திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

744 திருவாசக ஆராய்ச்சியுரை னாலாய பதுமைபோன்றவளும் ஒளிபொருந்திய நெற்றியை யுடைய வளுமாகிய அழகுமிக்க உமையம்மையை, உலகு அறிய தீ வேட்டான் என்னுமது என் - உலகினர் அறியும் வண்ணம் ஓமத் தீ முன்னர் இறை வன் திருமணஞ் செய்தான் என்று கூறுவது அவனது இறைமைக் குணத்திற்கு இயையுமோவெனில், உலகு அறிய தீ வேளாது ஒழிந்த னன் ஏல் - உலகினர் அறியும் வண்ணம் தீ வேட்டுத் திருமணஞ் செய்யா தொழிந்தனனாயின், அனைத்து உலகும் - எல்லா உலகங்களும், கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும் - நூல்களிற் கூறிய எல் லாப் பொருள்களும் நிலைதடுமாறும், அங்ஙனம் நிலைதடுமாறாமைப் பொருட்டு உலகு உயிர்களுக்குக் காரணகர்த்தாவாகிய இறைவன் தீ வேட்டான் என்று சாழல் கொட்டுவோம். ஏடீ, மலையரையன் மகளாகிய உமையம்மையை உலகினர் அறி யும் வண்ணம் இறைவன் திருமணஞ் செய்தான் என்று கூறுவது என்னையெனில், உலகினர் அறியத் தீ வேளாதொழிந்தனனேல் எல்லா உலகங்களும் கலை நவின்ற எல்லாப் பொருள்களும் நிலை தடுமாறும். அங்ஙனமாகாமைப் பொருட்டு இறைவன் தீ வேட்கவேண்டியதா யிற்று என்று சாழல் கொட்டுவோம் என்பதாம். மலையரையன் பொற்பாவை இமயமலையரசனின் பொற் பாவை போன்றவள். "மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்* (சுந். 46 - 9) எனத் தேவாரத்து வருதல் காண்க. அரை யன் - அரசன். பெண் திருவைவேட்டான் - உமையம்மையைத் திரு மணஞ்செய்தான். "குரும்பைமலர்க் குழலி கொண்ட தவங் கண்டு குறிப்பினொடுஞ் சென்றவள் தன் குணத்தினை நன்கறிந்து விரும்பு வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த விண்ணவர்கோன் கண் ணுதலோன்" (சுந். 16 - 1) எனத் தேவாரத்து வருதலுங் காண்க. முழுமுதலிறைவன் பொதுமக்கள் போலத் தீ முன்னர் ஒரு பெண்ணை மணஞ் செய்து கொள்வது முறையாகுமோ என்ற வினா வுக்கு உலகு உயிர்களுக்கெல்லாம் காரணகர்த்தாவாகிய இறைவன் இவ்வுலகில் தோன்றியவுயிர்களுக்குப் போகமோட்சங்களைக் கொடுத் தருளும் பொருட்டு இறைவன் போகி போலாகவும் யோகி போலாக வும் இருந்தருளுவானாதலின் உமையம்மையைத் திருமணஞ் செய்தமை முறையாமென்க. கலை நவின்ற பொருள்கள் - நூல்களிற் கூறப்பட்ட ஒழுக்க நெறி கள். அவ்வொழுக்க நெறிகள் இல்லறம் துறவறம் என இருவகைப் படும். அவற்றுள் ஒன்று மாத்திரம் நிலைபெறுதல் இயலாதாகும். ஆதலின் அவ்விருவகை அறமும் என்றும் நிலைபெறும் பொருட்டு இறைவன் போகியாயும் யோகியாயும் அமைந்திருத்தல் இன்றியமை யாததாகும்.
744 திருவாசக ஆராய்ச்சியுரை னாலாய பதுமைபோன்றவளும் ஒளிபொருந்திய நெற்றியை யுடைய வளுமாகிய அழகுமிக்க உமையம்மையை உலகு அறிய தீ வேட்டான் என்னுமது என் - உலகினர் அறியும் வண்ணம் ஓமத் தீ முன்னர் இறை வன் திருமணஞ் செய்தான் என்று கூறுவது அவனது இறைமைக் குணத்திற்கு இயையுமோவெனில் உலகு அறிய தீ வேளாது ஒழிந்த னன் ஏல் - உலகினர் அறியும் வண்ணம் தீ வேட்டுத் திருமணஞ் செய்யா தொழிந்தனனாயின் அனைத்து உலகும் - எல்லா உலகங்களும் கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும் - நூல்களிற் கூறிய எல் லாப் பொருள்களும் நிலைதடுமாறும் அங்ஙனம் நிலைதடுமாறாமைப் பொருட்டு உலகு உயிர்களுக்குக் காரணகர்த்தாவாகிய இறைவன் தீ வேட்டான் என்று சாழல் கொட்டுவோம் . ஏடீ மலையரையன் மகளாகிய உமையம்மையை உலகினர் அறி யும் வண்ணம் இறைவன் திருமணஞ் செய்தான் என்று கூறுவது என்னையெனில் உலகினர் அறியத் தீ வேளாதொழிந்தனனேல் எல்லா உலகங்களும் கலை நவின்ற எல்லாப் பொருள்களும் நிலை தடுமாறும் . அங்ஙனமாகாமைப் பொருட்டு இறைவன் தீ வேட்கவேண்டியதா யிற்று என்று சாழல் கொட்டுவோம் என்பதாம் . மலையரையன் பொற்பாவை இமயமலையரசனின் பொற் பாவை போன்றவள் . மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன் * ( சுந் . 46 - 9 ) எனத் தேவாரத்து வருதல் காண்க . அரை யன் - அரசன் . பெண் திருவைவேட்டான் - உமையம்மையைத் திரு மணஞ்செய்தான் . குரும்பைமலர்க் குழலி கொண்ட தவங் கண்டு குறிப்பினொடுஞ் சென்றவள் தன் குணத்தினை நன்கறிந்து விரும்பு வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த விண்ணவர்கோன் கண் ணுதலோன் ( சுந் . 16 - 1 ) எனத் தேவாரத்து வருதலுங் காண்க . முழுமுதலிறைவன் பொதுமக்கள் போலத் தீ முன்னர் ஒரு பெண்ணை மணஞ் செய்து கொள்வது முறையாகுமோ என்ற வினா வுக்கு உலகு உயிர்களுக்கெல்லாம் காரணகர்த்தாவாகிய இறைவன் இவ்வுலகில் தோன்றியவுயிர்களுக்குப் போகமோட்சங்களைக் கொடுத் தருளும் பொருட்டு இறைவன் போகி போலாகவும் யோகி போலாக வும் இருந்தருளுவானாதலின் உமையம்மையைத் திருமணஞ் செய்தமை முறையாமென்க . கலை நவின்ற பொருள்கள் - நூல்களிற் கூறப்பட்ட ஒழுக்க நெறி கள் . அவ்வொழுக்க நெறிகள் இல்லறம் துறவறம் என இருவகைப் படும் . அவற்றுள் ஒன்று மாத்திரம் நிலைபெறுதல் இயலாதாகும் . ஆதலின் அவ்விருவகை அறமும் என்றும் நிலைபெறும் பொருட்டு இறைவன் போகியாயும் யோகியாயும் அமைந்திருத்தல் இன்றியமை யாததாகும் .