திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருச்சாழல் பேதாய் என்றது 'பெண்பாலுகந்தான் பெரும்பித்தன்' என இறைவனை இகழ்ந்த புத்தனைக் குறித்தது. யோகெய்தி விண்பால் வீடு வர் என மாறிக் கூட்டுக. யோகு - யோகம். "அங்கியல் யோகுதன்னை யழிப்பான் சென்றணைந்து' (தே. சுந். 99-9 ) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க. விடுவர் என்றது வீடுவர் என முதனீண்டது. 739 இதன் கண் உலகியல்நெறியும் வீட்டியல் நெறியும் எக்காலத்தும் உளவாதற் பொருட்டே இறைவன் பெண்பாலுகந்தான் என்பது போதருதலின் சிவனுடைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 264 தானந்த மில்லான் தனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள் காண் சாழலோ. ப-ரை. ஏடீ - தோழீ! தான் அந்தம் இல்லாதான் - தான் ஒரு போதும் அழிவில்லாத இறைவன், தனை அடைந்த நாயேனை - தன்னைச் சேர்ந்த இழிவுடைய என்னை, ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான் காண் - பேரின்பப் பெருக்கிலே முழுகும்படி செய்தான். இஃதென்னை யெனின், ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள் - நம்மைப் பேரின்பப் பெருக்கிலே முழுகச்செய்த அவ்விறைவன் திருவடிகள் வான் உந்து தேவர்கட்கு ஓர் வான்பொருள் சாழலோ - வானுலகிற் செலுத்தப்பட்டு வாழும் தேவர்கட்கும் கிடைத்தற்கரிய ஒப்பற்ற பெரிய பொருளாகும் என்று அறிக என்று சாழல் கொட்டுவோமாக. COEADIO ஏடீதான் அந்தமில்லாத இறைவன் தனை அடைந்த இழிவுடைய என்னை ஆனந்தவெள்ளத்தில் முழுகும்படி செய்தான். இஃதென்னை யெனின், நம்மை ஆனந்த வெள்ளத்தில் முழுகும்படி செய்த அவ்விறை திருவடிகள் வானுலகில் உயர்ந்த தேவர்கட்கும் கிடைத்தற் கரிய ஒப்பற்ற பெரும் பொருளாகும் என்று அறிக என்று சாழல் கொட்டுவோம் என்பதாம். வன் தான் என்பது அந்தமில்லாதான் தான் ஒருவனே என்பதை உணர்த்தி நின்றது. "தானந்தமில்லாத் தலைவன்' (1832) எனத் திருமந்திரத்தும் வருதல் காண்க. ''ஆதி குணமொன்று மில்லான் அந்தமிலான்'' (குயில் 1) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமை யுங் காண்க சிவபெருமான் தானே ஆனந்தத் தேனாயிருந்து முத்தர் களைத் தமது ஆனந்த வெள்ளத்தில் அழுத்தி உய்விக்கும் இயல்பு நோக்கி 'நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான்" என்றார். ஆனந்த வெள்ளத் தழுந்தலாவது சிவானந்த பரபோக நிலையில்
திருச்சாழல் பேதாய் என்றது ' பெண்பாலுகந்தான் பெரும்பித்தன் ' என இறைவனை இகழ்ந்த புத்தனைக் குறித்தது . யோகெய்தி விண்பால் வீடு வர் என மாறிக் கூட்டுக . யோகு - யோகம் . அங்கியல் யோகுதன்னை யழிப்பான் சென்றணைந்து ' ( தே . சுந் . 99-9 ) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க . விடுவர் என்றது வீடுவர் என முதனீண்டது . 739 இதன் கண் உலகியல்நெறியும் வீட்டியல் நெறியும் எக்காலத்தும் உளவாதற் பொருட்டே இறைவன் பெண்பாலுகந்தான் என்பது போதருதலின் சிவனுடைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 264 தானந்த மில்லான் தனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள் காண் சாழலோ . - ரை . ஏடீ - தோழீ ! தான் அந்தம் இல்லாதான் - தான் ஒரு போதும் அழிவில்லாத இறைவன் தனை அடைந்த நாயேனை - தன்னைச் சேர்ந்த இழிவுடைய என்னை ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான் காண் - பேரின்பப் பெருக்கிலே முழுகும்படி செய்தான் . இஃதென்னை யெனின் ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள் - நம்மைப் பேரின்பப் பெருக்கிலே முழுகச்செய்த அவ்விறைவன் திருவடிகள் வான் உந்து தேவர்கட்கு ஓர் வான்பொருள் சாழலோ - வானுலகிற் செலுத்தப்பட்டு வாழும் தேவர்கட்கும் கிடைத்தற்கரிய ஒப்பற்ற பெரிய பொருளாகும் என்று அறிக என்று சாழல் கொட்டுவோமாக . COEADIO ஏடீதான் அந்தமில்லாத இறைவன் தனை அடைந்த இழிவுடைய என்னை ஆனந்தவெள்ளத்தில் முழுகும்படி செய்தான் . இஃதென்னை யெனின் நம்மை ஆனந்த வெள்ளத்தில் முழுகும்படி செய்த அவ்விறை திருவடிகள் வானுலகில் உயர்ந்த தேவர்கட்கும் கிடைத்தற் கரிய ஒப்பற்ற பெரும் பொருளாகும் என்று அறிக என்று சாழல் கொட்டுவோம் என்பதாம் . வன் தான் என்பது அந்தமில்லாதான் தான் ஒருவனே என்பதை உணர்த்தி நின்றது . தானந்தமில்லாத் தலைவன் ' ( 1832 ) எனத் திருமந்திரத்தும் வருதல் காண்க . ' ' ஆதி குணமொன்று மில்லான் அந்தமிலான் ' ' ( குயில் 1 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமை யுங் காண்க சிவபெருமான் தானே ஆனந்தத் தேனாயிருந்து முத்தர் களைத் தமது ஆனந்த வெள்ளத்தில் அழுத்தி உய்விக்கும் இயல்பு நோக்கி ' நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் என்றார் . ஆனந்த வெள்ளத் தழுந்தலாவது சிவானந்த பரபோக நிலையில்