திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருச்சாழல் தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண்டேயன் வீடுநா ளணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன் பாடுதான் செல்லுமஞ்சிப் பாதமே சரணமென்னச் சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே'' mal 729 நாவு.65-1 "அந்தணாள னுன் னடைக்கலம் புகுத அவனைக்காப்பது காரணமாக வந்த காலன் றனாருயிரதனை வவ்வினாய்க்கு" எனத் தேவாரத்து வருவன காண்க. அந்தகன் என்பதற்கு உலகத் துக்குத் தீமைசெய்த அந்தகாசுரன் என உரைப்பாருமுளர். அவர் மனகர் "பூமன் சிரம் கண்டி அந்தகன் கோவல் புரம் அதிகை மாமன் றியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர் காமன் குறுக்கை யான் கடவூர் இந்தக் காசினியில் தேமன்னு கொன்றையுந் திங்களும் சூடினன் சேவகமே கருத்து தனிப்பாடல் என்பதனைக் காட்டித் தங்கொள்கையைச் சாதிப்பாராயினும் இங்கே தண்டிக்கப்பட்டவர்கள் வானவர்கள் என்பது 'சயமன்றோ வானவர் க்கு என்பதனாற் பெறப்படுதலின் அந்தகாசுரன் எனவுரைத்தல் ஈண்டைக்குப் பொருந்தாதென்க. 55 சந்திரன், தக்கன் இறைவனை இகழ்ந்து செய்த யாகத்துக்குச் செனறு அவிப்பாகம் உண்ட குற்றத்தால் வீரபத்திரக்கடவுளால் தேய்ப்புண்டான். "சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வி யினில்'" (அம்மானை 15) என வருதல் காண்க. இங்கே வயிரவக்கட வுள் செயலையும் வீரபத்திரக்கடவுள் செயலையும் "அயனை... சந்தி ரனை வடுச்செய்தான்" என இறைவன் செயலாகக் கூறியமை அவர் கள் இறைவனின் வேறல்லர் என்பது பற்றியாகும். வயனம் - வழி ''வானம் பெறுவீர் அவ்வானவராலே (திருமந் 107) என்பது காண்க. வயனங்கள் என்ற பன்மையால் வழி வழியாக வென உரைக்கப்பட்டது. மாயா வடு -அழியாத தழும்பு தாழ்குழ லாய் என்ற விளியை தாழ்குழலாய் ஏடீ என இயைத்துத் தாழ்ந்த கூந் தலையுடைய தோழி எனப் பொருள் கொள்க. ஏ டீ- என்றவிளியின் ஆற்றலால் இஃதென்னை என்னும் வினா வருவித்துரைக்கப்படும். நயனங்கள் மூன்றுடைய நாயகன் - மூன்று திருக்கண் களையுடைய சிவபெருமான். ''நயனங்கள் மூன்றுடைய நந்தி" என்றார் திருமந்திரத் தும். 511 நாயகன் தண்டித்தால் அயன் முதலிய வானவர்க்குச் சயமுண்டா மாறு யாங்ஙனமெனில், இறைவனாற் செய்யப்படும் தண்டனை மறக்
திருச்சாழல் தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண்டேயன் வீடுநா ளணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன் பாடுதான் செல்லுமஞ்சிப் பாதமே சரணமென்னச் சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே ' ' mal 729 நாவு.65-1 அந்தணாள னுன் னடைக்கலம் புகுத அவனைக்காப்பது காரணமாக வந்த காலன் றனாருயிரதனை வவ்வினாய்க்கு எனத் தேவாரத்து வருவன காண்க . அந்தகன் என்பதற்கு உலகத் துக்குத் தீமைசெய்த அந்தகாசுரன் என உரைப்பாருமுளர் . அவர் மனகர் பூமன் சிரம் கண்டி அந்தகன் கோவல் புரம் அதிகை மாமன் றியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர் காமன் குறுக்கை யான் கடவூர் இந்தக் காசினியில் தேமன்னு கொன்றையுந் திங்களும் சூடினன் சேவகமே கருத்து தனிப்பாடல் என்பதனைக் காட்டித் தங்கொள்கையைச் சாதிப்பாராயினும் இங்கே தண்டிக்கப்பட்டவர்கள் வானவர்கள் என்பது ' சயமன்றோ வானவர் க்கு என்பதனாற் பெறப்படுதலின் அந்தகாசுரன் எனவுரைத்தல் ஈண்டைக்குப் பொருந்தாதென்க . 55 சந்திரன் தக்கன் இறைவனை இகழ்ந்து செய்த யாகத்துக்குச் செனறு அவிப்பாகம் உண்ட குற்றத்தால் வீரபத்திரக்கடவுளால் தேய்ப்புண்டான் . சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வி யினில் ' ( அம்மானை 15 ) என வருதல் காண்க . இங்கே வயிரவக்கட வுள் செயலையும் வீரபத்திரக்கடவுள் செயலையும் அயனை ... சந்தி ரனை வடுச்செய்தான் என இறைவன் செயலாகக் கூறியமை அவர் கள் இறைவனின் வேறல்லர் என்பது பற்றியாகும் . வயனம் - வழி ' ' வானம் பெறுவீர் அவ்வானவராலே ( திருமந் 107 ) என்பது காண்க . வயனங்கள் என்ற பன்மையால் வழி வழியாக வென உரைக்கப்பட்டது . மாயா வடு -அழியாத தழும்பு தாழ்குழ லாய் என்ற விளியை தாழ்குழலாய் ஏடீ என இயைத்துத் தாழ்ந்த கூந் தலையுடைய தோழி எனப் பொருள் கொள்க . டீ- என்றவிளியின் ஆற்றலால் இஃதென்னை என்னும் வினா வருவித்துரைக்கப்படும் . நயனங்கள் மூன்றுடைய நாயகன் - மூன்று திருக்கண் களையுடைய சிவபெருமான் . ' ' நயனங்கள் மூன்றுடைய நந்தி என்றார் திருமந்திரத் தும் . 511 நாயகன் தண்டித்தால் அயன் முதலிய வானவர்க்குச் சயமுண்டா மாறு யாங்ஙனமெனில் இறைவனாற் செய்யப்படும் தண்டனை மறக்