திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ''கண்ணீர் மல்கிக் காதலித்து நின்கழலே ஏத்தும் அன்பர்" (நாவு. 260-3) எனத் தேவாரத்து வருவனவற்றினுங் காண்க. 710 கனைகழலோன் புகுந்தருளிப் பிடித்து ஆட்கொண்ட வா நயந்து கண்ணீர் மல்கி (பாடி) தெள்ளேணம் கொட்டாமோ என வினைமுடிபு செய்க. இதன்கண் ஆட்கொண்டவா நயந்து நெஞ்சம் சின வேற் கண் நீர் மல்க என்பதனால் சிவனோடடைவு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 10 கயன்மாண்ட கண்ணிதன் பங்கனெனைக்கலந் தாண்டலுமே அயன் மாண் டருவினைச் சுற்றமு மாண் டவனியின்மேல் மயன்மாண்டு மற்றுள்ள வாசகமண் டென்னுடைய செயன்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. ப - ரை. கயல் மாண்ட கண்ணிதன் பங்கன் - கயல் போலும் மாட்சிமைப்பட்ட கண்களையுடையாளது பங்கையுடையான், என்னை கலந்து ஆண்டலும் என்னை அத்துவிதமாய் என்னறிவிற் கலந்து என்னை ஆண்டருளியவுடன், அவனியின்மேல் - இந்நிலவுலகின்மேல், அயல் மாண்டு - பக்கச் சார்பாயுள்ள பொருட்பற்று ஒழிந்து, அரு வினை சுற்றமும் மாண்டு - நீங்குதற்கரிய வினையின் தொடர்பால் உள தாகிய சுற்றப் பற்றும் ஒழிந்து, மயல்மாண்டு - மன மயக்கமும் ஒழிந்து, மற்று உள்ள வாசகம் மாண்டு - மனத்தின் நினைவை வெளிப் என்னுடைய படுத்தும் பிறிதாயுள்ள வாக்கின் உரைகள் ஒழிந்து, செயல்மாண்ட ஆபாடி - என்னுடைய உடம்பின் செயல்கள் ஒழிந்து போன விதத்தினைப் பாடிக்கொண்டு, தெள்ளேணம் கொட்டாமோ - நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக. - உமையம்மை பங்கனாகிய இறைவன் என் அறிவிற் கலந்து என்னை ஆட்கொண்டருளிய உடனே இந்நிலவுலகின் மேல் அயல் மாண்டு அருவினைச் சுற்றமும் மாண்டு, மயல்மாண்டு, மற்றுள்ள வாசகமும் மாண்டு என்னுடைய செயல்கள் ஒழிந்துபோன விதத் தினைப் பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக என்ப தாம். கயல்மாண்ட கண் - கயல்போன்ற மாட்சிமைப்பட்ட கண். '"கருங் கயற் கண்ணித் திருநுதல்" '"கயல்வந்த கண்ணியர்" எனத் திருக் கண்ணி என்றது கோவையாரினும் (203-381) வருவன காண்க. உமையம்மையை. காவி சேருங் கயற்கண்ணாள் பங்கா" (பிரார்த்.5) என வருதலுங் காண்க. எனைக் கலத்தல் - எனது அறிவில் நீக்கமற
திருவாசக ஆராய்ச்சியுரை ' ' கண்ணீர் மல்கிக் காதலித்து நின்கழலே ஏத்தும் அன்பர் ( நாவு . 260-3 ) எனத் தேவாரத்து வருவனவற்றினுங் காண்க . 710 கனைகழலோன் புகுந்தருளிப் பிடித்து ஆட்கொண்ட வா நயந்து கண்ணீர் மல்கி ( பாடி ) தெள்ளேணம் கொட்டாமோ என வினைமுடிபு செய்க . இதன்கண் ஆட்கொண்டவா நயந்து நெஞ்சம் சின வேற் கண் நீர் மல்க என்பதனால் சிவனோடடைவு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 10 கயன்மாண்ட கண்ணிதன் பங்கனெனைக்கலந் தாண்டலுமே அயன் மாண் டருவினைச் சுற்றமு மாண் டவனியின்மேல் மயன்மாண்டு மற்றுள்ள வாசகமண் டென்னுடைய செயன்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ . - ரை . கயல் மாண்ட கண்ணிதன் பங்கன் - கயல் போலும் மாட்சிமைப்பட்ட கண்களையுடையாளது பங்கையுடையான் என்னை கலந்து ஆண்டலும் என்னை அத்துவிதமாய் என்னறிவிற் கலந்து என்னை ஆண்டருளியவுடன் அவனியின்மேல் - இந்நிலவுலகின்மேல் அயல் மாண்டு - பக்கச் சார்பாயுள்ள பொருட்பற்று ஒழிந்து அரு வினை சுற்றமும் மாண்டு - நீங்குதற்கரிய வினையின் தொடர்பால் உள தாகிய சுற்றப் பற்றும் ஒழிந்து மயல்மாண்டு - மன மயக்கமும் ஒழிந்து மற்று உள்ள வாசகம் மாண்டு - மனத்தின் நினைவை வெளிப் என்னுடைய படுத்தும் பிறிதாயுள்ள வாக்கின் உரைகள் ஒழிந்து செயல்மாண்ட ஆபாடி - என்னுடைய உடம்பின் செயல்கள் ஒழிந்து போன விதத்தினைப் பாடிக்கொண்டு தெள்ளேணம் கொட்டாமோ - நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக . - உமையம்மை பங்கனாகிய இறைவன் என் அறிவிற் கலந்து என்னை ஆட்கொண்டருளிய உடனே இந்நிலவுலகின் மேல் அயல் மாண்டு அருவினைச் சுற்றமும் மாண்டு மயல்மாண்டு மற்றுள்ள வாசகமும் மாண்டு என்னுடைய செயல்கள் ஒழிந்துபோன விதத் தினைப் பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக என்ப தாம் . கயல்மாண்ட கண் - கயல்போன்ற மாட்சிமைப்பட்ட கண் . ' கருங் கயற் கண்ணித் திருநுதல் ' கயல்வந்த கண்ணியர் எனத் திருக் கண்ணி என்றது கோவையாரினும் ( 203-381 ) வருவன காண்க . உமையம்மையை . காவி சேருங் கயற்கண்ணாள் பங்கா ( பிரார்த் .5 ) என வருதலுங் காண்க . எனைக் கலத்தல் - எனது அறிவில் நீக்கமற