திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை மாயப்பிறப்பு அறுத்து ஆட்கொண்டருளினன், அதனால் எனது வல் வினையின் வாயில் மண்ணைப் போகட்டுப் பாடிக்கொண்டு அல்லி மலர்களைப் பறிப்போமாக என்பதாம். 760 நாயிற் கடைப்பட்ட நம்மை என்பது அடிகள் தம்மைத்தாழ்த்திக் கூறியவாறு."நாயிற் கடைப்பட்ட நம்மை” (பொற். 8) "நாயிற் கடையாம் நாயேனை" (குழைத்த. 8) "நாயினுங் கடையாய வெங் கட்டனேனையும்” (திருக்கழுக். 2) என அடிகள் பிறவிடங்களிலும் அருளியவாறு காண்க. நம்மையுமோர் பொருட்படுத்தல் - குற்ற முடையோமையும் கோதாட்டிக் கொள்ளல். இது இறைவன் கருணை மிகுதியால் நிகழ்வது. பொருட்படுத்து அறுத்து ஆண்டான் என முடிக்க. தாயிற் பெரிதும் தயாவுடைய - தாயினும் மிகவும் இரக்கத் தினையுடைய. "தாயிற் சிறந்த தயாவான தத்துவனே" (சிவபுரா. 61) "தாயினும் சாலப் பரிந்து'' (பிடித்த. 9)என வருவன காண்க. மாயப்பிற பிறப்பு மயக்கத்தினையுடைய பிறப்பு. 'மாயப் பிறப் பென்னும் கடலாந் துன்பத்திடை'' (நாவு.275-5) எனத் தேவாரத் தும் வருதல் காண்க. பிறப்பறுத்தாண்டான் - பிறப்பினை அறுத்து ஆட்கொண்டருளினன், "பிறப்பறுத் தாண்டு கொண்ட கூத்தனை'' (பொற். 15) 'மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டாள்வாய்" ''என்பாலைப் பிறப்பறுத்து... ஆட்கொண்டது'' (ஏசறவு. 2; 7) 'இப்பிறப்பில் அழுந்தாவகை யெனையாண்டவன்" (திருக்கோவை 124) என அடிகள் பிறவிடங்களிலும் அருளியமை காண்க. பிறப்பறுத்தாண்டான் என்ப தில் பிறப்பறுத்தலே ஆளுதல். நம்மை என் என்பன ஒருமை பன்மை மயக்கம். வல்வினை என்றது உயிரினைப் பற்றித் தொடரும் வலியையுடைய சஞ்சித ஆகாமிய வினைகளை, வாயிற் பொடியட்டி எனத் தம்செயல் போலக் கூறினும் இறைவனது நயனதீக்கையால் சஞ்சிதமும் இறைவ னருள் இடைவிடாது கிடைக்கப்பெறுதலால் ஆகாமியமும் நீங்கின என்பதே கருத்தாகக் கொள்க. அட்டுதல் - அள்ளிப்போடுதல். அட் டித் தரப்பணியே எனத் தேவாரத்தும் வருதல் காண்க. இதன்கண்,'மாயப்பிறப்பறுத்து" என்றதனால் மாயாளிசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 78. பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே எண்பட்ட தக்கன் அருக்கனெச்சன் இந்துவனல் விண்பட்ட பூதப் படைவீர பத்திரராற் புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொப்பாமோ. ப - ரை. பண்பட்ட தில்லை பதிக்கு அரசை பரவாதே - செம்மை பொருந்திய தில்லையம்பதிக்கு வேந்தனாகிய கூத்தப்பிரானைத் துதியா
திருவாசக ஆராய்ச்சியுரை மாயப்பிறப்பு அறுத்து ஆட்கொண்டருளினன் அதனால் எனது வல் வினையின் வாயில் மண்ணைப் போகட்டுப் பாடிக்கொண்டு அல்லி மலர்களைப் பறிப்போமாக என்பதாம் . 760 நாயிற் கடைப்பட்ட நம்மை என்பது அடிகள் தம்மைத்தாழ்த்திக் கூறியவாறு . நாயிற் கடைப்பட்ட நம்மை ( பொற் . 8 ) நாயிற் கடையாம் நாயேனை ( குழைத்த . 8 ) நாயினுங் கடையாய வெங் கட்டனேனையும் ( திருக்கழுக் . 2 ) என அடிகள் பிறவிடங்களிலும் அருளியவாறு காண்க . நம்மையுமோர் பொருட்படுத்தல் - குற்ற முடையோமையும் கோதாட்டிக் கொள்ளல் . இது இறைவன் கருணை மிகுதியால் நிகழ்வது . பொருட்படுத்து அறுத்து ஆண்டான் என முடிக்க . தாயிற் பெரிதும் தயாவுடைய - தாயினும் மிகவும் இரக்கத் தினையுடைய . தாயிற் சிறந்த தயாவான தத்துவனே ( சிவபுரா . 61 ) தாயினும் சாலப் பரிந்து ' ' ( பிடித்த . 9 ) என வருவன காண்க . மாயப்பிற பிறப்பு மயக்கத்தினையுடைய பிறப்பு . ' மாயப் பிறப் பென்னும் கடலாந் துன்பத்திடை ' ' ( நாவு.275-5 ) எனத் தேவாரத் தும் வருதல் காண்க . பிறப்பறுத்தாண்டான் - பிறப்பினை அறுத்து ஆட்கொண்டருளினன் பிறப்பறுத் தாண்டு கொண்ட கூத்தனை ' ' ( பொற் . 15 ) ' மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டாள்வாய் ' ' என்பாலைப் பிறப்பறுத்து ... ஆட்கொண்டது ' ' ( ஏசறவு . 2 ; 7 ) ' இப்பிறப்பில் அழுந்தாவகை யெனையாண்டவன் ( திருக்கோவை 124 ) என அடிகள் பிறவிடங்களிலும் அருளியமை காண்க . பிறப்பறுத்தாண்டான் என்ப தில் பிறப்பறுத்தலே ஆளுதல் . நம்மை என் என்பன ஒருமை பன்மை மயக்கம் . வல்வினை என்றது உயிரினைப் பற்றித் தொடரும் வலியையுடைய சஞ்சித ஆகாமிய வினைகளை வாயிற் பொடியட்டி எனத் தம்செயல் போலக் கூறினும் இறைவனது நயனதீக்கையால் சஞ்சிதமும் இறைவ னருள் இடைவிடாது கிடைக்கப்பெறுதலால் ஆகாமியமும் நீங்கின என்பதே கருத்தாகக் கொள்க . அட்டுதல் - அள்ளிப்போடுதல் . அட் டித் தரப்பணியே எனத் தேவாரத்தும் வருதல் காண்க . இதன்கண் ' மாயப்பிறப்பறுத்து என்றதனால் மாயாளிசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 78. பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே எண்பட்ட தக்கன் அருக்கனெச்சன் இந்துவனல் விண்பட்ட பூதப் படைவீர பத்திரராற் புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொப்பாமோ . - ரை . பண்பட்ட தில்லை பதிக்கு அரசை பரவாதே - செம்மை பொருந்திய தில்லையம்பதிக்கு வேந்தனாகிய கூத்தப்பிரானைத் துதியா