திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

758 திருவாசக ஆராய்ச்சியுரை லாம். திருவடி என்றலைமேல் வைத்தலும் என்றது இறைவன் பரமா சாரியனாகத் தன் திருவடியை என்தலைமேல் வைத்துத் திருவடி தீட்சை செய்தவுடனே என்றவாறு. 'சீரார் திருவடி யென்றலைமேல் வைத்த பிரான்" (பூவல்லி. 10) "திருவடி யென்றலைமேல் நட்டமையால்" (குலாப்.8) 'என் மாத்தலைக் கழல்வைத்து" (திருக்கோவை. 338) என வருவன காண்க. துணையான என்றது எனக்கு உலகவாழ்வில் துணையெனக் கருதிநின்ற என்றவாறு. சுற்றங்கள் அத்தனையும் என் றது சுற்றம் முதலாகிய தொடர்புகள் எல்லாவற்றையும் என்றவாறு. துறந்தொழிந்தேன் என்றது பற்றறத் துறந்தொழிந்தேன் என்றபடி. அணை - அணைக்கட்டு. புனற்றில்லை புனலையுடையதில்லை. 'சிறைவான் புனற்றில்லை" (20) எனத் திருக்கோவையாரிலும் வரு தல் காண்க. அம்பலத்தே ஆடுகின்ற - தில்லையம்பலத்தின் கண்ணே திருநிருத்தஞ் செய்கின்ற. "தில்லைச் சிற்றம்பலத்துப் பயில்கின்ற கூத் தன்', 'பூங்கனையார் புனற் றென் புலியூர் புரிந் தம்பலத்து, ளாங் கெனை யாண்டு கொண்டாடும் பிரான்'' (திருக்கோவை 18; 19) என வருவன காண்க. விப் புணையாளன் என்ற ஏகதேசவுருவகத்தால் பிறவிப்பெருங்கடலைக் கடப்பதற்குத் தெப்பம் போன்றவன் என உரைக்கப்பட்டது. "பிற பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்" (குறள் 10) என்பது ஈண்டுக் கருதத்தக்கது. பூவல்லி - அல்லி மலர். கொய்வோம் என்றது கொய்யாமோ என நின்றது. ஆடுவாம் என்பது ஆடாம் என நின்றது போல. இதன்கண், "திருவடியென்றலைமேல் வைத்தலுமே துணையான சுற் றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்" என்றதனால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 276.எந்தையெந்தாய் சுற்றமற்று மெல்லா மென்னுடைய பந்த மறுத்தென்னை யாண்டுகொண்ட பாண்டிப் பிரான் அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த மொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ. 1 Bata ப - ரை. எந்தை எந்தாய் சுற்றம் மற்றும் என்னுடைய பந்தம் எல்லாம் அறுத்து - எனது தந்தை எனது தாய் எனது உறவினர் முத லாயினார் மேலும் மற்றுமுள்ள பொருள்களின் மேலுமுள்ள என்னு டைய பற்றுக்கள் எல்லாவற்றையும் தொலைத்தருளி, என்னை ஆண்டு கொண்ட பாண்டிப் பிரான் - என்னை ஆட்கொண்டருளிய பாண்டிப் பிரானாகிய, அந்த இடை மருதில் ஆனந்ததேன் இருந்த பொந்தை பரவி அந்தத் திருவிடை மருதூரின் கண் ஆனந்தமாகிய தேன்
758 திருவாசக ஆராய்ச்சியுரை லாம் . திருவடி என்றலைமேல் வைத்தலும் என்றது இறைவன் பரமா சாரியனாகத் தன் திருவடியை என்தலைமேல் வைத்துத் திருவடி தீட்சை செய்தவுடனே என்றவாறு . ' சீரார் திருவடி யென்றலைமேல் வைத்த பிரான் ( பூவல்லி . 10 ) திருவடி யென்றலைமேல் நட்டமையால் ( குலாப் .8 ) ' என் மாத்தலைக் கழல்வைத்து ( திருக்கோவை . 338 ) என வருவன காண்க . துணையான என்றது எனக்கு உலகவாழ்வில் துணையெனக் கருதிநின்ற என்றவாறு . சுற்றங்கள் அத்தனையும் என் றது சுற்றம் முதலாகிய தொடர்புகள் எல்லாவற்றையும் என்றவாறு . துறந்தொழிந்தேன் என்றது பற்றறத் துறந்தொழிந்தேன் என்றபடி . அணை - அணைக்கட்டு . புனற்றில்லை புனலையுடையதில்லை . ' சிறைவான் புனற்றில்லை ( 20 ) எனத் திருக்கோவையாரிலும் வரு தல் காண்க . அம்பலத்தே ஆடுகின்ற - தில்லையம்பலத்தின் கண்ணே திருநிருத்தஞ் செய்கின்ற . தில்லைச் சிற்றம்பலத்துப் பயில்கின்ற கூத் தன் ' ' பூங்கனையார் புனற் றென் புலியூர் புரிந் தம்பலத்து ளாங் கெனை யாண்டு கொண்டாடும் பிரான் ' ' ( திருக்கோவை 18 ; 19 ) என வருவன காண்க . விப் புணையாளன் என்ற ஏகதேசவுருவகத்தால் பிறவிப்பெருங்கடலைக் கடப்பதற்குத் தெப்பம் போன்றவன் என உரைக்கப்பட்டது . பிற பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார் ( குறள் 10 ) என்பது ஈண்டுக் கருதத்தக்கது . பூவல்லி - அல்லி மலர் . கொய்வோம் என்றது கொய்யாமோ என நின்றது . ஆடுவாம் என்பது ஆடாம் என நின்றது போல . இதன்கண் திருவடியென்றலைமேல் வைத்தலுமே துணையான சுற் றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் என்றதனால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 276.எந்தையெந்தாய் சுற்றமற்று மெல்லா மென்னுடைய பந்த மறுத்தென்னை யாண்டுகொண்ட பாண்டிப் பிரான் அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த மொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ . 1 Bata - ரை . எந்தை எந்தாய் சுற்றம் மற்றும் என்னுடைய பந்தம் எல்லாம் அறுத்து - எனது தந்தை எனது தாய் எனது உறவினர் முத லாயினார் மேலும் மற்றுமுள்ள பொருள்களின் மேலுமுள்ள என்னு டைய பற்றுக்கள் எல்லாவற்றையும் தொலைத்தருளி என்னை ஆண்டு கொண்ட பாண்டிப் பிரான் - என்னை ஆட்கொண்டருளிய பாண்டிப் பிரானாகிய அந்த இடை மருதில் ஆனந்ததேன் இருந்த பொந்தை பரவி அந்தத் திருவிடை மருதூரின் கண் ஆனந்தமாகிய தேன்