திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

774 288 திருவாசக ஆராய்ச்சியுரை படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவை யளித்திங் கிடயாகக் கொண்டிருந் தேகம்ப மேயபிரான் தடமார் மதிற்றில்லை யம்பலமே தானிடமா நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ. ப-ரை. என் உள்ளே படம் ஆக தன் இணை போது அவை அளித்து - எனது உள்ளமாகிய கிழியின் கண்ணே எழுதிய சித்திரம் போல நிலைபெறும்படி தனது திருவடி மலர்களைத் தந்தருளி, இங்கு இடம் ஆக கொண்டிருந்து - எனது உள்ளத்தையே இடமாக ஏற்றுக் கொண்டு எழுந்தருளியிருந்து, ஏகம்பம் மேய பிரான் - திருவேகம்பத் தில் வீற்றிருந்த இறைவன், தடம்ஆர் மதில் தில்லை அம்பலமே இடம் ஆ-அகற்சி பொருந்திய மதிலையுடைய தில்லையம்பலத்தையே சிறந்த இடமாகக் கொண்டு, நடம் ஆடும் ஆபாடி - திருக்கூத்து இயற்றும் வகையினைப் பாடிக்கொண்டு, பூ அல்லி கொய்யாமோ - அல்லி மலர் களைக் கொய்வோமாக. என் உள்ளமாகிய கிழியினிடத்து எழுதிய படம் போல நிலை பெறும்படி தனது திருவடி மலர்களைத் தந்தருளி என் உள்சாத்தையே இடமாகக் கொண்டிருந்து, திருவேகம்பத்தில் வீற்றிருந்த இறை வன், தில்லையம்பலத்தையே இடமாகக்கொண்டு திருக்கூத்து இயற்றும் விதத்தினைப் கொய்வோமாக அல்லிமலர்களைக் பாடிக்கொண்டு என்பதாம். படமாக என்ற ஏகதேச வுருவகத்தால் உள்ளே என்பதற்கு உள்ளமாகிய கிழியினிடத்து என உரைக்கப்பட்டது. 'உள்ளக் கிழியி னுருவெழுதி" (தே.நாவு.238-1) என வருதலுங் காண்க. படம்- சித்திரம். படம் புனைந் தெழுதிய வடிவிற் பங்கயத், தடம்பல தழீ இயது' (சீவக.1439) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. இணைப் போது என்றது இணைப்போது போன்ற திருவடிகளை. இங்கு என்றது உள்ளத்தை: இருந்து என்னும் எச்சம் நடமாடும் என்பதனோடு முடி யும். ஏசம்ப மேய பிரான் - திருவேகம்பத்தில் வீற்றிருந்த இறைவன். 'ஏகம்பத்தி லியல்பா யிருந்து" (கீர்த்தி. 77) "ஏகம்பத்துறை யெந் தாய் போற்றி" (போற்றி.151) என வருவன காண்க. தடமார் என்பது மதிலுக்கு விசேடணம். தடம் என்பதற்கு அகற்சியும் உயர் வும் கொள்க. மதிற்றில்லை - மதிலையுடையதில்லை. 'சிற்பந் திகழ்தரு திண்மதிற் றில்லை" (305) "கற்பா மதிற் றில்லை'' (310) எனத் திருக்கோவையாரில் வருவனவுங் காண்க. அம்பலமே தானிடமா என் பதை அம்பலந்தானே இடமா என இயைத்துப் பொருள் கொள்க. "இட மம்பலங் கொண்டவன்" (திருக்கோவை: 54) என வருதல்
774 288 திருவாசக ஆராய்ச்சியுரை படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவை யளித்திங் கிடயாகக் கொண்டிருந் தேகம்ப மேயபிரான் தடமார் மதிற்றில்லை யம்பலமே தானிடமா நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ . - ரை . என் உள்ளே படம் ஆக தன் இணை போது அவை அளித்து - எனது உள்ளமாகிய கிழியின் கண்ணே எழுதிய சித்திரம் போல நிலைபெறும்படி தனது திருவடி மலர்களைத் தந்தருளி இங்கு இடம் ஆக கொண்டிருந்து - எனது உள்ளத்தையே இடமாக ஏற்றுக் கொண்டு எழுந்தருளியிருந்து ஏகம்பம் மேய பிரான் - திருவேகம்பத் தில் வீற்றிருந்த இறைவன் தடம்ஆர் மதில் தில்லை அம்பலமே இடம் - அகற்சி பொருந்திய மதிலையுடைய தில்லையம்பலத்தையே சிறந்த இடமாகக் கொண்டு நடம் ஆடும் ஆபாடி - திருக்கூத்து இயற்றும் வகையினைப் பாடிக்கொண்டு பூ அல்லி கொய்யாமோ - அல்லி மலர் களைக் கொய்வோமாக . என் உள்ளமாகிய கிழியினிடத்து எழுதிய படம் போல நிலை பெறும்படி தனது திருவடி மலர்களைத் தந்தருளி என் உள்சாத்தையே இடமாகக் கொண்டிருந்து திருவேகம்பத்தில் வீற்றிருந்த இறை வன் தில்லையம்பலத்தையே இடமாகக்கொண்டு திருக்கூத்து இயற்றும் விதத்தினைப் கொய்வோமாக அல்லிமலர்களைக் பாடிக்கொண்டு என்பதாம் . படமாக என்ற ஏகதேச வுருவகத்தால் உள்ளே என்பதற்கு உள்ளமாகிய கிழியினிடத்து என உரைக்கப்பட்டது . ' உள்ளக் கிழியி னுருவெழுதி ( தே.நாவு.238-1 ) என வருதலுங் காண்க . படம் சித்திரம் . படம் புனைந் தெழுதிய வடிவிற் பங்கயத் தடம்பல தழீ இயது ' ( சீவக .1439 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . இணைப் போது என்றது இணைப்போது போன்ற திருவடிகளை . இங்கு என்றது உள்ளத்தை : இருந்து என்னும் எச்சம் நடமாடும் என்பதனோடு முடி யும் . ஏசம்ப மேய பிரான் - திருவேகம்பத்தில் வீற்றிருந்த இறைவன் . ' ஏகம்பத்தி லியல்பா யிருந்து ( கீர்த்தி . 77 ) ஏகம்பத்துறை யெந் தாய் போற்றி ( போற்றி .151 ) என வருவன காண்க . தடமார் என்பது மதிலுக்கு விசேடணம் . தடம் என்பதற்கு அகற்சியும் உயர் வும் கொள்க . மதிற்றில்லை - மதிலையுடையதில்லை . ' சிற்பந் திகழ்தரு திண்மதிற் றில்லை ( 305 ) கற்பா மதிற் றில்லை ' ' ( 310 ) எனத் திருக்கோவையாரில் வருவனவுங் காண்க . அம்பலமே தானிடமா என் பதை அம்பலந்தானே இடமா என இயைத்துப் பொருள் கொள்க . இட மம்பலங் கொண்டவன் ( திருக்கோவை : 54 ) என வருதல்