திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

759 பொருந்திய பொந்துபோல்வானைத் துதித்துக்கொண்டு, பூ அல்லி கொய்யாமோ - அல்லிமலர்களைப் பறிப்போமாக. திருப்பூவல்லி எந்தை எந்தாய் சுற்றத்தார் முதலாயினார் மேலும் மற்றுமுள்ள பொருள்களின் மேலுமுள்ள என்னுடைய பந்தமெல்லாம் அறுத்து என்னை ஆட்கொண்டருளிய பாண்டிப்பிரானாகிய, அந்தத் திருவிடை மருதூரின் கண் ஆனந்தத் தேன் பொருந்திய பொந்து போல்வானைத் துதித்துக்கொண்டு அல்லி மலர்களைப் பறிப்போமாக என்பதாம். எந்தை எந்தாய் சுற்றம் மற்றும் என்னுடைய பந்தம் எல்லாம் அறுத்து என மாறிக்கூட்டுக. பந்தமறுத்தாண்டு கொண்ட என்றது பரிபக்குவ நிலையில் பந்தமறுத்து ஆண்டுகொண்ட என்றவாறு. 'பழ மலம் பற்றறுத்தாண்டவன்" (பாண்டிப். 8) என அடிகள் அருளியமை யுங் காண்க. பந்தம் - பற்று. பாண்டிப்பிரான் - பாண்டி நாட்டுத் தலைவன். பாண்டிப் பிரானாகிய பொந்து போல்வானை என இயைத் துப் பொருள்கொள்க. அந்த என்னும் பண்டறிசுட்டு திருவிடை மரு தூரின் பெருமையை உணர்த்தி நின்றது. இடைமருது - திருவிடை மருதூர். 'கோன்றங் கிடைமருது" (திருப்பொன். 2) என வருதல் காண்க. இடைமருதில் தேன் இருந்த பொந்து என்க. இறைவன் அருளும் இன்பம் தேன் போன்றமையின் இறைவனைத் தேன் இருந்த பொந்தாகக் கொள்க. இதன்கண் "பந்தமறுத்து" என்றமையால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 2 277. நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத் தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான் மாயப் பிறப்பறுத் தாண்டானென் வல்வினையின் வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ. - ப -ரை. நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருள்படுத்து- நாயினும் கீழாகிய நம்மையும் மதிக்கத்தக்க ஒரு பொருளாகக் கொண்டு, தாயில் பெரிதும் தயாவுடைய தம்பெருமான் - தாயினும் மிகவும் இரக்கத் தினையுடைய தம்முடைய தலைவன், மாய பிறப்பு அறுத்து ஆண்டான் - மயக்கத்தினையுடைய பிறப்பினை அறுத்து ஆட் கொண்டருளினன், என் வல்வினையின் வாயில்பொடி அட்டி -அதனால் எனது வலிய சஞ்சித ஆகாமிய வினைகளின் வாயிலே பொடியாகிய மண்ணைப் போகட்டுப் பாடிக்கொண்டு, பூ அல்லி கொய்யாமோ- அல்லி மலர்களைப் பறிப்போமாக. நாயினும் கடைப்பட்ட நம்மையும் மதிக்கத்தக்க ஒரு பொருளா கக் கொண்டு தாயினும் பெரிதும் இரக்கத்தினையுடைய தம்பெருமான்
759 பொருந்திய பொந்துபோல்வானைத் துதித்துக்கொண்டு பூ அல்லி கொய்யாமோ - அல்லிமலர்களைப் பறிப்போமாக . திருப்பூவல்லி எந்தை எந்தாய் சுற்றத்தார் முதலாயினார் மேலும் மற்றுமுள்ள பொருள்களின் மேலுமுள்ள என்னுடைய பந்தமெல்லாம் அறுத்து என்னை ஆட்கொண்டருளிய பாண்டிப்பிரானாகிய அந்தத் திருவிடை மருதூரின் கண் ஆனந்தத் தேன் பொருந்திய பொந்து போல்வானைத் துதித்துக்கொண்டு அல்லி மலர்களைப் பறிப்போமாக என்பதாம் . எந்தை எந்தாய் சுற்றம் மற்றும் என்னுடைய பந்தம் எல்லாம் அறுத்து என மாறிக்கூட்டுக . பந்தமறுத்தாண்டு கொண்ட என்றது பரிபக்குவ நிலையில் பந்தமறுத்து ஆண்டுகொண்ட என்றவாறு . ' பழ மலம் பற்றறுத்தாண்டவன் ( பாண்டிப் . 8 ) என அடிகள் அருளியமை யுங் காண்க . பந்தம் - பற்று . பாண்டிப்பிரான் - பாண்டி நாட்டுத் தலைவன் . பாண்டிப் பிரானாகிய பொந்து போல்வானை என இயைத் துப் பொருள்கொள்க . அந்த என்னும் பண்டறிசுட்டு திருவிடை மரு தூரின் பெருமையை உணர்த்தி நின்றது . இடைமருது - திருவிடை மருதூர் . ' கோன்றங் கிடைமருது ( திருப்பொன் . 2 ) என வருதல் காண்க . இடைமருதில் தேன் இருந்த பொந்து என்க . இறைவன் அருளும் இன்பம் தேன் போன்றமையின் இறைவனைத் தேன் இருந்த பொந்தாகக் கொள்க . இதன்கண் பந்தமறுத்து என்றமையால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 2 277. நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத் தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான் மாயப் பிறப்பறுத் தாண்டானென் வல்வினையின் வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ . - -ரை . நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருள்படுத்து நாயினும் கீழாகிய நம்மையும் மதிக்கத்தக்க ஒரு பொருளாகக் கொண்டு தாயில் பெரிதும் தயாவுடைய தம்பெருமான் - தாயினும் மிகவும் இரக்கத் தினையுடைய தம்முடைய தலைவன் மாய பிறப்பு அறுத்து ஆண்டான் - மயக்கத்தினையுடைய பிறப்பினை அறுத்து ஆட் கொண்டருளினன் என் வல்வினையின் வாயில்பொடி அட்டி -அதனால் எனது வலிய சஞ்சித ஆகாமிய வினைகளின் வாயிலே பொடியாகிய மண்ணைப் போகட்டுப் பாடிக்கொண்டு பூ அல்லி கொய்யாமோ அல்லி மலர்களைப் பறிப்போமாக . நாயினும் கடைப்பட்ட நம்மையும் மதிக்கத்தக்க ஒரு பொருளா கக் கொண்டு தாயினும் பெரிதும் இரக்கத்தினையுடைய தம்பெருமான்