திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருத்தெள்ளேணம் 719 புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கும் கெட் டமை கொள்ளப்படும். ஊன் உயிர்ப்பு உணர்வு உள்ளம் நான்கெட்டு என்பது இவற்றின் பற்று நீங்கி என்றவாறு. நீங்கியமை இறைவன் அருளால் என்க. இறைவன் திருவருள் வழி ஒன்றிலேயே உறைத்து நிற்பார்க்கு உடம்பைப்பற்றிய உணர்வும் உயிரைப்பற்றிய உணர்வும் சுட்டியுணரும் அறிவும், அந்தக் கரணங்களாய் நிற்கும் மன முதலிய வற்றைப்பற்றிய உணர்வும் தற்போதமும் கெட்டொழிதலின் "ஊன் கெட் டுயிர் கெட் டுணர்வு கெட்டெ னுள்ளமும் போய், கெட்ட வாபாடி என்றார். நான் "தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன் வானும் அழிந்து மனமும் அழிந்து பின் நானும் அழிந்தமை நானறி யேனே" எனத் திருமந்திரத்தும் வருதல் காண்க. சலிப்பறியாத் தன்மையனுக்கு ஊன் கெட்டு உயிர் கெட்டு உணர்வுகெட்டு உள்ளமும் போய் நான்கெட்ட வாபாடித் தெள்ளே ணம் கொட்டாமோ என வினைமுடிபு செய்க. இதன்சண் நான் கெட்டவாபாடி என்பதனால் சிவனோடடைவு என் னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 18 253 விண்ணோர் முழுமுதல் பாதாளத்தார் வித்து மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம் கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித் தென்னாதென் னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. ப-ரை: விண்ணோர் முழுமுதல்-இந்திரன் முதலிய தேவர்களுக்கு முழுமுதலாயுள்ளவனும், பாதாளத்தார் வித்து - கீழுலகத்தார்க்கு வித்துப் போன்றவனும், மண்ணோர் மருந்து - நிலவுலகினர்க்கு அமுத மானவனும், அயன்மாலுடைய வைப்பு - நான்முகனுக்கும் திருமா லுக்கும் தேடிவைத்த செல்லம் போன்றவனுமாகிய இறைவன், அடி யோம் கண் ஆரவந்து நின்றான் - அடிமைகளாகிய நாம் கண்ணாரக் சாணும்படி ஞானாசாரியனாய் எழுந்தருளி வந்தானது, கருணை கழல் தென்னா தென்னா என்று பாடி- அருட்டிருவடிகளைத் தென்னா தென்னா என்னும் சந்தம் அமையப் பாடிக்கொண்டு, தெள்ளேணம் கொட் டாமோ - நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோ மாக.
திருத்தெள்ளேணம் 719 புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கும் கெட் டமை கொள்ளப்படும் . ஊன் உயிர்ப்பு உணர்வு உள்ளம் நான்கெட்டு என்பது இவற்றின் பற்று நீங்கி என்றவாறு . நீங்கியமை இறைவன் அருளால் என்க . இறைவன் திருவருள் வழி ஒன்றிலேயே உறைத்து நிற்பார்க்கு உடம்பைப்பற்றிய உணர்வும் உயிரைப்பற்றிய உணர்வும் சுட்டியுணரும் அறிவும் அந்தக் கரணங்களாய் நிற்கும் மன முதலிய வற்றைப்பற்றிய உணர்வும் தற்போதமும் கெட்டொழிதலின் ஊன் கெட் டுயிர் கெட் டுணர்வு கெட்டெ னுள்ளமும் போய் கெட்ட வாபாடி என்றார் . நான் தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன் வானும் அழிந்து மனமும் அழிந்து பின் நானும் அழிந்தமை நானறி யேனே எனத் திருமந்திரத்தும் வருதல் காண்க . சலிப்பறியாத் தன்மையனுக்கு ஊன் கெட்டு உயிர் கெட்டு உணர்வுகெட்டு உள்ளமும் போய் நான்கெட்ட வாபாடித் தெள்ளே ணம் கொட்டாமோ என வினைமுடிபு செய்க . இதன்சண் நான் கெட்டவாபாடி என்பதனால் சிவனோடடைவு என் னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 18 253 விண்ணோர் முழுமுதல் பாதாளத்தார் வித்து மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம் கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித் தென்னாதென் னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ . - ரை : விண்ணோர் முழுமுதல் - இந்திரன் முதலிய தேவர்களுக்கு முழுமுதலாயுள்ளவனும் பாதாளத்தார் வித்து - கீழுலகத்தார்க்கு வித்துப் போன்றவனும் மண்ணோர் மருந்து - நிலவுலகினர்க்கு அமுத மானவனும் அயன்மாலுடைய வைப்பு - நான்முகனுக்கும் திருமா லுக்கும் தேடிவைத்த செல்லம் போன்றவனுமாகிய இறைவன் அடி யோம் கண் ஆரவந்து நின்றான் - அடிமைகளாகிய நாம் கண்ணாரக் சாணும்படி ஞானாசாரியனாய் எழுந்தருளி வந்தானது கருணை கழல் தென்னா தென்னா என்று பாடி- அருட்டிருவடிகளைத் தென்னா தென்னா என்னும் சந்தம் அமையப் பாடிக்கொண்டு தெள்ளேணம் கொட் டாமோ - நாம் தெள்ளேணம் என்னும் பறையினைக் கொட்டுவோ மாக .