திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
12 திருச்சாழல்
சிவனுடைய காருணியம்
திருத்தில்லையில் அருளிச்செய்யப்பட்டது.
அடிகள் ஈழநாட்டுப் புத்தர்களோடு வாதிட்டபொழுது அவர்கள்
வினாவிய வினாக்களுக்குத் தாம் அருளிச்செய்த விடையினை அப்புத்தரு
டன் வந்திருந்த இலங்கை அரசன் மகளாகிய ஊமைப் பெண்ணைக்
கொண்டு கூறும்படி செய்து பின்னர் அப்பெண்ணை முன்னிலைப்படுத்தி
அக்கேள்விகளைக் கேட்க அப்பெண் மறுமொழி கூறும் வகையில் இப்
பகுதியை அடிகள் அருளிச்செய்துள்ளார். சாழல் என்பது மகளிர் கை
கொட்டியாடும் ஒருவகை விளையாட்டு. இதனை, இக்காலத்துச் சோப
னம் கொட்டுதல் என்பர்.
இதன் உள்ளுறை சிவனுடைய காருணியம் என்றது இறைவன்
அருட்சத்தியின் திருவிளையாடல். இது நாலடித் தரவு கொச்சகக்
கலிப்பா.
255
தரவு கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்.
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதுந் திருவாயான் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.
ப- ரை. ஏடீ - தோழியே, பூசுவதும் வெண்ணீறு - இறைவன்
திருமேனியில் பூசுவதும் வெள்ளிய திருவெண்ணீற்றுப் பொடியே, பூண்
பதுவும் பொங்கு அரவம் - அணிவதும் சீறுகின்ற பாம்பே; திருவா
யால் பேசுவதும் மறை - திருவாயினாற் பேசுவதும் வேதங்களாகும்.
என்னை - இஃதென்னையெனில், பூசுவதும் பூண்பதுவும் பேசுவதும்
கொண்டு - பூசுவதையும் பூண்பதையும் பேசுவதையும்கொண்டு, ஈசன்
அவன் எவ்வுயிர்க்கும் இயல்பு ஆனான் சாழலோ - தலைவனாகிய அவன்
எவ்வகைப்பட்ட வுயிர்களுக்கும் அவ்வவற்றிற்குத் தக்க பயன் அளிக்
கும் இயல்புடையனாயினன் என்று சாழல் கொட்டுவோம்.
ஏடீ, இறைவன் பூசுவதும் வெண்ணீறு; பூண்பதுவும் அரவம், பேசு
வதும் மறை, இஃதென்னையெனின் ஈசனாகிய அவன் பூசுவதும் பூண்ப
துவும் பேசுவதும் கொண்டு எவ்வுயிர்க்கும் அவ்வவற்றிற்குத் தக்க
பயன் அளிக்கும் இயல்புடையனாயினான் என்று சாழல் கொட்டு
வோம் என்பதாம்.
12
திருச்சாழல்
சிவனுடைய
காருணியம்
திருத்தில்லையில்
அருளிச்செய்யப்பட்டது
.
அடிகள்
ஈழநாட்டுப்
புத்தர்களோடு
வாதிட்டபொழுது
அவர்கள்
வினாவிய
வினாக்களுக்குத்
தாம்
அருளிச்செய்த
விடையினை
அப்புத்தரு
டன்
வந்திருந்த
இலங்கை
அரசன்
மகளாகிய
ஊமைப்
பெண்ணைக்
கொண்டு
கூறும்படி
செய்து
பின்னர்
அப்பெண்ணை
முன்னிலைப்படுத்தி
அக்கேள்விகளைக்
கேட்க
அப்பெண்
மறுமொழி
கூறும்
வகையில்
இப்
பகுதியை
அடிகள்
அருளிச்செய்துள்ளார்
.
சாழல்
என்பது
மகளிர்
கை
கொட்டியாடும்
ஒருவகை
விளையாட்டு
.
இதனை
இக்காலத்துச்
சோப
னம்
கொட்டுதல்
என்பர்
.
இதன்
உள்ளுறை
சிவனுடைய
காருணியம்
என்றது
இறைவன்
அருட்சத்தியின்
திருவிளையாடல்
.
இது
நாலடித்
தரவு
கொச்சகக்
கலிப்பா
.
255
தரவு
கொச்சகக்
கலிப்பா
திருச்சிற்றம்பலம்
.
பூசுவதும்
வெண்ணீறு
பூண்பதுவும்
பொங்கரவம்
பேசுவதுந்
திருவாயான்
மறைபோலுங்
காணேடீ
பூசுவதும்
பேசுவதும்
பூண்பதுவுங்
கொண்டென்னை
ஈசனவன்
எவ்வுயிர்க்கும்
இயல்பானான்
சாழலோ
.
ப-
ரை
.
ஏடீ
-
தோழியே
பூசுவதும்
வெண்ணீறு
-
இறைவன்
திருமேனியில்
பூசுவதும்
வெள்ளிய
திருவெண்ணீற்றுப்
பொடியே
பூண்
பதுவும்
பொங்கு
அரவம்
-
அணிவதும்
சீறுகின்ற
பாம்பே
;
திருவா
யால்
பேசுவதும்
மறை
-
திருவாயினாற்
பேசுவதும்
வேதங்களாகும்
.
என்னை
-
இஃதென்னையெனில்
பூசுவதும்
பூண்பதுவும்
பேசுவதும்
கொண்டு
-
பூசுவதையும்
பூண்பதையும்
பேசுவதையும்கொண்டு
ஈசன்
அவன்
எவ்வுயிர்க்கும்
இயல்பு
ஆனான்
சாழலோ
-
தலைவனாகிய
அவன்
எவ்வகைப்பட்ட
வுயிர்களுக்கும்
அவ்வவற்றிற்குத்
தக்க
பயன்
அளிக்
கும்
இயல்புடையனாயினன்
என்று
சாழல்
கொட்டுவோம்
.
ஏடீ
இறைவன்
பூசுவதும்
வெண்ணீறு
;
பூண்பதுவும்
அரவம்
பேசு
வதும்
மறை
இஃதென்னையெனின்
ஈசனாகிய
அவன்
பூசுவதும்
பூண்ப
துவும்
பேசுவதும்
கொண்டு
எவ்வுயிர்க்கும்
அவ்வவற்றிற்குத்
தக்க
பயன்
அளிக்கும்
இயல்புடையனாயினான்
என்று
சாழல்
கொட்டு
வோம்
என்பதாம்
.