலை. அறம்பாவம் - நல்வினை தீவினை "அறம் பாவமென்னு மருங்கயிற்றாற் கட்டி" (சிவபுரா.52) பிறப்பிறப்பிற்குக் காரணமாகிய அறம் பாவங்களைப் பிறப்போடு இறப்பென்னும் அறம் பாவம் எனக்காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது. பயன் கருதிச் செய்யும் அறமும் பாவம் போலப் பிறத்தற்கேதுவாகலான் அறம் பாவமென்றிரண்டி னச்சம்" என்றார். ''இருள் சேர் இருவினையும்" (குறள் 5) என்பதற்கு 'மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை யென்னு மிரண்டு வினையும்" என உரையும், "நல்வினையும் பிறவிக் கேதுவாகலான் இருவினையுஞ் சேராவென்றுங் கூறினார்" என விசேட வுரையும் இப்பகுதிக்குப் பரிமேலழகர் எழுதியிருத்தலும் ஈண்டறியற் பாலன. என்ற இரண்டு என்றிரண்டெனத் தொக்கது. ஆண்டு கொண் டான் வினையாலணையும் பெயர் . மறந்தேயும் - மறந்தாலும்; என்றது. ஆட்கொண்டபோது அருளிய சாதனங்களில் எதனை மறந்தாலும் என்றவாறு. தன்கழல் மறவாவண்ணம் - தன் திருவடியை மறவா வண்ணம்.'கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத்திருவடியை'' (கோத் தும்பி 7) '"மருவாகி நின்னடியே மறவேனம்மான் மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணம், திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய் செம்பொனே கம்பனே திகைத்திட்டேனே " (தே.நாவு.238-6) என்பனவும் ஈண்டறியற்பாலன. அச்சம் தவிர்த்து ஆண்டுகொண்டான் நல்கிய திறம் பாடல் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ என முடிக்க. இதன்கண், மறந்தேயும் தன்கழல் மறவா வண்ணம் நல்கிய அத் திறம் என்பதனால் சிவனோடடைவு என்னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க. 8 243 கன்னா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினால் பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி மின்னேர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர் தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. ப-ரை. மின்நேர் நுடங்கு இடை - மின்னலை ஒத்த துவள் கின்ற இடையினையும், செம்துவர் வாய் - சிவந்த பவளம் போன்ற வாயினையும், வெள்நகையீர் - வெள்ளிய முறுவலினையுமுடைய தோழி காள்! கல்நார் உரித்து என்ன - கல்லில் நார் உரித்தாற்போல, என்னையும் தன் கருணையினால் - ஒருவகைத் தகுதியுமற்ற என்னையும் தன் அருளினாலே. பொன் ஆர் கழல் பணித்து - பொன்னானியன்ற கழலையுடைய திருவடியை வணங்குவித்து, ஆண்ட பிரான் புகழ்
707 திருத்தெள்ளேணம் கையும் போல வலைந்தலைந்து ( தாயுமானவர் பாடல் ) எனவும் வருவன வுங் காண்க.ஓர் - அசைநிலை . அறம்பாவம் - நல்வினை தீவினை அறம் பாவமென்னு மருங்கயிற்றாற் கட்டி ( சிவபுரா .52 ) பிறப்பிறப்பிற்குக் காரணமாகிய அறம் பாவங்களைப் பிறப்போடு இறப்பென்னும் அறம் பாவம் எனக்காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது . பயன் கருதிச் செய்யும் அறமும் பாவம் போலப் பிறத்தற்கேதுவாகலான் அறம் பாவமென்றிரண்டி னச்சம் என்றார் . ' ' இருள் சேர் இருவினையும் ( குறள் 5 ) என்பதற்கு ' மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை யென்னு மிரண்டு வினையும் என உரையும் நல்வினையும் பிறவிக் கேதுவாகலான் இருவினையுஞ் சேராவென்றுங் கூறினார் என விசேட வுரையும் இப்பகுதிக்குப் பரிமேலழகர் எழுதியிருத்தலும் ஈண்டறியற் பாலன . என்ற இரண்டு என்றிரண்டெனத் தொக்கது . ஆண்டு கொண் டான் வினையாலணையும் பெயர் . மறந்தேயும் - மறந்தாலும் ; என்றது . ஆட்கொண்டபோது அருளிய சாதனங்களில் எதனை மறந்தாலும் என்றவாறு . தன்கழல் மறவாவண்ணம் - தன் திருவடியை மறவா வண்ணம்.'கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத்திருவடியை ' ' ( கோத் தும்பி 7 ) ' மருவாகி நின்னடியே மறவேனம்மான் மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணம் திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய் செம்பொனே கம்பனே திகைத்திட்டேனே ( தே.நாவு.238-6 ) என்பனவும் ஈண்டறியற்பாலன . அச்சம் தவிர்த்து ஆண்டுகொண்டான் நல்கிய திறம் பாடல் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ என முடிக்க . இதன்கண் மறந்தேயும் தன்கழல் மறவா வண்ணம் நல்கிய அத் திறம் என்பதனால் சிவனோடடைவு என்னும் பதிகம் நுதலிய பொருள் போதருதல் காண்க . 8 243 கன்னா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினால் பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி மின்னேர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர் தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ . - ரை . மின்நேர் நுடங்கு இடை - மின்னலை ஒத்த துவள் கின்ற இடையினையும் செம்துவர் வாய் - சிவந்த பவளம் போன்ற வாயினையும் வெள்நகையீர் - வெள்ளிய முறுவலினையுமுடைய தோழி காள் ! கல்நார் உரித்து என்ன - கல்லில் நார் உரித்தாற்போல என்னையும் தன் கருணையினால் - ஒருவகைத் தகுதியுமற்ற என்னையும் தன் அருளினாலே . பொன் ஆர் கழல் பணித்து - பொன்னானியன்ற கழலையுடைய திருவடியை வணங்குவித்து ஆண்ட பிரான் புகழ்