திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

708 திருவாசக ஆராய்ச்சியுரை தென்னா தென்னா என்றுபாடி - ஆட்கொண்டருளிய இறைவனது புகழ் களைத் தென்னா தென்னாவென்னும் சந்தக்குறிப்பு அமையப் பாடிக் கொண்டு, தெள்ளேணம் கொட்டாமோ -நாம் தெள்ளேணம் என் னும் பறையினைக் கொட்டுவோமாக. வெண்ணகையீர், கல்லில் நாருரித்தாற்போல என்னையும் தன் கருணையினால் தன் திருவடியைத் தந்து ஆட்கொண்டருளிய இறைவ னது புகழ்களைப் பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் கொட்டுவோ மாக என்பதாம். கல்லில் நாருரித்தல், கல்லை வில்லாக வளைத்த சர்வ வல்லமை யுள்ள இறைவனுக்கன்றி மற்று யாவர்க்கும் அரிது. அதுபோல வன் நெஞ்சக் கள்வனேனையும் தன் கருணையினால் அன்புடையனாக்கித் தன் திருவடியைப் பணியச் செய்தல். பணிவித்து என்பது பணித்து என நின்றது. இனி, தந்தருளி எனினுமாம். பாடிக்கொட்டாமோ என இயையும். மின்னேர் நுடங்கு இடை - மின்னலை ஒத்த நுடங்குகின்ற இடை. மின்னியல் நுண்ணிடை (திருப்படை. 6) எனவும், "மின்றங்கிடை" 'மின்னணி நுண்ணிடை" (திருக்கோவை. 268 - 342) எனவும் பிற விடங்களிலும் அருளியமை காண்க மின்னேர் நுடங்கிடையினையும் துவர்வாயினையும், வெண்ணகையினையுமுடையீர் என்க. "மின்னிடைச் செந்துவர் வாய்க் கருங்கண் வெண்ணகைப் பண்ணமர் மென்மொழி யீர்" (பொற்.13) எனவும், ''வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடை யீர்" (கோவை. 73) எனவும் வருவன காண்க. கன்னார் உரித்தென்னக் கழல் பணித்து ஆண்டபிரான் புகழ் தென்னா தென்னா என்று பாடித் தெள்ளேணங் கொட்டுவோம் என வினைமுடிபு செய்க. இதன்கண் கழல்பணித் தாண்டபிரான் என்பதனால் சிவனோடடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. of the si 244 கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவேய் அனவளைத் தோளியொடும் புகுந்தருளி நனவே யெனைப் பிடித் தாட்கொண்டவா நயந்து நெஞ்சஞ் சினவேற்கண் நீர் மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. ப-ரை. தேவர்கள் கனவேயும் காண்பு அரிய கனை கழலோன்- தேவர்கள் கனவினும் காணுதல் அரிதாகிய ஒலிக்கும் வீரக்கழலினை யணிந்த திருவடியையுடையவன், புனம் வேய் அன்ன வளை தோளி
708 திருவாசக ஆராய்ச்சியுரை தென்னா தென்னா என்றுபாடி - ஆட்கொண்டருளிய இறைவனது புகழ் களைத் தென்னா தென்னாவென்னும் சந்தக்குறிப்பு அமையப் பாடிக் கொண்டு தெள்ளேணம் கொட்டாமோ -நாம் தெள்ளேணம் என் னும் பறையினைக் கொட்டுவோமாக . வெண்ணகையீர் கல்லில் நாருரித்தாற்போல என்னையும் தன் கருணையினால் தன் திருவடியைத் தந்து ஆட்கொண்டருளிய இறைவ னது புகழ்களைப் பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் கொட்டுவோ மாக என்பதாம் . கல்லில் நாருரித்தல் கல்லை வில்லாக வளைத்த சர்வ வல்லமை யுள்ள இறைவனுக்கன்றி மற்று யாவர்க்கும் அரிது . அதுபோல வன் நெஞ்சக் கள்வனேனையும் தன் கருணையினால் அன்புடையனாக்கித் தன் திருவடியைப் பணியச் செய்தல் . பணிவித்து என்பது பணித்து என நின்றது . இனி தந்தருளி எனினுமாம் . பாடிக்கொட்டாமோ என இயையும் . மின்னேர் நுடங்கு இடை - மின்னலை ஒத்த நுடங்குகின்ற இடை . மின்னியல் நுண்ணிடை ( திருப்படை . 6 ) எனவும் மின்றங்கிடை ' மின்னணி நுண்ணிடை ( திருக்கோவை . 268 - 342 ) எனவும் பிற விடங்களிலும் அருளியமை காண்க மின்னேர் நுடங்கிடையினையும் துவர்வாயினையும் வெண்ணகையினையுமுடையீர் என்க . மின்னிடைச் செந்துவர் வாய்க் கருங்கண் வெண்ணகைப் பண்ணமர் மென்மொழி யீர் ( பொற் .13 ) எனவும் ' ' வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடை யீர் ( கோவை . 73 ) எனவும் வருவன காண்க . கன்னார் உரித்தென்னக் கழல் பணித்து ஆண்டபிரான் புகழ் தென்னா தென்னா என்று பாடித் தெள்ளேணங் கொட்டுவோம் என வினைமுடிபு செய்க . இதன்கண் கழல்பணித் தாண்டபிரான் என்பதனால் சிவனோடடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . of the si 244 கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவேய் அனவளைத் தோளியொடும் புகுந்தருளி நனவே யெனைப் பிடித் தாட்கொண்டவா நயந்து நெஞ்சஞ் சினவேற்கண் நீர் மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ . - ரை . தேவர்கள் கனவேயும் காண்பு அரிய கனை கழலோன் தேவர்கள் கனவினும் காணுதல் அரிதாகிய ஒலிக்கும் வீரக்கழலினை யணிந்த திருவடியையுடையவன் புனம் வேய் அன்ன வளை தோளி