திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

714 248 திருவாசக ஆராய்ச்சியுரை மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன் பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தால் சேலேர்கண் ணீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. ப - ரை. மாலே பிரமனே ஒழிந்த தேவர்களே நூலே நுழைவு அரியான் - திருமாலும் பிரமனும் ஏனைத் தேவர்களும் அறிவு நூல்க ளும் ஆராய்ந்து தன்னருளாலன்றி அறியமுடியாத இறைவன், நுண் ணியனாய் வந்து -நுட்பமான அரும் பொருள்களை அறிவுறுக்கும் ஞானாசாரியனாய் வலிய எழுந்தருளிவந்து, அடியேன் பால் புகுந்து - அடியேனது கலந்து, பரிந்து உருக்கும் பாவகத் தால் - இரங்கி என் உள்ளத்தை உருகச்செய்யும் இயல்பினால், சேல்ஏர் கண் நீர் மல்க - சேல்மீனைப்போன்ற கண்களினின்றும் ஆனந்தக் கண் ணீர் பெருக அவ்விறைவன் இயல்பினைப் பாடிக்கொண்டு, தெள்ளே ணம் கொட்டாமோ - தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டு வோமாக. அறிவின்கண் திருமாலும் பிரமனும் ஏனைத் தேவர்களும் அறிவு நூல்களும் ஆராய்ந்து அறியமுடியாதவனாகிய இறைவன், நுண்ணியனாய் வலிய எழுந்தருளி வந்து, அடியேன் அறிவின்கட் கலந்து என் உள்ளத்தை உருகச்செய்யும் இயல்பினால் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருக அவ் விறைவன் இயல்பினைப் பாடிக்கொண்டு தெள்ளேணம் கொட்டுவோ மாக என்பதாம். ஏகாரம் முன்னைய நான்கும் எண்ணுப்பொருளன. பின்னையது அசை. நூல் - அறிவுநூல்; தத்துவசாத்திரம், உபநிடதம், ஆகமம் எனினுமாம். திருமால் முதலியோரின் அறிவு பசு ஞானமாதலாலும், நூலறிவு பாசஞானமாதலாலும், பதி ஞானத்தாலன்றி இவற்றா லறிய முடியாதவன் இறைவனாதலின் "மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே நூலே நுழைவரியான்" என்றார். 50 நின்பெருந் தன்மை நீயே யிரங்கி உண்ணின் றுணர்த்த வுணரி னல்லதை நுண்ணூ லெண்ணி நுணங்க நாடிப் பழுதின் றெண்ணிப் பகர்து மியாமெனின் முழுது மியாரே முதுக் குறைந் தோரே" சிதம்பரமும் 17-13-17 என்பதும் ஈண்டறியற்பாலது. அடியேன் பால் புகுதல் - அடியேன் அறிவின்கண் புகுதல். பாவகம் - இயல்பு. ஏர் - உவமவுருபு. இனி, சேல் ஏர் கண் என்பதற்கு சேல்போன்ற அழகிய கண் எனினுமாம், மல் கப்பாடி என ஒரு சொல் வருவிக்க.
714 248 திருவாசக ஆராய்ச்சியுரை மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன் பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தால் சேலேர்கண் ணீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ . - ரை . மாலே பிரமனே ஒழிந்த தேவர்களே நூலே நுழைவு அரியான் - திருமாலும் பிரமனும் ஏனைத் தேவர்களும் அறிவு நூல்க ளும் ஆராய்ந்து தன்னருளாலன்றி அறியமுடியாத இறைவன் நுண் ணியனாய் வந்து -நுட்பமான அரும் பொருள்களை அறிவுறுக்கும் ஞானாசாரியனாய் வலிய எழுந்தருளிவந்து அடியேன் பால் புகுந்து - அடியேனது கலந்து பரிந்து உருக்கும் பாவகத் தால் - இரங்கி என் உள்ளத்தை உருகச்செய்யும் இயல்பினால் சேல்ஏர் கண் நீர் மல்க - சேல்மீனைப்போன்ற கண்களினின்றும் ஆனந்தக் கண் ணீர் பெருக அவ்விறைவன் இயல்பினைப் பாடிக்கொண்டு தெள்ளே ணம் கொட்டாமோ - தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டு வோமாக . அறிவின்கண் திருமாலும் பிரமனும் ஏனைத் தேவர்களும் அறிவு நூல்களும் ஆராய்ந்து அறியமுடியாதவனாகிய இறைவன் நுண்ணியனாய் வலிய எழுந்தருளி வந்து அடியேன் அறிவின்கட் கலந்து என் உள்ளத்தை உருகச்செய்யும் இயல்பினால் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருக அவ் விறைவன் இயல்பினைப் பாடிக்கொண்டு தெள்ளேணம் கொட்டுவோ மாக என்பதாம் . ஏகாரம் முன்னைய நான்கும் எண்ணுப்பொருளன . பின்னையது அசை . நூல் - அறிவுநூல் ; தத்துவசாத்திரம் உபநிடதம் ஆகமம் எனினுமாம் . திருமால் முதலியோரின் அறிவு பசு ஞானமாதலாலும் நூலறிவு பாசஞானமாதலாலும் பதி ஞானத்தாலன்றி இவற்றா லறிய முடியாதவன் இறைவனாதலின் மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே நூலே நுழைவரியான் என்றார் . 50 நின்பெருந் தன்மை நீயே யிரங்கி உண்ணின் றுணர்த்த வுணரி னல்லதை நுண்ணூ லெண்ணி நுணங்க நாடிப் பழுதின் றெண்ணிப் பகர்து மியாமெனின் முழுது மியாரே முதுக் குறைந் தோரே சிதம்பரமும் 17-13-17 என்பதும் ஈண்டறியற்பாலது . அடியேன் பால் புகுதல் - அடியேன் அறிவின்கண் புகுதல் . பாவகம் - இயல்பு . ஏர் - உவமவுருபு . இனி சேல் ஏர் கண் என்பதற்கு சேல்போன்ற அழகிய கண் எனினுமாம் மல் கப்பாடி என ஒரு சொல் வருவிக்க .