திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தெள்ளேணம் 715 நுழைவரியான் வந்து புகுந்து உருக்கும் பாவகத்தால் நீர் மல் கப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம் என வினைமுடிபு செய்க. இதன்கண் நுழைவரியான் நுண்ணியனாய் வந்து அடியேன்பால் புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தால் என்பதனால் சிவனோடடைவு என் னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 14 249 உருகிப் பெருகி யுளங்குளிர முகந்துகொண்டு பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியோம் திருவைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. ப-ரை. உள்ளம் உருகி பெருகி குளிர - மனம் அன்பினால் உருகி நிறைவடைந்து குளிரும்வண்ணம், முகந்து கொண்டு பருகற்கு இனிய பரம்கருணை தடம் கடலை மருவி - அள்ளிக்கொண்டு பருகற்கு இனி தாகிய மேலாகிய அருட்பெருங்கடலையுடையானை அடைந்து, திகழ் தென்னன் வார்கழலே நினைந்து - விளங்குகின்ற தென்னாடுடைய அச் சிவனது நீண்ட வீரக்கழலணிந்த திருவடிகளையே நினைந்து, அடியோம் திருவை பரவி - அடியோங்கள் திருவருட்பேறாகிய செல்வத்தினைப் பாடிக்கொண்டு, நாம் தெள்ளேணம் கொட்டாமோ -நாம் தெள்ளே ணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக. உள்ளம் உருகிப் பெருகிக் குளிர, முகந்துகொண்டு பருகற்கு இனிதாகிய பரங்கருணைத் தடங்கடலுடையானை அடைந்து, தென்னா டுடைய அப்பெருமானது நீண்ட வீரக்கழலையுடைய திருவடிகளையே நினைந்து, அடியேங்கள் பெற்ற திருவருட்பேறாகிய செல்வத்தினைப் பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டு வோமாக என்பதாம். உளம் உருகிப் பெருகிக் குளிர என இயைக்க. உருகி பெருகி என் னும் செய்தெனெச்சங்கள் குளிர என்னும் செயவெனெச்சத்தைக் கொண்டுமுடிந்தன. உருகிப் பெருகுதலுக்கு அன்பு என்னும் ஏது வரு விக்கப்பட்டது. குளிரப் பருகற்கு என இயையும். கருணையைக் கடல் என்றார் மிகுதிபற்றி. "பருகிய நின் பரங்கருணைத் தடங்கடலிற் படிவாமாறு அருள்'' (ஏசறவு. 9) என அடிகள் பிறிதோரிடத் தும் அருளியமை காண்க. பரங்கருணைத் தடங்கடல் என்றதற்கு இயைய ''முகந்துகொண்டு பருகற்கினிய" என்றார். பருகுதல் - திரு வருளைப்பெற்று அனுபவித்தல். கடல்மருவி என்றது இடைவிடாது தியானித்து என்றபடி. தென்னன் - தென்னாடுடையவன், "மின்னனை வினை தீர்த்தெனை ஆட்கொண்ட தென்னனை" (நாவு. 117- 5) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. கழலே நினைந்து - திருவடிகளையே
திருத்தெள்ளேணம் 715 நுழைவரியான் வந்து புகுந்து உருக்கும் பாவகத்தால் நீர் மல் கப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம் என வினைமுடிபு செய்க . இதன்கண் நுழைவரியான் நுண்ணியனாய் வந்து அடியேன்பால் புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தால் என்பதனால் சிவனோடடைவு என் னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 14 249 உருகிப் பெருகி யுளங்குளிர முகந்துகொண்டு பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியோம் திருவைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ . - ரை . உள்ளம் உருகி பெருகி குளிர - மனம் அன்பினால் உருகி நிறைவடைந்து குளிரும்வண்ணம் முகந்து கொண்டு பருகற்கு இனிய பரம்கருணை தடம் கடலை மருவி - அள்ளிக்கொண்டு பருகற்கு இனி தாகிய மேலாகிய அருட்பெருங்கடலையுடையானை அடைந்து திகழ் தென்னன் வார்கழலே நினைந்து - விளங்குகின்ற தென்னாடுடைய அச் சிவனது நீண்ட வீரக்கழலணிந்த திருவடிகளையே நினைந்து அடியோம் திருவை பரவி - அடியோங்கள் திருவருட்பேறாகிய செல்வத்தினைப் பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் கொட்டாமோ -நாம் தெள்ளே ணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக . உள்ளம் உருகிப் பெருகிக் குளிர முகந்துகொண்டு பருகற்கு இனிதாகிய பரங்கருணைத் தடங்கடலுடையானை அடைந்து தென்னா டுடைய அப்பெருமானது நீண்ட வீரக்கழலையுடைய திருவடிகளையே நினைந்து அடியேங்கள் பெற்ற திருவருட்பேறாகிய செல்வத்தினைப் பாடிக்கொண்டு நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டு வோமாக என்பதாம் . உளம் உருகிப் பெருகிக் குளிர என இயைக்க . உருகி பெருகி என் னும் செய்தெனெச்சங்கள் குளிர என்னும் செயவெனெச்சத்தைக் கொண்டுமுடிந்தன . உருகிப் பெருகுதலுக்கு அன்பு என்னும் ஏது வரு விக்கப்பட்டது . குளிரப் பருகற்கு என இயையும் . கருணையைக் கடல் என்றார் மிகுதிபற்றி . பருகிய நின் பரங்கருணைத் தடங்கடலிற் படிவாமாறு அருள் ' ' ( ஏசறவு . 9 ) என அடிகள் பிறிதோரிடத் தும் அருளியமை காண்க . பரங்கருணைத் தடங்கடல் என்றதற்கு இயைய ' ' முகந்துகொண்டு பருகற்கினிய என்றார் . பருகுதல் - திரு வருளைப்பெற்று அனுபவித்தல் . கடல்மருவி என்றது இடைவிடாது தியானித்து என்றபடி . தென்னன் - தென்னாடுடையவன் மின்னனை வினை தீர்த்தெனை ஆட்கொண்ட தென்னனை ( நாவு . 117- 5 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க . கழலே நினைந்து - திருவடிகளையே