திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தெள்ளேணம் தற்கு அருட்பித்தையுடைய பழையோன் என வுரைக்க. பிறப் பறுத்த அத்தன் - பிறவித் துன்பத்தினை நீக்கிய தந்தை. ''எனைப் பெரிது மாட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை" (கண்டபத்து 2) என அடிகள் பிறிதோரிடத்தும் அருளியமை காண்க. கழல்கள் சித்தம் புகுதல் - கழல்களை இடைவிடாது தியானித்தல். புகுந்தவாறு என்பது புகுந்தவா என ஈறு கெட்டது. புகுந்தவா பாடி என ஒரு சொல் வருவித்துரைக்க. புத்தன் பித்தன் பிரான் அத்தன் அம்பலவன் ஆகிய இறைவனு டைய கழல்கள் புகுந்தவாறு (பாடித்) தெள்ளேணம் கொட்டுவாம் என்பதாம். 717 இதன்கண் அருட்கழல்கள் சித்தம் புகுந்தவா என்பதனால் சிவனோ டடைவு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 16 251 உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம் சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறுங் கவவைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளுஞ் செயலைப் பரவிநாம் தெள்ளேணம் கொட்டாமோ. ப - ரை. உவலை சமயங்கள் ஒவ்வாத சாத்திரம் ஆம் - பொய்ச் சமயங்களும் அவற்றின் பொருத்தமில்லாத சாத்திரங்களும் ஆகிய. சவலை கடல் உளனாய் கிடந்து தடுமாறும் - துன்பக்கடலினுள்ளே உள் ளேனாய் கிடந்து மனந் தடுமாறுதற் கேதுவாகிய, கவலை கெடுத்து - மனத் துன்பத்தினை நீக்கி, கழல் இணைகள் தந்தருளும் - தன் இரண்டு திருவடிகளையுந் தந்தருளுகின்ற, செயலை பரவி-இறைவனது திருவருட் செயலைத் துதித்து, நாம் தெள்ளேணம் கொட்டாம் - நாம் தெள்ளே ணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக. உவலைச் சமயங்களும் அவற்றின் ஒவ்வாத சாத்திரங்களுமாகிய துன்பக் கடலுள் உள்ளேனாய்க் கிடந்து மனம் தடுமாறுதற் கேதுவா கிய கவலையைக் கெடுத்துத் தன் திருவடியைத் தந்தருளுகின்ற இறை வனது திருவருட் செயலைப் பரவி நாம் தெள்ளேணம் என்னும் பறை யினைக் கொட்டுவோமாக என்பதாம் 0011 உவலை - பொய். உவலைச் சமயங்கள் பௌத்த முதலிய சமயங் கள். ஒவ்வாமை - நியாய நூல் அளவைக்கும் பொருந்தாமை. சாத் திரம்-சமயநூல்கள். சவலை- மெலிவு, துன்பம். சவலைக்கடல் - துன்பக் கடல். உளனாய்க் கிடந்து என்றது உள்ளே உள்ளேனாய்க் கிடந்து என்றபடி. உளன் என்பதில் அன் விகுதி தன்மைக்கண் வந்தது. தடுமாறுதல் - உளம் நிலைபேறின்றி நிற்றல். கவலை - மனத்துன்பம். கவலை என்பது கவல் எனக் கடைக்குறைந்து நின்றது.
திருத்தெள்ளேணம் தற்கு அருட்பித்தையுடைய பழையோன் என வுரைக்க . பிறப் பறுத்த அத்தன் - பிறவித் துன்பத்தினை நீக்கிய தந்தை . ' ' எனைப் பெரிது மாட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை ( கண்டபத்து 2 ) என அடிகள் பிறிதோரிடத்தும் அருளியமை காண்க . கழல்கள் சித்தம் புகுதல் - கழல்களை இடைவிடாது தியானித்தல் . புகுந்தவாறு என்பது புகுந்தவா என ஈறு கெட்டது . புகுந்தவா பாடி என ஒரு சொல் வருவித்துரைக்க . புத்தன் பித்தன் பிரான் அத்தன் அம்பலவன் ஆகிய இறைவனு டைய கழல்கள் புகுந்தவாறு ( பாடித் ) தெள்ளேணம் கொட்டுவாம் என்பதாம் . 717 இதன்கண் அருட்கழல்கள் சித்தம் புகுந்தவா என்பதனால் சிவனோ டடைவு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 16 251 உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம் சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறுங் கவவைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளுஞ் செயலைப் பரவிநாம் தெள்ளேணம் கொட்டாமோ . - ரை . உவலை சமயங்கள் ஒவ்வாத சாத்திரம் ஆம் - பொய்ச் சமயங்களும் அவற்றின் பொருத்தமில்லாத சாத்திரங்களும் ஆகிய . சவலை கடல் உளனாய் கிடந்து தடுமாறும் - துன்பக்கடலினுள்ளே உள் ளேனாய் கிடந்து மனந் தடுமாறுதற் கேதுவாகிய கவலை கெடுத்து - மனத் துன்பத்தினை நீக்கி கழல் இணைகள் தந்தருளும் - தன் இரண்டு திருவடிகளையுந் தந்தருளுகின்ற செயலை பரவி - இறைவனது திருவருட் செயலைத் துதித்து நாம் தெள்ளேணம் கொட்டாம் - நாம் தெள்ளே ணம் என்னும் பறையினைக் கொட்டுவோமாக . உவலைச் சமயங்களும் அவற்றின் ஒவ்வாத சாத்திரங்களுமாகிய துன்பக் கடலுள் உள்ளேனாய்க் கிடந்து மனம் தடுமாறுதற் கேதுவா கிய கவலையைக் கெடுத்துத் தன் திருவடியைத் தந்தருளுகின்ற இறை வனது திருவருட் செயலைப் பரவி நாம் தெள்ளேணம் என்னும் பறை யினைக் கொட்டுவோமாக என்பதாம் 0011 உவலை - பொய் . உவலைச் சமயங்கள் பௌத்த முதலிய சமயங் கள் . ஒவ்வாமை - நியாய நூல் அளவைக்கும் பொருந்தாமை . சாத் திரம் - சமயநூல்கள் . சவலை- மெலிவு துன்பம் . சவலைக்கடல் - துன்பக் கடல் . உளனாய்க் கிடந்து என்றது உள்ளே உள்ளேனாய்க் கிடந்து என்றபடி . உளன் என்பதில் அன் விகுதி தன்மைக்கண் வந்தது . தடுமாறுதல் - உளம் நிலைபேறின்றி நிற்றல் . கவலை - மனத்துன்பம் . கவலை என்பது கவல் எனக் கடைக்குறைந்து நின்றது .