திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருச்சாழல் ஏடீ, புலித்தோலை ஆடையாகவுடைய எம்பெருமான் ஆலகால விடத்தை ஆரமுதாக உட்கொண்ட சாமர்த்தியத்தை எனக்கு அறி யும்படி சொல் எனின், எம்பெருமான் ஏது உடுத்து எதனை உணவா கக்கொண்டாலும் தம் பெருமையைத் தான் அறிந்து கொள்ளாத தன்மையையுடையவன் என்று சாழல் கொட்டுவோம் என்பதாம். அம்பரம் - ஆடை, "அம்பரந் திசையா நக்கனாகுமோ" (கந்த; ததீசி - 4) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. புள்ளித்தோல் என்றது புள்ளி பொருந்திய புலித்தோலை. "புள்ளிகொண்ட புலியுரி யாடையும்" என் அப்பரடிகள் அருளியமையும் (தே. 168-2) காண்க, ஆரமுதம் - உண்ணும் உணவு. சதுர்-திறமை. "எம்பெருமா னுண்ட சதுர் எனக்கறிய இயம்பேடீ" என்பதனால் புள்ளித்தோல் எம் பெருமானுக்கு அடையாகக் கொள்ளப்பட்டது. அங்ஙனமானாலும் புள்ளித்தோலை உடுத்தாலும் நஞ்சை உண்டாலும் என்னை? அவனது அளவில் ஆற்றலை அவனும் அறியான் என்றலின், சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய நாம் அறிந்து கூறுமாறு என்னை என விடையிறுத்த வாறு. இதனால் அருள்வழி நின்று அவன் இயல்பினை அனுபூதியால் அறியலாமன்றி நூன்முகத்தாலும் உண்முகத்தாலும் அறியமுடியாது என்றபடி. 755 "ஞானந் தானுரு வாகிய நாயகன் இயல்பை யானும் நீயுமாய் இசைத்துமென் றாலஃதெளிதோ மோனந்தீர்கலா முனிவருந் தேற்றிலர் முழுதுந் தானுங் காண்கிலன் இன்னமுந் தன்பெருந்தலைமை'' 274 (சூரனமைச்.128) எனக் கந்தபுராணத்து வருதலுங் காண்க. இதன்கண், "தம்பெருமை தானறியாத் தன்மையன்" என்பதனால் சிவனுடைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. அருந்தவருக் காலின்க் முறமுதலா நான்கினையும் இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ அருந்தவருக் கறமுதனான் கன்றருளிச் செய்திலனேல் திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. 19 ப - ரை. ஏடீ - பெண்ணே, அருந்தவருக்கு ஆலின்கீழ் இருந்து அறம் முதல் ஆம் நான்கினையும் - அரிய தவத்தினையுடைய சனகாதி யர் நால்வர்க்கும் உபதேசிக்கும் பொருட்டு ஆலவிருட்ச நீழலில் தென் முகத் தெய்வப் பரமாசாரியராய் எழுந்தருளியிருந்து அறமுதலாகக் கூறப்படும் உறுதிப்பொருள் நான்கினையும், அவர்க்கு அருளும் அது எனக்கு அறிய இயம்பு - அம் முனிவர்களுக்கு உபதேசித்தருளிய கார
திருச்சாழல் ஏடீ புலித்தோலை ஆடையாகவுடைய எம்பெருமான் ஆலகால விடத்தை ஆரமுதாக உட்கொண்ட சாமர்த்தியத்தை எனக்கு அறி யும்படி சொல் எனின் எம்பெருமான் ஏது உடுத்து எதனை உணவா கக்கொண்டாலும் தம் பெருமையைத் தான் அறிந்து கொள்ளாத தன்மையையுடையவன் என்று சாழல் கொட்டுவோம் என்பதாம் . அம்பரம் - ஆடை அம்பரந் திசையா நக்கனாகுமோ ( கந்த ; ததீசி - 4 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . புள்ளித்தோல் என்றது புள்ளி பொருந்திய புலித்தோலை . புள்ளிகொண்ட புலியுரி யாடையும் என் அப்பரடிகள் அருளியமையும் ( தே . 168-2 ) காண்க ஆரமுதம் - உண்ணும் உணவு . சதுர் - திறமை . எம்பெருமா னுண்ட சதுர் எனக்கறிய இயம்பேடீ என்பதனால் புள்ளித்தோல் எம் பெருமானுக்கு அடையாகக் கொள்ளப்பட்டது . அங்ஙனமானாலும் புள்ளித்தோலை உடுத்தாலும் நஞ்சை உண்டாலும் என்னை ? அவனது அளவில் ஆற்றலை அவனும் அறியான் என்றலின் சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய நாம் அறிந்து கூறுமாறு என்னை என விடையிறுத்த வாறு . இதனால் அருள்வழி நின்று அவன் இயல்பினை அனுபூதியால் அறியலாமன்றி நூன்முகத்தாலும் உண்முகத்தாலும் அறியமுடியாது என்றபடி . 755 ஞானந் தானுரு வாகிய நாயகன் இயல்பை யானும் நீயுமாய் இசைத்துமென் றாலஃதெளிதோ மோனந்தீர்கலா முனிவருந் தேற்றிலர் முழுதுந் தானுங் காண்கிலன் இன்னமுந் தன்பெருந்தலைமை ' ' 274 ( சூரனமைச் .128 ) எனக் கந்தபுராணத்து வருதலுங் காண்க . இதன்கண் தம்பெருமை தானறியாத் தன்மையன் என்பதனால் சிவனுடைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . அருந்தவருக் காலின்க் முறமுதலா நான்கினையும் இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ அருந்தவருக் கறமுதனான் கன்றருளிச் செய்திலனேல் திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ . 19 - ரை . ஏடீ - பெண்ணே அருந்தவருக்கு ஆலின்கீழ் இருந்து அறம் முதல் ஆம் நான்கினையும் - அரிய தவத்தினையுடைய சனகாதி யர் நால்வர்க்கும் உபதேசிக்கும் பொருட்டு ஆலவிருட்ச நீழலில் தென் முகத் தெய்வப் பரமாசாரியராய் எழுந்தருளியிருந்து அறமுதலாகக் கூறப்படும் உறுதிப்பொருள் நான்கினையும் அவர்க்கு அருளும் அது எனக்கு அறிய இயம்பு - அம் முனிவர்களுக்கு உபதேசித்தருளிய கார