திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பூசுவதும் - திருமேனியில் பூசுவதும். வெண்ணீறு - வெள்ளிய திரு நீறு. "வெண்பொடி பூசும் பெருமானார். ”(ஞான 322 - 2) எனவும் "பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்" (அப்பர் 81-4) என வும் தேவாரத்து வருவன காண்க. 724 பூண்பதுவும் பொங்கரவம் - திருமேனியில் அணிவது சீறுகின்ற பாம்பு.''அராப் பூண்பவனே' ' (அடைக். 2) எனவும் ''பூண்பது அர வம்" "பொங்கரவம் அணிமார்பினான்" (ஞான 227-2; 269-4) எனவும் வருவது காண்க. திருவாயால் பேசுவது மறை என்றது திருவாயினாற் சொல்லுவது வேதம் என்றவாறு. "மாதிவர் பாகன் மறை நவின்ற வாசகன்'" (திருவா; வார்த்தை 1) எனவும் "மறையுமோதுவர் மான்மறிக் கை யினர்" (தே.நா : 129 - 1) எனவும் வருவன காண்க. போலும் அசை நிலை. காண் - முன்னிலையசை. ஏடீ என்பது தோழியை விளிக்கும் வழக்குச் சொல். பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங்கொண்டு ஈசன் எல்வுயிர்க்கும் இயல்பாதல் யாங்ஙனமெனில், வெண்ணீற்றை அணிவதால் மலத்தை நீக்கிச் சிவத்துவப்பேற்றை நல்குதலும், மறை பேசுதலால் பொய் தீ ரொழுக்க நெறியினை நல்குதலும், அரவணிதலால் உலகினை இயக்கும் தமது சத்தியை உணர்த்துதலும் உளவாதலால் ஆகும். "இயல்பாய ஈசனை" (நாவு.225-8) எனவும். "ஏயவன் காண் எல்லார்க்கு மியல் பானான் காண்" (நாவு. 261 -3) எனவும் தேவாரத்து வருவன காண்க. நீற்றினைப் பூசுதலும் அரவினை அணிதலும் மறையைப் பேசுதலும் இறைமைக்குணத்திற்கு இழுக்காகாவோவெனின் நீற்றைப் பூசுத லால் மலத்தை நீக்கிச் சிவத்துவப் பேற்றை நல்குதலும்,அரவம் பூணு தலால் உலகினை இயக்கும் தனது ஆற்றலை உணர்த்துதலும், மறை யைப் பேசுதலாற் பொய்தீரொழுக்க நெறியினை அருளுதலுமாகிய சிறந்த பொருள்களைக் குறிப்பனவாமாதலின் இழுக்காகாவென்க. இதன்கண்,பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டு எவ்வுயிர்க் கும் இயல்பானான் என்பதனால் சிவனுடைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 1 256 என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தானீசன் துன்னம் பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமரச் சாத்தினன் காண் சாழலோ. ப-ரை. ஏடீ - தோழியே, என் அப்பன் எம்பிரான் எல்லார்க் கும் ஈசன்தான் - எனது தந்தையும் எமது தலைவனும் எல்லார்க்கும்
திருவாசக ஆராய்ச்சியுரை பூசுவதும் - திருமேனியில் பூசுவதும் . வெண்ணீறு - வெள்ளிய திரு நீறு . வெண்பொடி பூசும் பெருமானார் . ( ஞான 322 - 2 ) எனவும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் ( அப்பர் 81-4 ) என வும் தேவாரத்து வருவன காண்க . 724 பூண்பதுவும் பொங்கரவம் - திருமேனியில் அணிவது சீறுகின்ற பாம்பு . ' ' அராப் பூண்பவனே ' ' ( அடைக் . 2 ) எனவும் ' ' பூண்பது அர வம் பொங்கரவம் அணிமார்பினான் ( ஞான 227-2 ; 269-4 ) எனவும் வருவது காண்க . திருவாயால் பேசுவது மறை என்றது திருவாயினாற் சொல்லுவது வேதம் என்றவாறு . மாதிவர் பாகன் மறை நவின்ற வாசகன் ' ( திருவா ; வார்த்தை 1 ) எனவும் மறையுமோதுவர் மான்மறிக் கை யினர் ( தே.நா : 129 - 1 ) எனவும் வருவன காண்க . போலும் அசை நிலை . காண் - முன்னிலையசை . ஏடீ என்பது தோழியை விளிக்கும் வழக்குச் சொல் . பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங்கொண்டு ஈசன் எல்வுயிர்க்கும் இயல்பாதல் யாங்ஙனமெனில் வெண்ணீற்றை அணிவதால் மலத்தை நீக்கிச் சிவத்துவப்பேற்றை நல்குதலும் மறை பேசுதலால் பொய் தீ ரொழுக்க நெறியினை நல்குதலும் அரவணிதலால் உலகினை இயக்கும் தமது சத்தியை உணர்த்துதலும் உளவாதலால் ஆகும் . இயல்பாய ஈசனை ( நாவு.225-8 ) எனவும் . ஏயவன் காண் எல்லார்க்கு மியல் பானான் காண் ( நாவு . 261 -3 ) எனவும் தேவாரத்து வருவன காண்க . நீற்றினைப் பூசுதலும் அரவினை அணிதலும் மறையைப் பேசுதலும் இறைமைக்குணத்திற்கு இழுக்காகாவோவெனின் நீற்றைப் பூசுத லால் மலத்தை நீக்கிச் சிவத்துவப் பேற்றை நல்குதலும் அரவம் பூணு தலால் உலகினை இயக்கும் தனது ஆற்றலை உணர்த்துதலும் மறை யைப் பேசுதலாற் பொய்தீரொழுக்க நெறியினை அருளுதலுமாகிய சிறந்த பொருள்களைக் குறிப்பனவாமாதலின் இழுக்காகாவென்க . இதன்கண் பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டு எவ்வுயிர்க் கும் இயல்பானான் என்பதனால் சிவனுடைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 1 256 என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தானீசன் துன்னம் பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமரச் சாத்தினன் காண் சாழலோ . - ரை . ஏடீ - தோழியே என் அப்பன் எம்பிரான் எல்லார்க் கும் ஈசன்தான் - எனது தந்தையும் எமது தலைவனும் எல்லார்க்கும்