திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
281.
திருப்பூவல்லி
வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்
திணங்கத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான்
அணங்கொ டணிதில்லை மம்பலத்தே யாடுகின்ற
குணங்கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.
ப . ரை. எம்பெருமான் - எங்கள் பெருமானாகிய இறைவன்.
வார்கழல் வணங்க தலைவைத்து - நீண்ட வீரக்கழலணிந்த திரு
வடியை வணங்கி உய்யும் பொருட்டுத் தலையாகிய உறுப்பினை
அமைத்தருளி, வாழ்த்த வாய் வைத்து - அத்திருவடிகளை வாழ்த்தி
உய்யும் பொருட்டு வாயை அமைத்தருளி, இணங்க தன்
அடியார் கூட்டமும் வைத்து - சேர்ந்து பழகி உய்யும் பொருட்டுத்
தனது சிறந்த மெய்யடியார் கூட்டத்தினையும் அமைத்தருளி, அணங்
கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற தமது ஐந்தொழில்
நடத்திற்குக் கருமசாட்சியாக உமையம்மை காண அழகிய தில்
லைச் சிற்றம்பலத்தே ஆனந்தத் தாண்டவஞ் செய்கின்ற, குணம் கூர
பாடி - அருள் இயல்பினை மிகவும் பாடிக்கொண்டு, நாம் பூ அல்லி
கொய்யாமோ -நாம் அல்லிமலர்களைப் பறிப்போமாக.
765
-
எம்பெருமான் தன் திருவடியை வணங்கி உய்யும்பொருட்டுத்
தலையையும், அத்திருவடியை வாழ்த்தி உய்யும் பொருட்டு வாயையும்
அமைத்தருளி, இணங்கி உய்யும்பொருட்டுத் தன் சீரடியார் கூட்டத்
தையும் அமைத்தருளி, உமையம்மை காணத் தில்லைச்சிற்றம்பலத்தே
ஆனந்தத்தாண்டவஞ் செய்கின்ற அருள் இயல்பினைப் பாடிக்கொண்டு
நாம் அல்லிமலர்களைப் பறிப்போமாக என்பதாம்.
'வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனை''
என அப்பரடிகள் அருளியமையுங் காண்க.
வார்கழல் வணங்கத் தலைவைத்து, வார்கழல் வாழ்த்த வாய்
வைத்து என வார்கழல் என்பதனை ஈரிடத்தும் கூட்டுக. வணங்கத்
தலைவைத்து என மெய்யின் செயலும், வார்கழல் வாழ்த்த வாய்
வைத்து என வாக்கின் செயலும் கூறப்படலால் நினைத்தலாகிய மனத்
தின் செயலும் உபலக்கணத்தாற் கொள்ளப்படும்.
(தே. 203-7)
சீர் அடியார் - மெய்யடியார்கள், "சிலம்பணி கொண்ட செஞ்சீ
ரடிபங்கன்றன் சீரடியார், குலம்பணி கொள்ள வெனைக்கொடுத்
தோன்" (54) என்னும் திருக்கோவையார் உரையில் சீரடியார் என்ப
தற்கு மெய்யடியார் எனப் பேராசிரியர் உரைத்தமையுங் காண்க,
மெய்யடியாரைச் சீரடியார் என்றல் ''உத்தரகோச மங்கைக்கரசின்
சீரடியார்" (நீத். 48) "தன் சீரடியார் பொன்னடிக்கே குறிசெய்து'
55
281
.
திருப்பூவல்லி
வணங்கத்
தலைவைத்து
வார்கழல்வாய்
வாழ்த்தவைத்
திணங்கத்தன்
சீரடியார்
கூட்டமும்வைத்
தெம்பெருமான்
அணங்கொ
டணிதில்லை
மம்பலத்தே
யாடுகின்ற
குணங்கூரப்
பாடிநாம்
பூவல்லி
கொய்யாமோ
.
ப
.
ரை
.
எம்பெருமான்
-
எங்கள்
பெருமானாகிய
இறைவன்
.
வார்கழல்
வணங்க
தலைவைத்து
-
நீண்ட
வீரக்கழலணிந்த
திரு
வடியை
வணங்கி
உய்யும்
பொருட்டுத்
தலையாகிய
உறுப்பினை
அமைத்தருளி
வாழ்த்த
வாய்
வைத்து
-
அத்திருவடிகளை
வாழ்த்தி
உய்யும்
பொருட்டு
வாயை
அமைத்தருளி
இணங்க
தன்
அடியார்
கூட்டமும்
வைத்து
-
சேர்ந்து
பழகி
உய்யும்
பொருட்டுத்
தனது
சிறந்த
மெய்யடியார்
கூட்டத்தினையும்
அமைத்தருளி
அணங்
கொடு
அணிதில்லை
அம்பலத்தே
ஆடுகின்ற
தமது
ஐந்தொழில்
நடத்திற்குக்
கருமசாட்சியாக
உமையம்மை
காண
அழகிய
தில்
லைச்
சிற்றம்பலத்தே
ஆனந்தத்
தாண்டவஞ்
செய்கின்ற
குணம்
கூர
பாடி
-
அருள்
இயல்பினை
மிகவும்
பாடிக்கொண்டு
நாம்
பூ
அல்லி
கொய்யாமோ
-நாம்
அல்லிமலர்களைப்
பறிப்போமாக
.
765
-
எம்பெருமான்
தன்
திருவடியை
வணங்கி
உய்யும்பொருட்டுத்
தலையையும்
அத்திருவடியை
வாழ்த்தி
உய்யும்
பொருட்டு
வாயையும்
அமைத்தருளி
இணங்கி
உய்யும்பொருட்டுத்
தன்
சீரடியார்
கூட்டத்
தையும்
அமைத்தருளி
உமையம்மை
காணத்
தில்லைச்சிற்றம்பலத்தே
ஆனந்தத்தாண்டவஞ்
செய்கின்ற
அருள்
இயல்பினைப்
பாடிக்கொண்டு
நாம்
அல்லிமலர்களைப்
பறிப்போமாக
என்பதாம்
.
'
வாழ்த்த
வாயும்
நினைக்க
மடநெஞ்சும்
தாழ்த்தச்
சென்னியுந்
தந்த
தலைவனை
'
'
என
அப்பரடிகள்
அருளியமையுங்
காண்க
.
வார்கழல்
வணங்கத்
தலைவைத்து
வார்கழல்
வாழ்த்த
வாய்
வைத்து
என
வார்கழல்
என்பதனை
ஈரிடத்தும்
கூட்டுக
.
வணங்கத்
தலைவைத்து
என
மெய்யின்
செயலும்
வார்கழல்
வாழ்த்த
வாய்
வைத்து
என
வாக்கின்
செயலும்
கூறப்படலால்
நினைத்தலாகிய
மனத்
தின்
செயலும்
உபலக்கணத்தாற்
கொள்ளப்படும்
.
(
தே
.
203-7
)
சீர்
அடியார்
-
மெய்யடியார்கள்
சிலம்பணி
கொண்ட
செஞ்சீ
ரடிபங்கன்றன்
சீரடியார்
குலம்பணி
கொள்ள
வெனைக்கொடுத்
தோன்
(
54
)
என்னும்
திருக்கோவையார்
உரையில்
சீரடியார்
என்ப
தற்கு
மெய்யடியார்
எனப்
பேராசிரியர்
உரைத்தமையுங்
காண்க
மெய்யடியாரைச்
சீரடியார்
என்றல்
'
'
உத்தரகோச
மங்கைக்கரசின்
சீரடியார்
(
நீத்
.
48
)
தன்
சீரடியார்
பொன்னடிக்கே
குறிசெய்து
'
55