திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருச்சாழல் போகியா யிருந் துயிர்க்குப் போகத்தைப் புரித லோரார் யோகியா யோக முத்தி யுதவுத எதுவு மோரார் வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார் ஊகிய மூட ரெல்லாம் உம்பரின் ஒருவன் என்பர் (சூத். 1 செ.50) எனச் சிவஞான சித்தியாரில் வருதலுங் காண்க. இவற்றால் எல்லா உலகங்களிலும் உயிர்களிலும் வியாபகமாய் உடனாயும் வேறாயும் நிற் கும் இறைவனின் இயற்கைப்படியே உலகம் இயலுமென்பது துணி யப்படும். 745 இதன்கண், கலைநவின்ற பொய்தீரொழுக்க நெறிகள் தலை தடுமா றிப் போகாமைப் பொருட்டே "பெண்திருவை உலகறியத் தீவேட் டான்" என்பதனால் சிவனுடைய காருணியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. . 268 தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் நம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது வென்னேடீ தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. 13 ப - ரை. ஏடீ தோழீ, தேன் புக்க தண்பணை சூழ்தில்லை சிற் றம்பலவன் - தேன் பாய்கின்ற குளிர்ந்த மருதநிலம் சூழ்ந்த தில்லைச் சிற்றம்பலமுடையான், தான் புக்கு நட்டம் பயிலும் அது என் -தான் திருவாலங்காட்டிற்சென்று ஊர்த்துவதாண்டவஞ் செய்தமை என்னை யெனில், தான் புக்கு நட்டம் பயின்றிலனேல் - தான் திருவாலங்காட் டிற் சென்று ஊர்த்துவதாண்டவஞ் செய்திலனாயின், தரணி எல்லாம் ஊன்புக்கவேல் காளிக்கு ஊட்டாம் சாழலோ - பூவுலகத்து உயிர்க ளெல்லாம் புலால் தோய்ந்த சூலவேற்படையையுடைய காளி என் னும் தெய்வத்திற்கு உணவாகி விடும்; அங்ஙனமாகாமல் உலகினைக் காக்குமாறு ஊர்த்துவ தாண்டவஞ் செய்து அவள் செருக்கை அடக் கினான் என்று சாழல் கொட்டுவோம். ஏடீ, தண் பணை சூழ்ந்த தில்லைச் சிற்றம்பலமுடையான் தான் திருவாலங்காட்டிற் புக்கு ஊர்த்துவதாண்டவம் செய்தமை என்னை யெனில், தான் திருவாலங்காட்டிற் சென்று ஊர்த்துவ தாண்டவஞ் செய்திலனாயின் தரணியிலுள்ள உயிர்களெல்லாம் காளிக்கு உண வாய்விடும். அங்ஙனமாகாமல் உலகினைக் காக்குமாறு ஊர்த்துவ தாண்டவஞ்செய்து அவள் செருக்கை அடக்கினான் என்று சாழல் கொட்டுவோமாக என்பதாம். புகுதல் - ஈண்டுப் பாய்தல் என்னும் பொருளது, தண்பணை மருதநிலம், நடம் - நட்டம் என ஒற்று விரிந்தது. காளி அசுரரைக்
திருச்சாழல் போகியா யிருந் துயிர்க்குப் போகத்தைப் புரித லோரார் யோகியா யோக முத்தி யுதவுத எதுவு மோரார் வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார் ஊகிய மூட ரெல்லாம் உம்பரின் ஒருவன் என்பர் ( சூத் . 1 செ .50 ) எனச் சிவஞான சித்தியாரில் வருதலுங் காண்க . இவற்றால் எல்லா உலகங்களிலும் உயிர்களிலும் வியாபகமாய் உடனாயும் வேறாயும் நிற் கும் இறைவனின் இயற்கைப்படியே உலகம் இயலுமென்பது துணி யப்படும் . 745 இதன்கண் கலைநவின்ற பொய்தீரொழுக்க நெறிகள் தலை தடுமா றிப் போகாமைப் பொருட்டே பெண்திருவை உலகறியத் தீவேட் டான் என்பதனால் சிவனுடைய காருணியம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . . 268 தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் நம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது வென்னேடீ தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ . 13 - ரை . ஏடீ தோழீ தேன் புக்க தண்பணை சூழ்தில்லை சிற் றம்பலவன் - தேன் பாய்கின்ற குளிர்ந்த மருதநிலம் சூழ்ந்த தில்லைச் சிற்றம்பலமுடையான் தான் புக்கு நட்டம் பயிலும் அது என் -தான் திருவாலங்காட்டிற்சென்று ஊர்த்துவதாண்டவஞ் செய்தமை என்னை யெனில் தான் புக்கு நட்டம் பயின்றிலனேல் - தான் திருவாலங்காட் டிற் சென்று ஊர்த்துவதாண்டவஞ் செய்திலனாயின் தரணி எல்லாம் ஊன்புக்கவேல் காளிக்கு ஊட்டாம் சாழலோ - பூவுலகத்து உயிர்க ளெல்லாம் புலால் தோய்ந்த சூலவேற்படையையுடைய காளி என் னும் தெய்வத்திற்கு உணவாகி விடும் ; அங்ஙனமாகாமல் உலகினைக் காக்குமாறு ஊர்த்துவ தாண்டவஞ் செய்து அவள் செருக்கை அடக் கினான் என்று சாழல் கொட்டுவோம் . ஏடீ தண் பணை சூழ்ந்த தில்லைச் சிற்றம்பலமுடையான் தான் திருவாலங்காட்டிற் புக்கு ஊர்த்துவதாண்டவம் செய்தமை என்னை யெனில் தான் திருவாலங்காட்டிற் சென்று ஊர்த்துவ தாண்டவஞ் செய்திலனாயின் தரணியிலுள்ள உயிர்களெல்லாம் காளிக்கு உண வாய்விடும் . அங்ஙனமாகாமல் உலகினைக் காக்குமாறு ஊர்த்துவ தாண்டவஞ்செய்து அவள் செருக்கை அடக்கினான் என்று சாழல் கொட்டுவோமாக என்பதாம் . புகுதல் - ஈண்டுப் பாய்தல் என்னும் பொருளது தண்பணை மருதநிலம் நடம் - நட்டம் என ஒற்று விரிந்தது . காளி அசுரரைக்