திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

768 திருவாசக ஆராய்ச்சியுரை தாமரை மலர்களை என் மனத்திற் பொருந்த வைத்த பெருமையை யுடையான், எழில் சுடராய் - அழகிய ஒளி வடிவினனாய் எழுந்தருளி வந்து, கல் நார் உரித்து என்னை ஆண்டுகொண்டான் - கல்லில் நார் உரித்தாற்போல வன்னெஞ்சக் கள்வனேனை ஆட்கொண்டருளினன்; கழல் இணைகள் பொன் ஆன ஆறு பாடி - அவ்விறைவனது இரண்டு திருவடிகளும் பொன்போல எனக்குச் சிறந்த பயனைத் தந்த விதத் தினைப் பாடிக்கொண்டு. பூ அல்லி கொய்யாமோ -அல்லி மலர்களைப் பறிப்போமாக. பலநாட்களாக வாழ்த்தித் தொண்டு செய்தமையால், தன் திரு வடி மலரை என் மனத்திற் பொருந்த வைத்த பெரியோனாகிய சிவ பெருமான், அழகிய ஒளிவடிவினனாய் எழுந்தருளி வந்து கல்லில் நார் உரித்தாற்போல என்னை ஆட்கொண்டருளினன்; அவ்விறைவன் கழ லிணைகள் பொன்போலச் சிறந்த பயனைத் தந்தவிதத்தினைப் பாடிக் கொண்டு அல்லி மலர்களைப் பறிப்போமாக என்பதாம். பணி பரவல்-வாழ்த்தல். "பரவலும் புகழ்ச்சியும்" (தொல். பொருள் 82) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. பன்னாட் பரவிப் செய்யப் பாதமலர் என்னாகம் துன்னவைத்த என்றது அடிகள் பூர்வத் திற் பன்னெடுங்காலம் இயற்றிய தவத்தினால் தமக்கு இறைவன் அருள் செய்தமையைக் குறித்ததாகும். செய்ய என்னும் ஏதுப்பொருட்டு, பணிசெய்யத் துன்ன வைத்த என இயையும். ஆகம். மார்பு. அது ஆகுபெயராய் மனத்தை உணர்த்தியது. துன்னுதல்- பொருந்துதல். எச்சம் கல்நார் உரித்தென்னை ஆண்டுகொண்டு என்றது * கல்லை வில்லாக வளைத்த பயிற்சியானே கல்லிலே நார் உரித்தாற்போல இம்மையில் வன்நெஞ்சக் கள்வனேனைத் தன் கருணையினால் ஆண்டுகொண்டு என்ற வாறு. 'கன்னாருரித் தென்ன என்னையுந் தன் கருணையினால் பொன் னார் கழல்பணித் தாண்டபிரான்" தெள்ளேம் 9)என அடிகள் பிறி தோரிடத்து அருளியவாறுங் காண்க. இனி அடிமைகொண்டமையின் அருமை தோன்றக் ''கன்னாருரித்தென்னை யாண்டுகொண்டான்" என அருளினார் எனினுமாம். இதன்கண், ''கன்னாருரித்தென்னை யாண்டுகொண்டான்"என்றத னால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போ தருதல் 9 காண்க. + மலைவில்லாரென்பது மேருவை வில்லாக வுடையாரெனக் கொண்டு கல்லானிழலிலெழுந்தருளியிருந்து வீடுபேறும், மலையை வில் லாக வளைத்துப் பகைவரை வென்று போகமும் அளித்தருளியோ ரெனினுமமையும் - சிபஞானபாடியம் மங்கல வாழ்த்துரை.
768 திருவாசக ஆராய்ச்சியுரை தாமரை மலர்களை என் மனத்திற் பொருந்த வைத்த பெருமையை யுடையான் எழில் சுடராய் - அழகிய ஒளி வடிவினனாய் எழுந்தருளி வந்து கல் நார் உரித்து என்னை ஆண்டுகொண்டான் - கல்லில் நார் உரித்தாற்போல வன்னெஞ்சக் கள்வனேனை ஆட்கொண்டருளினன் ; கழல் இணைகள் பொன் ஆன ஆறு பாடி - அவ்விறைவனது இரண்டு திருவடிகளும் பொன்போல எனக்குச் சிறந்த பயனைத் தந்த விதத் தினைப் பாடிக்கொண்டு . பூ அல்லி கொய்யாமோ -அல்லி மலர்களைப் பறிப்போமாக . பலநாட்களாக வாழ்த்தித் தொண்டு செய்தமையால் தன் திரு வடி மலரை என் மனத்திற் பொருந்த வைத்த பெரியோனாகிய சிவ பெருமான் அழகிய ஒளிவடிவினனாய் எழுந்தருளி வந்து கல்லில் நார் உரித்தாற்போல என்னை ஆட்கொண்டருளினன் ; அவ்விறைவன் கழ லிணைகள் பொன்போலச் சிறந்த பயனைத் தந்தவிதத்தினைப் பாடிக் கொண்டு அல்லி மலர்களைப் பறிப்போமாக என்பதாம் . பணி பரவல் - வாழ்த்தல் . பரவலும் புகழ்ச்சியும் ( தொல் . பொருள் 82 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . பன்னாட் பரவிப் செய்யப் பாதமலர் என்னாகம் துன்னவைத்த என்றது அடிகள் பூர்வத் திற் பன்னெடுங்காலம் இயற்றிய தவத்தினால் தமக்கு இறைவன் அருள் செய்தமையைக் குறித்ததாகும் . செய்ய என்னும் ஏதுப்பொருட்டு பணிசெய்யத் துன்ன வைத்த என இயையும் . ஆகம் . மார்பு . அது ஆகுபெயராய் மனத்தை உணர்த்தியது . துன்னுதல் பொருந்துதல் . எச்சம் கல்நார் உரித்தென்னை ஆண்டுகொண்டு என்றது * கல்லை வில்லாக வளைத்த பயிற்சியானே கல்லிலே நார் உரித்தாற்போல இம்மையில் வன்நெஞ்சக் கள்வனேனைத் தன் கருணையினால் ஆண்டுகொண்டு என்ற வாறு . ' கன்னாருரித் தென்ன என்னையுந் தன் கருணையினால் பொன் னார் கழல்பணித் தாண்டபிரான் தெள்ளேம் 9 ) என அடிகள் பிறி தோரிடத்து அருளியவாறுங் காண்க . இனி அடிமைகொண்டமையின் அருமை தோன்றக் ' ' கன்னாருரித்தென்னை யாண்டுகொண்டான் என அருளினார் எனினுமாம் . இதன்கண் ' ' கன்னாருரித்தென்னை யாண்டுகொண்டான் என்றத னால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போ தருதல் 9 காண்க . + மலைவில்லாரென்பது மேருவை வில்லாக வுடையாரெனக் கொண்டு கல்லானிழலிலெழுந்தருளியிருந்து வீடுபேறும் மலையை வில் லாக வளைத்துப் பகைவரை வென்று போகமும் அளித்தருளியோ ரெனினுமமையும் - சிபஞானபாடியம் மங்கல வாழ்த்துரை .