திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

762 திருவாசக ஆராய்ச்சியுரை 279. தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான் ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே நானாடி யாடிநின் றோலமிட நடம்பயிலும் வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ. உலகர் ப - ரை. தேன் ஆடுகொன்றை சடைக்கு அணிந்த சிவபெரு மான் - சடையில் தேன் அசைகின்ற கொன்றை மலர் மாலையைச் அணிந்த சிவபெருமான்; ஊன் ஆடி நாடிவந்து - ஊனுடம்பையு டைய மானிடவுருக்கொண்டு என்னைத்தேடி வலியவந்து, முன்னே உள் புகுந்தான் - உலகினர் காணுமாறு அவர் முன்னிலையில் ஆட்கொண்டு என்மனத்திற் புகுந்து அருளினான். நான் நாடி ஆடி நின்று ஓலம் இட - அதனை உணராது நான் அவனைத் தேடிக் கூத்தா டிக் காணப்பெறாது நின்று அடைக்கலம் வேண்டி ஓலமிட,நடம் பயி லும் வான் நாடர் கோவுக்கே - என் இருதய கமலத்தை விண்ணாட்ட வர்க்குத் தலைவனாகிய அவ்ளிறைவனுக்குச் சாத்தும்பொருட்டு, பூ அல்லி கொய்யாமோ. - அல்லி மலர்களைப் பறிப்போமாக. சடையிலணிந்த சிவபெருமான் கொன்றை மலர் மாலையைச் மானிடவுருவொடு என்னைத் தேடி வலியவந்து, உலகினர் முன்னிலை யில் ஆட்கொண்டு என் உள்ளத்திற் புகுந்தருளினன். அதனை உண ராது நான் அவனைத் தேடிக் கூத்தாடிக் காணப்பெறாது ஓலமிட, என் இருதய கமலத்தில் நடம் பயிலும் விண்ணவர் தலைவனாகிய சிவ பெருமானுக்குச் சாத்தும்பொருட்டு அல்லி மலர்களைப் பறிப்போ மாக என்பதாம். தேன் ஆடு கொன்றை - தேனசைகின்ற கொன்றை, "தேனார் மலர்கொன்றை” (அம் 16) "தேனக மாமலர்க்கொன்றை"(பொற்.17) என வருவன காண்க. இனி,தேனாடு கொன்றை என்பதற்கு, தேனினம் நாடிவந்து மொய்க்கின்ற கொன்றை எனினுமாம். தேன் - தேனினம். "தேனும் வண்டு மிசைப் புலம்ப" (சீவக. 349). கொன்றை அதன் மல ருக்காதவின் முதலாகுபெயர். கொன்றைப் பூமாலை சிவபெருமா னுக்கு அடையாளமாலை. இதனை "கொய்ம்மலர்க் கொன்றை மாலைக் குளிர்மதிக் கண்ணியாற்கு" (சீவக. 208) என்புழி, "மாலை, அடையா ளப் பூ' என நச்சினார்க்கினியர் உரைத்தலானுமறிக. சிவபெருமான் கொன்றையைச் சடையில் அணிந்தமை, "தாதாடு கொன்றைச்சடை யான்" "கொங்குலவு கொன்றைச் சடையான்" (பொன்னூசல் 6, 9) எனத் திருவாசகத்தும், 'கமழ்கொன்றை துன்று மலங்கலைச் சூழ்ந்த சிற்றம்பலத்தான்" (24) எனத் திருக்கோவையாரினும் வருவனவற்றாலு மறிக, ஊன் ஆடி-ஊனுடம்பைக் கொண்டு என்றது மனிதவுருவொடு என்றவாறு.நாடுதல் - தேடுதல், "துறந்தானை, நாடித் தருகிற்பாயா யின்" (கலி.144-49) இறைவன் தேடி வலிய வந்து அருள்புரிந்த கரு
762 திருவாசக ஆராய்ச்சியுரை 279. தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான் ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே நானாடி யாடிநின் றோலமிட நடம்பயிலும் வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ . உலகர் - ரை . தேன் ஆடுகொன்றை சடைக்கு அணிந்த சிவபெரு மான் - சடையில் தேன் அசைகின்ற கொன்றை மலர் மாலையைச் அணிந்த சிவபெருமான் ; ஊன் ஆடி நாடிவந்து - ஊனுடம்பையு டைய மானிடவுருக்கொண்டு என்னைத்தேடி வலியவந்து முன்னே உள் புகுந்தான் - உலகினர் காணுமாறு அவர் முன்னிலையில் ஆட்கொண்டு என்மனத்திற் புகுந்து அருளினான் . நான் நாடி ஆடி நின்று ஓலம் இட - அதனை உணராது நான் அவனைத் தேடிக் கூத்தா டிக் காணப்பெறாது நின்று அடைக்கலம் வேண்டி ஓலமிட நடம் பயி லும் வான் நாடர் கோவுக்கே - என் இருதய கமலத்தை விண்ணாட்ட வர்க்குத் தலைவனாகிய அவ்ளிறைவனுக்குச் சாத்தும்பொருட்டு பூ அல்லி கொய்யாமோ . - அல்லி மலர்களைப் பறிப்போமாக . சடையிலணிந்த சிவபெருமான் கொன்றை மலர் மாலையைச் மானிடவுருவொடு என்னைத் தேடி வலியவந்து உலகினர் முன்னிலை யில் ஆட்கொண்டு என் உள்ளத்திற் புகுந்தருளினன் . அதனை உண ராது நான் அவனைத் தேடிக் கூத்தாடிக் காணப்பெறாது ஓலமிட என் இருதய கமலத்தில் நடம் பயிலும் விண்ணவர் தலைவனாகிய சிவ பெருமானுக்குச் சாத்தும்பொருட்டு அல்லி மலர்களைப் பறிப்போ மாக என்பதாம் . தேன் ஆடு கொன்றை - தேனசைகின்ற கொன்றை தேனார் மலர்கொன்றை ( அம் 16 ) தேனக மாமலர்க்கொன்றை ( பொற் .17 ) என வருவன காண்க . இனி தேனாடு கொன்றை என்பதற்கு தேனினம் நாடிவந்து மொய்க்கின்ற கொன்றை எனினுமாம் . தேன் - தேனினம் . தேனும் வண்டு மிசைப் புலம்ப ( சீவக . 349 ) . கொன்றை அதன் மல ருக்காதவின் முதலாகுபெயர் . கொன்றைப் பூமாலை சிவபெருமா னுக்கு அடையாளமாலை . இதனை கொய்ம்மலர்க் கொன்றை மாலைக் குளிர்மதிக் கண்ணியாற்கு ( சீவக . 208 ) என்புழி மாலை அடையா ளப் பூ ' என நச்சினார்க்கினியர் உரைத்தலானுமறிக . சிவபெருமான் கொன்றையைச் சடையில் அணிந்தமை தாதாடு கொன்றைச்சடை யான் கொங்குலவு கொன்றைச் சடையான் ( பொன்னூசல் 6 9 ) எனத் திருவாசகத்தும் ' கமழ்கொன்றை துன்று மலங்கலைச் சூழ்ந்த சிற்றம்பலத்தான் ( 24 ) எனத் திருக்கோவையாரினும் வருவனவற்றாலு மறிக ஊன் ஆடி - ஊனுடம்பைக் கொண்டு என்றது மனிதவுருவொடு என்றவாறு.நாடுதல் - தேடுதல் துறந்தானை நாடித் தருகிற்பாயா யின் ( கலி.144-49 ) இறைவன் தேடி வலிய வந்து அருள்புரிந்த கரு