திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை (பூவல்லி 8) என வருவனவற்றினுங் காண்க. சீரடியார் கூட்டத்தின் இணக்கம் வாசனாமல நீக்கத்திற்கு இன்றியமையாததாகும். 766 "செம்மலர் நோன்றாள் சேரலொட்டா அம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ" எனச் சிவஞானபோதத்து வருதலுங் காண்க. அணங்கு என்றது உமையம்மையை. "அணங்கின் மணவாளா... திருப்பெருந்துறையுறை சிவபெருமானே " (திருப்பள்ளி. 6, என வருதல் காண்க. இறைவன் அணங்கொடு தில்லையம்பலத்தே யாடுதல் தனது ஐந்தொழிற்கூத்தினை இறைவி சாட்சியாகக்கண்டு திருவருள் செய் யும் பொருட்டாகும். "கூடிய விலயஞ் சதிபிழையாமைக் கொடியிடை யுமையவள் காண ஆடிய அழகா அருமறைப் பொருளே யங்கணா'' (சுந். 69-2) எனத் தேவாரத்தும், ''எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை அவ்வா றருட்செய்வன் ஆதியரன்தானும் ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ் செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்" எனத் திருமந்திரத்தும், "பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென நோயுண் மருந்து தாயுண் டாங்கு மன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்ப வையமீன் றளித்த தெய்வக் கற்பின் அருள்சூற் கொண்ட வையரித் தடங்கட் டிருமாண் சாயற் றிருந்திழை காணச் சிற்சபை பொலியத் திருநடம் புரியும் அற்புதக் கூத்த" எனச் சிதம்பரமும்மணிக்கோவையினும் வருவன காண்க. (130) (2-14-21) இதன்கண் இறைவன் வார்கழலை வணங்குதலும் வாழ்த்துதலும் மெய்யடியார் கூட்டத்தைச் சேர்தலும் மாயாவிசய நீக்குதற்கு ஏது வாமாறு காண்க. 7 282. நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே குறிசெய்து கொண்டென்னை யாண்டபிரான் குணம்பரவி முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக் கிறிசெய்த வாபாடிப் பூவல்லி கொய்யாமோ,
திருவாசக ஆராய்ச்சியுரை ( பூவல்லி 8 ) என வருவனவற்றினுங் காண்க . சீரடியார் கூட்டத்தின் இணக்கம் வாசனாமல நீக்கத்திற்கு இன்றியமையாததாகும் . 766 செம்மலர் நோன்றாள் சேரலொட்டா அம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ எனச் சிவஞானபோதத்து வருதலுங் காண்க . அணங்கு என்றது உமையம்மையை . அணங்கின் மணவாளா ... திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ( திருப்பள்ளி . 6 என வருதல் காண்க . இறைவன் அணங்கொடு தில்லையம்பலத்தே யாடுதல் தனது ஐந்தொழிற்கூத்தினை இறைவி சாட்சியாகக்கண்டு திருவருள் செய் யும் பொருட்டாகும் . கூடிய விலயஞ் சதிபிழையாமைக் கொடியிடை யுமையவள் காண ஆடிய அழகா அருமறைப் பொருளே யங்கணா ' ' ( சுந் . 69-2 ) எனத் தேவாரத்தும் ' ' எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை அவ்வா றருட்செய்வன் ஆதியரன்தானும் ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ் செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம் எனத் திருமந்திரத்தும் பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென நோயுண் மருந்து தாயுண் டாங்கு மன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்ப வையமீன் றளித்த தெய்வக் கற்பின் அருள்சூற் கொண்ட வையரித் தடங்கட் டிருமாண் சாயற் றிருந்திழை காணச் சிற்சபை பொலியத் திருநடம் புரியும் அற்புதக் கூத்த எனச் சிதம்பரமும்மணிக்கோவையினும் வருவன காண்க . ( 130 ) ( 2-14-21 ) இதன்கண் இறைவன் வார்கழலை வணங்குதலும் வாழ்த்துதலும் மெய்யடியார் கூட்டத்தைச் சேர்தலும் மாயாவிசய நீக்குதற்கு ஏது வாமாறு காண்க . 7 282. நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே குறிசெய்து கொண்டென்னை யாண்டபிரான் குணம்பரவி முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக் கிறிசெய்த வாபாடிப் பூவல்லி கொய்யாமோ