திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

716 திருவாசக ஆராய்ச்சியுரை நினைந்து. நினைத்தற்குரியது திருவடியே என்பது "கருவாய்க் கிடந் துன் கழலே நினையுங் கருத்துடையேன்" (நாவு. 94-6) எனத் தேவாரத் தும் '"சிந்தை செய்வது சிவன் கழலல்ல தொன்றில்லார்'' எனப் பெரிய புராணத்தும் (அமர்நீதி. 3) வருவனவற்றாலுமறிக. உளம் உருகிப் பெருகிக் குளிர முகந்துகொண்டு பருகற்கு இனிய கடலை மருவி தென்னன் கழலே நினைந்து பரவி நாம் தெள்ளேணம் கொட்டுவோம் என வினைமுடிபு செய்க. இதன்கண் கடலை மருவிக் கழலே நினைந்து என்பதனால் சிவனோ டடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 15 250 புத்தன் புரந்தராதிய அயன்மால் போற்றி செயும் பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த அத்தன் அணிதில்லை பம்பலவன் அருட்கழல்கள் சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ. ப- ரை. புத்தன் -புதியனும், புரந்தர ஆதிய அயன் மால் போற்றிசெய்யும் பித்தன் - இந்திரன் முதலான தேவர்களும் பிரம னும் திருமாலும் வணக்கம் செய்யும் பித்துடைய பழையோனும், பெருந்துறை மேயபிரான் - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் தலைவனும், பிறப்பு அறுத்த அத்தன் - எனது பிறவித் துன்பத்தினை நீக் கிய தந்தையும். அணி தில்லை அம்பலவன் - அழகிய தில்லைச்சிற்றம் பலத்தையுடையானுமாகிய இறைவனுடைய, அருள் கழல்கள் சித் தம் புகுந்த ஆ(று) - திருவருளாகிய திருவடிகள் எமது உள்ளத்தில் புகுந்த விதத்தைப் பாடி, தெள்ளேணம் கொட்டாமோ-நாம் தெள் ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக, புதியனும் இந்திரன் முதலிய தேவர்கள் வணக்கஞ் செய்யும் பித் தையுடைய பழையோனும், திருப்பெருந்துறை மேயபிரானும், எமது பிறப்பு அறுத்த அத்தனும், தில்லைத் திருச்சிற்றம்பலத்தையுடை யானுமாகிய இறைவனுடைய திருவருளாகிய திருவடிகள் எமது உள்ளத்திற் புகுந்த விதத்தைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டு வோமாக என்பதாம். புத்தன் - புதுமையையுடையவன் என்றது புதியரிற்புதியன் என்ற வாறு."பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே" (திருவெம் பா. 9) எனவும் ''புதியரிற் புதியன் மூதக் கார்க்குமூ தக்கவன்' (கந்த. சூரன் அமைச், 127) எனவும் வருவன காண்க. புரந்தர + ஆதி = புரந் தராதி - வடநூன் முடிபு. இந்திரன் முதலிய தேவர்கள் என்றவாறு. போற்றி - வணக்கம். புத்தன் என்பதற்கு இயையப் பித்தன் என்ப
716 திருவாசக ஆராய்ச்சியுரை நினைந்து . நினைத்தற்குரியது திருவடியே என்பது கருவாய்க் கிடந் துன் கழலே நினையுங் கருத்துடையேன் ( நாவு . 94-6 ) எனத் தேவாரத் தும் ' சிந்தை செய்வது சிவன் கழலல்ல தொன்றில்லார் ' ' எனப் பெரிய புராணத்தும் ( அமர்நீதி . 3 ) வருவனவற்றாலுமறிக . உளம் உருகிப் பெருகிக் குளிர முகந்துகொண்டு பருகற்கு இனிய கடலை மருவி தென்னன் கழலே நினைந்து பரவி நாம் தெள்ளேணம் கொட்டுவோம் என வினைமுடிபு செய்க . இதன்கண் கடலை மருவிக் கழலே நினைந்து என்பதனால் சிவனோ டடைவு என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 15 250 புத்தன் புரந்தராதிய அயன்மால் போற்றி செயும் பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த அத்தன் அணிதில்லை பம்பலவன் அருட்கழல்கள் சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ . ப- ரை . புத்தன் -புதியனும் புரந்தர ஆதிய அயன் மால் போற்றிசெய்யும் பித்தன் - இந்திரன் முதலான தேவர்களும் பிரம னும் திருமாலும் வணக்கம் செய்யும் பித்துடைய பழையோனும் பெருந்துறை மேயபிரான் - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் தலைவனும் பிறப்பு அறுத்த அத்தன் - எனது பிறவித் துன்பத்தினை நீக் கிய தந்தையும் . அணி தில்லை அம்பலவன் - அழகிய தில்லைச்சிற்றம் பலத்தையுடையானுமாகிய இறைவனுடைய அருள் கழல்கள் சித் தம் புகுந்த ( று ) - திருவருளாகிய திருவடிகள் எமது உள்ளத்தில் புகுந்த விதத்தைப் பாடி தெள்ளேணம் கொட்டாமோ - நாம் தெள் ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக புதியனும் இந்திரன் முதலிய தேவர்கள் வணக்கஞ் செய்யும் பித் தையுடைய பழையோனும் திருப்பெருந்துறை மேயபிரானும் எமது பிறப்பு அறுத்த அத்தனும் தில்லைத் திருச்சிற்றம்பலத்தையுடை யானுமாகிய இறைவனுடைய திருவருளாகிய திருவடிகள் எமது உள்ளத்திற் புகுந்த விதத்தைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டு வோமாக என்பதாம் . புத்தன் - புதுமையையுடையவன் என்றது புதியரிற்புதியன் என்ற வாறு . பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே ( திருவெம் பா . 9 ) எனவும் ' ' புதியரிற் புதியன் மூதக் கார்க்குமூ தக்கவன் ' ( கந்த . சூரன் அமைச் 127 ) எனவும் வருவன காண்க . புரந்தர + ஆதி = புரந் தராதி - வடநூன் முடிபு . இந்திரன் முதலிய தேவர்கள் என்றவாறு . போற்றி - வணக்கம் . புத்தன் என்பதற்கு இயையப் பித்தன் என்ப