திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை : விண்ணோர்க்கு முழுமுதலாயும், பாதாளத்தார்க்கு மூலமாய வித்தாயும், மண்ணுலகத்தார்க்கு மருந்தாயும், பிரமன் திருமாலுக் குத் தேடிவைத்த செல்வமாயுமுள்ள இறைவன் அடியோங்கள் கண்ணா ரக்கண்டு இன்புறும்படி ஞானாசாரியனாய் எழுந்தருளி வந்து நின்றான். அவனது கருணைக்கழல்களைத் தென்னா தென்னாவென்று பாடிக் கொண்டு தெள்ளேணம் கொட்டுவோமாக என்பதாம். 720 வித்து - விதை. பாதாளத்துள்ள நரகர்கள் அக்கதியினின்று நீங்கி மேற்கதி அடைதற்கு மூலமாயிருப்பவன் இறைவனாதலின் பாதாளத்தார் வித்து என்றார். வினைகளைப் புரிந்து வினைப்பயன்களை அனுபவித்துப் பிறந்திறந்து உழலுகின்ற மண்ணுலகத்தார்களுக்குப் பிறப்புக்குக் காரணமாகிய மும்மலங்களை நீக்கும் மருந்து போல் வான் இறைவனாதலின் "மண்ணோர் மருந்து' என்றார். நான்முகனும் திருமாலும் பிரகிருதியில் படைத்தற் றொழிலையும் காத்தற்றொழிலையும் செய்துகொண்டு உயர்வடைதற்கு அவ்விறை வன் வழிபாடே தேடிவைத்த செல்வம் போல் ஏதுவாகலின் "அயன் மாலுடை வைப்பு" என்றார். "அம்புய மலர்மே லண்ணல் அச்சுத னாதி வானோர், தம்பதம் எமக்கு நல்குந் தற்பரா என்றே யாரும். நம்புறு பொருட்டால் வேதம் நவின்றிட" எனக் கந்தபுராணத்தும் (கந்த விரதம் 66) வருதல் காண்க. கண்ணார என்பதற்குக் கண்ணாரக்காண என ஒருசொல் வருவித்து அதனை வந்து நின்றான் என்னும் வினையோடு முடிக்க. வந்து நின்றான் ஒரு சொன்னீர்மைத்து; வந்தனன் என்பது பொருள். அது வினையால் ணையும் பெயராய் ஆறனுருபு ஏற்றது. கருணைக்கழல் - அருட்கழல், 'அணிதில்லை அம்பலவன் அருட்கழல்கள்" (தெள் 16) என வந்தமை Gagjas காண்க. முழுமுதலும் வித்தும் மருந்தும் வைப்புமாகிய இறைவன் காண வந்து நின்றான். அவனுடைய கழல்கள் பாடித் தெள்ளேணம் கொட் டுவரம் என முடிக்க. இதனகண் கண்ணார வந்து நின்றான் கருணைக் கழல்பாடி என் பதனால் சிவனோடடைவு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 254 குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல்வளையாள் நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாடோறும் அலம்பார் புனற்றில்லை பம்பலத்தே யாடுகின்ற சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 19
திருவாசக ஆராய்ச்சியுரை : விண்ணோர்க்கு முழுமுதலாயும் பாதாளத்தார்க்கு மூலமாய வித்தாயும் மண்ணுலகத்தார்க்கு மருந்தாயும் பிரமன் திருமாலுக் குத் தேடிவைத்த செல்வமாயுமுள்ள இறைவன் அடியோங்கள் கண்ணா ரக்கண்டு இன்புறும்படி ஞானாசாரியனாய் எழுந்தருளி வந்து நின்றான் . அவனது கருணைக்கழல்களைத் தென்னா தென்னாவென்று பாடிக் கொண்டு தெள்ளேணம் கொட்டுவோமாக என்பதாம் . 720 வித்து - விதை . பாதாளத்துள்ள நரகர்கள் அக்கதியினின்று நீங்கி மேற்கதி அடைதற்கு மூலமாயிருப்பவன் இறைவனாதலின் பாதாளத்தார் வித்து என்றார் . வினைகளைப் புரிந்து வினைப்பயன்களை அனுபவித்துப் பிறந்திறந்து உழலுகின்ற மண்ணுலகத்தார்களுக்குப் பிறப்புக்குக் காரணமாகிய மும்மலங்களை நீக்கும் மருந்து போல் வான் இறைவனாதலின் மண்ணோர் மருந்து ' என்றார் . நான்முகனும் திருமாலும் பிரகிருதியில் படைத்தற் றொழிலையும் காத்தற்றொழிலையும் செய்துகொண்டு உயர்வடைதற்கு அவ்விறை வன் வழிபாடே தேடிவைத்த செல்வம் போல் ஏதுவாகலின் அயன் மாலுடை வைப்பு என்றார் . அம்புய மலர்மே லண்ணல் அச்சுத னாதி வானோர் தம்பதம் எமக்கு நல்குந் தற்பரா என்றே யாரும் . நம்புறு பொருட்டால் வேதம் நவின்றிட எனக் கந்தபுராணத்தும் ( கந்த விரதம் 66 ) வருதல் காண்க . கண்ணார என்பதற்குக் கண்ணாரக்காண என ஒருசொல் வருவித்து அதனை வந்து நின்றான் என்னும் வினையோடு முடிக்க . வந்து நின்றான் ஒரு சொன்னீர்மைத்து ; வந்தனன் என்பது பொருள் . அது வினையால் ணையும் பெயராய் ஆறனுருபு ஏற்றது . கருணைக்கழல் - அருட்கழல் ' அணிதில்லை அம்பலவன் அருட்கழல்கள் ( தெள் 16 ) என வந்தமை Gagjas காண்க . முழுமுதலும் வித்தும் மருந்தும் வைப்புமாகிய இறைவன் காண வந்து நின்றான் . அவனுடைய கழல்கள் பாடித் தெள்ளேணம் கொட் டுவரம் என முடிக்க . இதனகண் கண்ணார வந்து நின்றான் கருணைக் கழல்பாடி என் பதனால் சிவனோடடைவு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 254 குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல்வளையாள் நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாடோறும் அலம்பார் புனற்றில்லை பம்பலத்தே யாடுகின்ற சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ . 19