திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "சந்திரனைத் திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந் தெச்சன் தலைகொண்டான் காண், இந்திரனைந் தோள் முரிவித் தருள் செய்தான் காண்" நாவு. 265-9 732 எனத் தேவாரத்தும் "மிறை புரியுந் தக்கனார் வேள் வியகத்திமையவர்தம் மேனி முற்றும் குறைபடுத்துத் துகைத்துழக்கிச் சவட்டியபின் இரங்கியருள் கொடுக்க வல்லார் தழுவக்.67 எனக் காஞ்சிப்புராணத்தும் வருவனவற்றாலுமறிக. எச்சன் - யாககர்த்தா, எச்சம் - யாகம். நான்காமடியில் எச்சன் என்றது வேள்வி இயற்றுவோனாகிய தக்கனைக் குறித்தது. தண்டிக்கப் பட்டும் தீமை முழுதும் தீராமையின் தக்கனுக்கு அவன் தலையை நல் காது ஆட்டின் தலையை நல்கியமையின் "எச்சனுக்கு மிகைத்தலை மற் றருளினன்". என்றார். ஆட்டின் தலையை விதிக்குத் தலையாக் கூட்டிய வாபாடி உந்தீபற" என உந்தியாரிலும் வருதலுங் காண்க. எச்சன் என்பது யாகத்திற்கு அதிதேவதையாக நியமிக்கப்பட்ட தேவனைக் குறியாதோவெனின் தக்கனுக்கு மிகைத்தலை கொடுக்கப்பட்டமையால் அவனைக் குறியா தென்க. ஆகவே எச்சன் தொக்கன வந்தவர் தம்மைத் தொலைத் தருளி யருள் கொடுத்து எனக் கூறப்பட்டவருள் அடங்குவன் என்க. (21) இதன்கண் ''தொக்கன வந்தவர் தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்தங், கெச்சனுக்கு மிகைத்தலை மற்றருளினன்" என்பதனால் சிவனுடைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதரு தல் காண்க. 5 260 அலரவனும் மாலவனும் அறியாமே யழலுருவாய் நிலமுதற்கீ ழண்டமுற நின்றதுதா னென்னேடீ நில முதற்கீ ழண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தா லாங்காரந் தளிரார்காண் சாழலோ. ப- ரை. ஏடீ - தோழியே, அலரவனும் மாலவனும் அறியாமே. தாமரைமலரிலிருக்கின்ற பிரமனும் திருமாலும் முடியும் அடியும் தேடி அறியாவண்ணம், அழல் உரு ஆய் - அக்கினிப் பிழம்பு வடிவமாய். நில முதல் கீழ் அண்டம் உற நின்றது தான் என்ன - நில முதலாகக் கீழே பாதாளம் வரையும் மேலே அண்ட முகடு வரையும் நின்றது யாது காரணத்தாலெனின், நிலமுதல் கீழ் அண்டம் உற நின்றிலனேல்
திருவாசக ஆராய்ச்சியுரை சந்திரனைத் திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந் தெச்சன் தலைகொண்டான் காண் இந்திரனைந் தோள் முரிவித் தருள் செய்தான் காண் நாவு . 265-9 732 எனத் தேவாரத்தும் மிறை புரியுந் தக்கனார் வேள் வியகத்திமையவர்தம் மேனி முற்றும் குறைபடுத்துத் துகைத்துழக்கிச் சவட்டியபின் இரங்கியருள் கொடுக்க வல்லார் தழுவக் .67 எனக் காஞ்சிப்புராணத்தும் வருவனவற்றாலுமறிக . எச்சன் - யாககர்த்தா எச்சம் - யாகம் . நான்காமடியில் எச்சன் என்றது வேள்வி இயற்றுவோனாகிய தக்கனைக் குறித்தது . தண்டிக்கப் பட்டும் தீமை முழுதும் தீராமையின் தக்கனுக்கு அவன் தலையை நல் காது ஆட்டின் தலையை நல்கியமையின் எச்சனுக்கு மிகைத்தலை மற் றருளினன் . என்றார் . ஆட்டின் தலையை விதிக்குத் தலையாக் கூட்டிய வாபாடி உந்தீபற என உந்தியாரிலும் வருதலுங் காண்க . எச்சன் என்பது யாகத்திற்கு அதிதேவதையாக நியமிக்கப்பட்ட தேவனைக் குறியாதோவெனின் தக்கனுக்கு மிகைத்தலை கொடுக்கப்பட்டமையால் அவனைக் குறியா தென்க . ஆகவே எச்சன் தொக்கன வந்தவர் தம்மைத் தொலைத் தருளி யருள் கொடுத்து எனக் கூறப்பட்டவருள் அடங்குவன் என்க . ( 21 ) இதன்கண் ' ' தொக்கன வந்தவர் தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்தங் கெச்சனுக்கு மிகைத்தலை மற்றருளினன் என்பதனால் சிவனுடைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதரு தல் காண்க . 5 260 அலரவனும் மாலவனும் அறியாமே யழலுருவாய் நிலமுதற்கீ ழண்டமுற நின்றதுதா னென்னேடீ நில முதற்கீ ழண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தா லாங்காரந் தளிரார்காண் சாழலோ . ப- ரை . ஏடீ - தோழியே அலரவனும் மாலவனும் அறியாமே . தாமரைமலரிலிருக்கின்ற பிரமனும் திருமாலும் முடியும் அடியும் தேடி அறியாவண்ணம் அழல் உரு ஆய் - அக்கினிப் பிழம்பு வடிவமாய் . நில முதல் கீழ் அண்டம் உற நின்றது தான் என்ன - நில முதலாகக் கீழே பாதாளம் வரையும் மேலே அண்ட முகடு வரையும் நின்றது யாது காரணத்தாலெனின் நிலமுதல் கீழ் அண்டம் உற நின்றிலனேல்