திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பூவல்லி மான மகரந்தத்தையுடைய கொன்றைப் பூமாலையைப் பாடிக் கொண்டு, பூ அல்லி கொய்யாமோ - அல்லிமலர்களைக் கொய்வோ awiona aiding sou மாக. அன்று ஆலநிழற்கீழ் எழுந்தருளியிருந்து அரிய மறைகளின் உட் பொருளாகிய அறமுதலிய நான்கினையும் சனகாதியர் கட்கு உபதேசித் தருளி நாள்தோறும் தேவர்களும் முனிவர்களும் நின்று மன நிறை வுடன் துதிக்கின்ற திருவருள் நிறைந்த திருவடிகளையுடையவனாகிய சிவபெருமான் தரித்துள்ள கொன்றை மலர்மாலையைப் பாடிக்கொண்டு அல்லிமலர்களைக் கொய் வோமாக என்பதாம். பொன்னிறமான தாதையுடைய 773 அன்று - அந்நாளில்; பண்டைக்காலத்தில், ஆலநீழல் - திருக்கயி லாய மலையில் உண்டான ஆலமரத்தின் நீழல். அருமறைகள் தானருளி என்றது அரிய வேதத்தின் உட்பொருள்களாகிய அறமுதலிய நான் கினையும் சனகர் சனந்தனர் சனாதனர் சனற்குமாரர் என்னும் நான்கு முனிவர்கட்கும் அருளிச்செய்து என்றவாறு. (சாழல் 16) "நன்றாக நால்வர்க்கும் நான்மறையி னுட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ” அருந்தவருக் காலின் கீழ் அறமுதலா நான்கினையும் இருந்தவருக் கருளுமது எனக்கறிய வியம்பேடீ" அன்றாலின் கீழிருந்தங் கறஞ் சொன்னானை” (தே.நாவு.263-3) 'அன்றாலின் னிழற்கீழற நால்வர்க் கருள் புரிந்து'' (தே.சுந். 28-3) எனவும் வருவன காண்க. (சாழல்.20) அருளி என்னும் வினையை நிறைகழலோன் என்பதனோடு முடிக்க. இனி, அருளி என்பதனைப் பெயராகக்கொண்டு, அருளி கழலோன் புனை கொன்றை எனக்கூட்டி, அருள்செய்தவனும் கழலணிந்த திருவடிகளை யுடையவனுமாகிய இறைவன் புனைந்த கொன்றை என வுரைப்பினு மமையும். நன்றாக என்பதை அருளி என்பதற்கு விசேடணமாக்குக. நன்றாக...அறமுரைத்தான் சாழல்'(16) என வந்தமையுங் காண்க. வானவர் - தேவர். “நான்முகன் முதலா வானவர் தொழுதெழ" (போற்றி 1) . முனிவரி அகப்புறப் பற்றுக்களை முனிந்தவர். நிறை கழ லோன் புனை பொன் தாது கொன்றைபாடி என மாறிக் கூட்டிப் பொருஞரைக்க. 'சூழ்கொன்றைத் தார்பாடி" (திருவெம். 14) தேனக மாமலர்க் கொன்றைபாடி" “வட்டமலர்க் கொன்றை மாலை பாடி" (திருப்பொற். 27, 19) என வருவன காண்க. இதன்கண், "ஆலநிழற்கீழ் அருமறைகள் தானருளி...வானவர் மாமுனிவர் நாடோறும் நின்றார வேத்து நிறைகழலோன்" என்பத னால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க. 13
திருப்பூவல்லி மான மகரந்தத்தையுடைய கொன்றைப் பூமாலையைப் பாடிக் கொண்டு பூ அல்லி கொய்யாமோ - அல்லிமலர்களைக் கொய்வோ awiona aiding sou மாக . அன்று ஆலநிழற்கீழ் எழுந்தருளியிருந்து அரிய மறைகளின் உட் பொருளாகிய அறமுதலிய நான்கினையும் சனகாதியர் கட்கு உபதேசித் தருளி நாள்தோறும் தேவர்களும் முனிவர்களும் நின்று மன நிறை வுடன் துதிக்கின்ற திருவருள் நிறைந்த திருவடிகளையுடையவனாகிய சிவபெருமான் தரித்துள்ள கொன்றை மலர்மாலையைப் பாடிக்கொண்டு அல்லிமலர்களைக் கொய் வோமாக என்பதாம் . பொன்னிறமான தாதையுடைய 773 அன்று - அந்நாளில் ; பண்டைக்காலத்தில் ஆலநீழல் - திருக்கயி லாய மலையில் உண்டான ஆலமரத்தின் நீழல் . அருமறைகள் தானருளி என்றது அரிய வேதத்தின் உட்பொருள்களாகிய அறமுதலிய நான் கினையும் சனகர் சனந்தனர் சனாதனர் சனற்குமாரர் என்னும் நான்கு முனிவர்கட்கும் அருளிச்செய்து என்றவாறு . ( சாழல் 16 ) நன்றாக நால்வர்க்கும் நான்மறையி னுட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ அருந்தவருக் காலின் கீழ் அறமுதலா நான்கினையும் இருந்தவருக் கருளுமது எனக்கறிய வியம்பேடீ அன்றாலின் கீழிருந்தங் கறஞ் சொன்னானை ( தே.நாவு.263-3 ) ' அன்றாலின் னிழற்கீழற நால்வர்க் கருள் புரிந்து ' ' ( தே.சுந் . 28-3 ) எனவும் வருவன காண்க . ( சாழல் .20 ) அருளி என்னும் வினையை நிறைகழலோன் என்பதனோடு முடிக்க . இனி அருளி என்பதனைப் பெயராகக்கொண்டு அருளி கழலோன் புனை கொன்றை எனக்கூட்டி அருள்செய்தவனும் கழலணிந்த திருவடிகளை யுடையவனுமாகிய இறைவன் புனைந்த கொன்றை என வுரைப்பினு மமையும் . நன்றாக என்பதை அருளி என்பதற்கு விசேடணமாக்குக . நன்றாக ... அறமுரைத்தான் சாழல் ' ( 16 ) என வந்தமையுங் காண்க . வானவர் - தேவர் . நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ( போற்றி 1 ) . முனிவரி அகப்புறப் பற்றுக்களை முனிந்தவர் . நிறை கழ லோன் புனை பொன் தாது கொன்றைபாடி என மாறிக் கூட்டிப் பொருஞரைக்க . ' சூழ்கொன்றைத் தார்பாடி ( திருவெம் . 14 ) தேனக மாமலர்க் கொன்றைபாடி வட்டமலர்க் கொன்றை மாலை பாடி ( திருப்பொற் . 27 19 ) என வருவன காண்க . இதன்கண் ஆலநிழற்கீழ் அருமறைகள் தானருளி ... வானவர் மாமுனிவர் நாடோறும் நின்றார வேத்து நிறைகழலோன் என்பத னால் மாயாவிசய நீக்குதல் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க . 13